23 February 2014

உணர்வும் உணர்ச்சியும்

திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்பவர்கள், சுப்ரமண்ய சுவாமியும் சந்த்ரா சாமியும் என்று ஆகிறது. ஒரு வாதத்தத்துக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், மனித வெடிகுண்டான தனுவும் சிவராசனும் சுபாவும் இந்தியர்களாகவும் ஏர் உழவன் சின்னம் வைத்திருந்த அப்போதைய ஜனதா கட்சி உறுப்பினர்களாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? இப்படிப் பார்த்தால் அஞ்சா நெஞ்சன் பிரபாகரனின் வீரத்துக்கல்லவா பேரிழுக்கு வந்து சேரும்! 

15 February 2014

உயில்

மாதவன் சார் வணக்கம்

சொல்லுங்க சார் வணக்கம்

இந்த மாசம் சம்பளம் இன்னும் போட ஆரம்பிக்கலையே!

சொல்லுங்க என்ன விஷயம்?

13 February 2014

முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # (12/02/2014)

நூலகங்களுக்காக புத்தகங்களை வாங்கிய சிங்கப்பூர் மணி வேலனுக்கு நன்றி. இப்போதேனும் நான் அளித்த செக்கை வங்கியில் செலுத்தி என் மீதிருக்கும் அடுத்தவர் பணத்தை வைத்திருக்கும் தார்மீக சுமையிலிருந்து என்னை விடுவிக்கும்படி மனுஷ்ய புத்திரனை வேண்டிக்கொள்கிறேன் 

12 February 2014

குத்து! எங்குத்தமா உங்குத்தமா?

ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்
by ஜ்யோவ்ராம் சுந்தர்

09 February 2014

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...

<<நான் இப்ப என்னவா இருக்கேனோ,>

லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.>

***

போலியும் காலியும்

கேட்ட கேள்விகளுக்கு, இதையும் ஒரு ஜென்மம் என மதித்து பதில் சொல்லியும், சொல்லப்பட்ட பதில்களுக்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல், புழுதியை மட்டுமே வாரித் தூற்றுபவனுக்கு இனி இணையத்தில் பதில் சொல்லி எந்தப் பயனும் இல்லை.

08 February 2014

லட்சங்களும் லட்சியங்களும்

<ஒரு கண்டெய்னருக்கு ரெண்டாயிரம்னு வாங்கின ஆளெல்லாம் நான் புழலுக்குப் போகணும்னு சாபம் விட்டா பலிக்குமா என்ன?>

04 February 2014

குறும்படமும் பெருங்கொலையும்

சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் பாலுமகேந்திரா. அவருக்கு அந்த பிம்பத்தை அளிப்பதைத் தமிழகத்தின் பெரும்பான்மையும் தனக்குச் செய்துகொள்ளும் கெளரவமாகக் கருதுகிறது. அல்லது மேடைக்கு மேடை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி சினிமாக்காரர்கள் அவரை வாணளாவப் புகழ்ந்து அப்படிக் கருதும்படியாக தூண்டுகிறார்கள். இணைய அறிவுஜீவி லார்வாக்களின் மூர்க்கக் கொண்டாட்டக் கூவலில் காது ஜவ்வு கிழியாத குறை.