25 September 2016

ஆத்மாநாம் - 2083

கைபேசியில், தம் பெயர் கல்யாண்ராமன் என்றும் ஆத்மாநாம் பற்றிக் காலச்சுவடுவில் கட்டுரை எழுதியவர் எனவும் தம்மை அறிமுகப்படுத்திகொண்டவர், ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகள் ஏதும் என்னிடம் இருக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார். என்னிடம் இருந்த ஆத்மாநாம் தொடர்பான ஓரிரண்டு கடிதங்களை ஏற்கெனவே என் பிளாகில் பதிவேற்றிவிட்டதாக நினைவு என்று கூறிவிட்டேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். சமயத்தில், அவரிடம் எரிச்சல்கூடப் பட்டிருக்கிறேன். 

லும்ப்ப முனி

11 September 2016

கூலி இல்லாத வேலையும் ஓஸி விருந்து ஓம்பலும்

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும் - சாரு நிவேதிதா

08 September 2016

காட்பாடி காட் பாடி கோட்பாடு கோட் போடு

இறைநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள் மனிதனை பீடத்தில் ஏற்றாமல் இருக்கவேண்டும் என்று ஆல்பர்ட் காமு எச்சரித்தார். பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை. சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.

- வெங்கடேஷ் சக்கரவர்த்தி