09 December 2012

விலாங்குகள் போடப் பார்த்த விலங்கு

மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டுவது விலாங்கு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இணையத்தில் குறைந்தபட்சம் இவற்றின் எண்ணிக்கை இரண்டு.
தாயும் மகளுமாய் திரியும் இந்த விலாங்குகள் என்னைச் சொல்கின்றன நான் திரிக்கிறேன் என்று.

என்னை அண்டைபுளுகனாகவும் தங்களை சத்தியத்துக்கு சந்தாதாரராகவும் காட்டிக்கொண்டு போட்ட இந்த ட்விட்லாங்கரின் தேதி 25 அக்டோபர் 2012. இன்றைக்குத் தேதி என்ன 08 டிசம்பர் 2012.

நீங்கள் கூறியது போல, அறுவரை மன்னித்து, நீங்கள் கொடுத்த பொய்ப் புகாரை திரும்பப் பெற்றுவிட்டீர்களா அண்டப்புளுகு அம்மணி? மன்னிக்கும் முன்பாகவே அடுத்தவனை அண்டப்புளுகனாக சித்தரித்து, இதையும் மீறி நாங்கள் மன்னித்து இருக்கிறோம் என்று, நாங்கள் மன்னிக்கும்போது மக்களுக்குத் தெரியும் என்று நீட்டி முழக்கினீர்களே பத்மாசினி அம்மா!

நீங்களும் உங்கள் மகளும் போலீசிடம் அப்பிராணி மீன்கள் போல் தலையையும் வெளியில் வந்தால் விஷப்பாம்பின் வாலையும் காட்டி மிரட்டுகிற நீங்கள் என்னை விஷம் என்று சொல்வது நகைப்புக்கு உரிய விஷயமிலையா? ஊரில் போகிற வருகிறவன் கையிலெல்லாம் விலங்கு மாட்டும் கரவு நெஞ்சுடன் யார் விலாங்கு அவதாரம் எடுத்துத் திரிபவர்கள் யார் எப்படி என்று பார்க்கலாமா?

குற்றம் சாட்டப்பட்டவர்களோடு கூட்டுசேர்ந்து நான் திரித்ததாகச் சொல்வது என்ன? அந்த பேட்டி தும் மீன் காத்த ஹை ட்விட்டுதானே? அதைத் தனி ஆவர்த்தனமாகவே வாசித்துக் காட்டுகிறேன். 

இணையத்தின் சின்னப்பசங்களுக்கு சமதையாய் புழுதி கிளப்பி  பாம்பின் வால் காட்டி விளையாடுவீர்கள். ஆனால் திருப்பி அடித்தால் கண்ணைக் கசக்கிக்கொண்டு சீனியர் சிடிசனை திட்டிட்டான்னு கமிஷனரிடம் போய் மீனுக்கு தலையாய் மாரடித்துக் கொள்ளுவதை 62 வயதான நீங்கள் செய்யலாமா அம்மா?

மாயவரத்தான் போன்றோரின் ட்விட்டுகளுக்கு எல்லாம் ரீட்வீட் செய்து காலம் தள்ளுவதுதான் இசை விற்பன்னர் என்று சொல்லிக் கொள்பவருக்கு நேர்ந்த அவலமா?

பொது வெளியில் எவனோ எவனையோ நாகரிகமற்று பேசினால் கூட நீங்கள் புகார் கொடுப்பீர்களா அம்மா?
ஆசுகவி காளமேகம் சொன்னதுபோல் ”முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொறுக்குலர்ந்த வாயா” மாயவரத்தான் பேயே எப்போதடா உன்னிடம் வந்து நான் நாகரிகமானவன் என்று அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்தேன். தேசிய ஒருமைப்பாட்டுக்காக நான்கு மாதம் பாபா ஆம்தேவுடன் பயணப் பட்டவனைப் பார்த்து ஒரு வடகலை தென்கலை அல்லாத சிங்கள எச்சக்கலை ’நீ தமிழ் தீவிரவாதிகளின் ஆதரவாளன்’ பிரிவினைவாதி என்று சொன்னால் ஸ்ட்ராவைத்து கூல் ட்ரிங்கா குடித்துக் கொண்டிருப்பான் ஒரு தேசியவாதி? மெய்நிகர் உலகம் என்பதால் வெறும் திட்டோடு போயிற்று. இது மட்டும் மெய் உலகமாக இருந்திருந்தால் அந்த ஆவ் பொயட்டின் குடலை வகுந்து மாலையாகப் போட்டுக்கொண்டு ஏவ் என்று ஏப்பம் விட்டிருப்பானா இல்லையா, உண்மையான தேச பக்தன் எவனும்?

பாவப்பட்ட பத்மாசினி அம்மா! எது என்ன இழவு என்று புரிகிறதோ இல்லையோ, ட்விட்டு போட்டது நம்பாத்துப் பிள்ளையாண்டான் மாயவரத்தான். ட்விட்டுல திட்டு வாங்கறது எதுத்தாத்து துஷ்ட்டன் மாமல்லன். அவ்வளவுதான் பாக்க வேண்டிது. போடு ரீட்விட்டு. இதுதான்  உங்களது பாரம்பரியம் மிக்க கொள்கை இல்லையா?
பொதுவெளியில் ஆபாசமாகப் பேசினான் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டும். பின்னொருநாள் குசுகுசுவென காதும்காதும் வைத்தார்போல் புகார் கொடுக்க இது உபயோகப்படும் என்றுதான் இதற்கும் ரீட்விட்டா?

அவன் சிங்களவன் என்பதும் உண்மையில் மீனவர் பிரச்ச்னையிலிருந்து திசைதிருப்பவே வந்தவன் என்பதும் அவனது இறுதி ட்விட்டிலேயே தெரிய வந்தது. இருந்தும் இந்த தேசத்தின் அபிமானிகள் என்று கூறிக்கொண்டு கலவரத்தைத் தூண்டிவிட குண்டு வைக்கும் வெறியர்களைத்தானே தேச பேமானி என்று திட்டினேன். வயது முதிர்ந்தவர்களுக்கு சாம்பாரில் பருப்பு கொஞ்சம் கூடிப்போனால்கூட குசு ஊரைத்தூக்கும் என்கிற மருத்துவ உண்மை கூடவா பொதுவெளி ஆபாசம்?

உங்கள் அடிமைகளைக் கொண்டு உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்போருக்கு நீங்கள் வைக்கும் சூனியத்தைத் தமிழர்களுக்கும் சைபர் கிரைமுக்கும் தோலுரித்துக் காட்டவா பத்மாசினி அம்மா அவர்களே?
அட அயோக்கியப் பதரே! அநாமதேயமான இந்த மனிதன்2 யார் அம்மா?

யாரோ எனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்றெல்லாம் நீங்கள் சொல்ல முடியாது பத்மாசினி அம்மா. அவனை நீங்கள் தொடர்கிறீர்கள். உடனடித் தொடர்பு வரலாகாது என்பதற்காக, சாதுர்யமாய் 07 நவம்பர் 2012ல் பின் தொடர்கிறீர்கள். 

எக்மூர் கமிஷனர் அலுவலக வளாகத்துக்குள்ளேயே எனக்கு அந்திமக்கிரியை செய்து முடிக்க, இந்த ஒரு ட்விட்டே போதும் இல்லையா பத்மாசினி அம்மா? இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பத்திரப்படுத்திவிட்டீர்களா?

எவனாவது எங்காவது கொஞ்சம்போல சறுக்கி, உங்களைப்பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் நான் தொலைந்தேன். அந்த ஸ்கிரீன்ஷாட்டும் இந்த ஸ்கிரீன்ஷாட்டுமாய், சைபர்கிரைமில் அம்மாவும் பெண்ணும் ஆஜராகிவிடுவீர்கள் இல்லையா பத்மாசினி அம்மா?

உண்மை என்னவென்று பார்ப்போமா?
Valar wrote: ”மொக்கப் பாப்பார பருப்பு மசுரு விமலாதித்த மாமல்லன் இதுக்கு என்ன பதில் வச்சிருக்க்கரு?”

நிஜத்தில் நடந்தது என்னவென்றால் ஃபேஸ்புக்கில் இருக்கும் இந்த வளர்மதி அவர் கருத்தும் என் கருத்தும் எதிர்மாறாக இருக்கவே  இப்படி என்னைத் திட்டினார். உடனே கோபத்தில் நான் அவரைத் திட்டிவிட்டு ஃபேஸ்புக்கிலும் பிளாக் செய்தேன். பூணூல் போட்டுக்கொள்ளாத என்னைப் போய் பாப்பாரப் பருப்பு என்று திட்டினாயா? ஆமாண்டா மயிறு என்று கொஞ்ச நாள் இப்படிப் படம் எடுத்து ப்ரொஃபைலில் போட்டுக்கொண்டு திரிந்தேன்.
ட்விட்டு போட்ட மாரீச்ச மனிதன்2வும் அதை ரீட்விட் செய்த மாமி பத்மாசினியும் இப்போது சொல்லுங்கள், ஃபேஸ்புக் வளர்மதியை வன்மத்துடன் அமைச்சர் வளர்மதியுடன் முடிச்சு போட்டு சூழ்ச்சி செய்து திரித்தது யார்? 

நூல் திரிப்பதுங்கள் குலம் 
நூலோர்க்கு ஏது குலம்?