18 February 2011

இரண்டு சின்னஞ்சிறு கதைகள் - தர்க்கமும் தகவலும்

தலை தீபாவளி

மாமனார் வீட்டு மொட்டைமாடியில் சில்லிட்ட காற்றில் சிலிர்த்தபடி தண்ணீர் டாங்கின் தூணில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான் நீலமேகம். அதிகம் பேசாத புது மனைவி, அருகாமையில் விரல் கோர்த்து வெண்கலச் சிலை போல கிண்ணென்று நின்றிருந்தாள்.
அவளைப் பாலால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது முழு நிலவு. சட்டென ஒரு தருணத்தில் அவள் அம்மணமாய் நிற்கும் பளிங்குச் சிலை போலவும் தான் நாக்காக மாறிய கரும் பூனையாகி அவளது சுகந்த மேடு பள்ளங்களில் நிலவின் பாலாபிஷேகத்தை நக்கிக் கொண்டிருப்பது போலவும் தோன்ற குறி விறைத்தது. அவளை நெருங்கி உரசவும் சிலை குழைந்து முனகத் தொடங்கிற்று. முனகலின் சூட்டில் பூரித்த சற்றே பெரிதான வலது முலையின் விம்மலில் இறுகித் திமிரிய காம்பு அவனது புலிநக டாலரில் இடறித் தொடைகள் நசநசக்கத் தொடங்கவும், அவள் அவன் தோளில் துவண்டாள். அந்த மொட்டை மாடியின் யாருமற்ற தனிமையில் வேட்டியவிழ்ந்துத் தரை விரிப்பாயிற்று. சூடிய மல்லிகைச்சரம் வேட்டியில் பட்டுக் கசங்கிக் கட்டு பிரியத் தொடங்கவும் பட்டுப் புடவை குலைந்து விலக காலகன்று நீரின் வாசத்தில் நீச்சலடிக்கத் தொடங்கினான். அவள் ஆறாகிக் கொண்டிருந்தாள். விடிந்தால் தீபாவளி. அவனோ இன்னுமின்னுமென வெடித்துக் கொண்டிருந்தான். படுக்கையில் வெடித்ததேப் போதும் எனப் பரவசப்பட்டுக் கிடக்க முடியுமா. விடியற்காலையில் எழுந்திரிக்க வேண்டாமா? மாடிப்படி ஏறுமுன் அப்பாவும் அம்மாவும் திரும்பத்திரும்ப சொல்லி அனுப்பினார்கள்.தலைதீபாவளி எனவே மருமகன்தான் முதல் பட்டாசை வெடிக்கவேண்டும், சீக்கிரம் எந்திரிக்கப் பார் என்று. அப்போதுதான் அவளுக்கு கனவு போல் அது நினைவிற்கு வந்தது. ’போதுங்க’ என்று குழறலாக அவனது தொடைகளுக்கு இடையில் அவள் சொல்லியது, கொதித்துக்கொண்டிருந்த அவனுடைய காதுகளில் தூரத்துக் கைப்பம்பு ஒலிபோல மங்கலாக விழுந்தது. எச்சிலும் கொச்சையுமாய் வந்தது அவனிடமிருந்து ஒரு வார்த்தை

ம்ம்ச்ர்ர்பென்ழாது.


நாக்கு

சுந்தா போய் இப்படிப் பண்ணுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. கிர்ஷ்ணமூர்த்தி என்கிற கிச்சாவுக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை. 

தோப்பனார் உப்பத்தின்னு வளந்ததுண்ணா இந்த த்ரேகம். தலையே போனாலும் சரி வந்துடுவேன். உங்குளுக்காகப் பண்றேன்னு மட்டும் நெனக்காதேள். அதுக்கு பதிலா, தோ போட்ருக்கேளே அந்த ஜோட்டால ரெண்டடி அடிங்கோ வாங்கிண்டு மூச்சு பேச்சு இல்லாமப் போயிண்டே இருக்கேன். அவர் மட்டும் இல்லேன்னா, எச்சலைக்கு நாயாத் திரிஞ்சிண்டிருப்பேன். நன்னின்னா நன்னி. நன்னி வேனும் மனுஷாளுக்கு. இந்த நாய்க்கு இருக்கற பேர் அவர் போட்ட பிச்சையில்லையோ? கையவிட்டு நம்பாத்துக் கக்கூஸை அலம்பிண்டிருந்தவன்னா நான். உங்க மின்னாடி சொல்ல நேக்கென்ன வெக்கம். சாக்கடைக்கு அடப்பெடுக்க வந்ததை, நாள் நக்ஷத்ரம் பாத்தா சேத்துண்டார் மஹானுபாவன். எத்தனை நாள்டா இப்டியேக் கைகால் அமுக்கிண்டிருப்பே சொல்றேண்டா வாத்யாரண்டைனு அவர் மட்டும் சேத்துவிடலேன்னா, வண்டி வாகனத்தோட இந்த வாழ்வு வாச்சிருக்குமா? சுந்தா சாஸ்திரிகளா ஸ்லோகம் நன்னா ஸ்பஷ்டமா இருக்குமேன்னு நாலு பேர் சொல்றான்னா யாரால? அவருக்குப் பட்ட கடனை தர்ப்பனம் பண்ணியாண்ணாத் தீர்த்துட முடியும்? ஒங்களுக்குப் பண்ற ஒத்தாசையா நெனக்காதேள். மாசா மாசம் பண்ணும் போது, மனசுக்குள்ள எம் பேரும் நக்ஷத்ரமும் உங்காம் கோத்ரமும்னா சொல்லிக்கறேன். அஸிஸ்டெண்டா? மூச். நானே வந்து பண்ணி வெக்கறேன் கவலையேப் படாதேள். ஆமா. வரேண்ணா! 

உட்கார்ந்தபடிக்கே உதைத்து ஸ்டார்ட் பண்ணி ஸ்டாண்ட் எடுத்துப் பறந்தவன்தான். மறு நாள் காலையில் எட்டாச்சு ஒம்பதாச்சு தோ தோன்னு பாத்துண்ட்ருந்தா நெல கடிகாரப் பெண்டூலம்தான் ஆடறதேகண்டி வாசல்ல நெழலாடல்லே. நேத்து வெண்ணையாக் கரஞ்சுது சொப்பனம்போல் இருந்தது.

பெஸண்ட் நகர் அடையாரில் மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக மூக்குறிஞ்சிக் கொண்டு அசத்துப் பிசத்தாக அல்லாடிக் கொண்டிருந்தவனுக்குக் கிச்சுவின் அப்பாதான் - அவர் ஜிஎம் ஃபினான்ஸாக பதவியில் உசந்ததும், பாவம் பிராமணப் பையன் நடந்தேத் திரியறான் என்று சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். மாமா மாமா என்று அவர் தலை சாயும் வரை, காலையேக் கீழே பட விடாமல் தாங்கிக்கொண்டிருந்தவன், இன்று ஸ்கூட்டரில் போகும் ஹோதா என்ன? மறக்காதே என அவ்வளவு கேட்டுக்கொண்டும் தர்ப்பணம் செய்துவைக்க வரவேயில்லை. ஏதோ புத்த பூர்னிமா புண்ணியத்தில் ஆபீஸ் லீவாகப்போனதால் ஆயிற்று. ஆத்துக்காரிதான் எங்கிருந்தோத் தேடிக்கொடுத்தாள் இந்தாங்கோ என்று லிஃப்கோக்காரன் போட்ட தர்ப்பன பொஸ்தகம். ஒரு கண்ணை உத்தரிணியிலும் மறு கண்ணைப் பொஸ்தகத்திலுமாக மாற்றி மாற்றி ஒரு வழியாக ஒப்பேற்றியாயிற்று. புத்த பூர்னிமாவாகப் போனதோ, ஆஃபீஸ் லீவாய்ப் போனது. இதுவே சாதாரணப் பெளர்னமியாக இருந்திருந்து இந்தக் கேடு கெட்ட சுந்தா கைகொடுத்திருந்தால் ஆபீஸ் அவசரத்தில் வாத்தியாரை எங்கே என்று தேடுவது? அப்பா ஆண்ட காலமா? வீடு பூரா மனுஷாள். வெளியிலெல்லாம் காரு என்று இருக்க. எது ஒன்றுக்கும் நாம்தானே ஓடவேண்டும். ஏதோ இருந்த வீட்டை விட்டுவிட்டுப் போனதால் வாடகைச் செலவில்லை. வேஸ்டாய்க் கிடக்கும் அறைகளை வாடகைக்கு விடலாமென்றால், பிராமணணாய்க் கிடைப்பதில்லை. பிராமணன் கிடைத்தாலோ வாடகை கட்டவில்லை. பெரிய மனுஷர் இருந்த வீடு. எல்லா ரூம்களையும் பூட்டியாயிற்று. இரண்டு அறை ஒரு ஹாலை வைத்து சம்சாரம். இதற்கே கரண்டு பில் கையைக் கடிக்கிறது. ஏஸி இருந்த ஜன்னலெல்லாம் மரப்பலகை வைத்து அடைக்கவே ஏகத்துக்கும் செலவு ஆகிற்று. இருப்பதோ மேற்படிக்கு வக்கற்ற பீத்தல் டிபார்ட்மெண்டு. இதுவே, படிப்பேறாப் பண்ணாடைப் பண்ணாடை எனத் திட்டி மந்திரியைப் பிடித்துக் கிடைத்த உத்தியோகம். குறையற்ற ஒன்றென்றால் ஆம்படையாள் லட்சணம். அதுவும் அவர் போட்ட பிச்சை. சமையலுக்கு வீட்டோடு இருந்த மாமியின் பெண். அது பிறந்ததே இங்கேதான். வயசுக்கு வருமுன்பே பெற்றவள் மண்டையைப் போட்டுவிட்டாள். அந்த மாமாவை எப்போதோ ஒரு தடவை பார்த்த அறைகுறை ஞாபகம். சமையல் கட்டில் தவழந்து மூக்கொழுகி வளர்ந்து, சொப்பு வைத்து விளையாடி, சொக்காயில் வளர்ந்து, எட்டாவது படிக்கையில் மாமி மண்டையைப் போட அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஸ்கூல் போவதை விட்டதுதான். ஆனால் அவள் இல்லை என்றால் இரண்டு குழந்தைகளும் எட்டும் பத்தும் படிக்கும் அளவிற்கு ஆளாகியிருக்காது.ஆள்படை வேல் படையெல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது. அவரைவிட அடிமக்கெல்லாம் டபுள் எம்ஏ எம்பிஏ என்று பட்டம் வாங்கி பரீட்சை பாஸ்பண்ணி ஆபீஸர் என்கிற பந்தாவில் போம்போதும் வரும்போதும் முதுகு தடவி பரிகஸித்து சிரிப்பது தெரியாமலா இருக்கிறது. மனுஷாளுக்கு நாக்கு என ஒன்று இருப்பதே ஆம்படையாளுக்காகத்தான் என்று ஆகிவிட்ட காலம்.