விமலாதித்த மாமல்லன்
17 July 2011
வியர்த்தம்
சுயம் எரித்துத்
தீயாய் கனன்றெழ
விதிக்கப்பட்டிருந்த கரித்துண்டு,
நானே தழல் என்று திமிரிற்று.
சுண்ணமடிக்கப்பட்ட சுவரில்
நெருப்பைக் கிறுக்கித்
தீர்ந்து போயிற்று.
சுவர் நெருப்போ
மழை கரைக்க மண்ணாயிற்று.
‹
›
Home
View web version