28 March 2012

பெரியார் கொடுத்த விபூதி - நித்ய தடித்தன சதி

<நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.>


15 March 2012

அனைவருக்கும் நன்றி.

முகப்பேரிலிருந்து நந்தனத்திற்கு மாற்றலாகிவந்த இருபத்தியேழே நாட்களில் திரும்ப முகப்பேருக்கே மாற்றப்பட்டப் பழிவாங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவே ஜூலை 2010ல் லீவ் எழுதிக்கொடுத்து வீட்டில் உட்கார்ந்தேன். சும்மா உட்கார்ந்திருக்க முடியாமல் இணையத்தைத் துழாவத்தொடங்கினேன். ஆகஸ்ட் 16 2010 முதல் தட்டுத்தடுமாறி தமிழ் தட்டச்சக் கற்றுக்கொண்டு இணையத்தில் எழுதத்தொடங்கினேன்.

07 March 2012

எளக்கியத்த வளக்கப்போறோண்டி விஸ்தாரமா விவாதிச்சி...

<இந்த விவாதங்களையும், ஜோக்கர் கதையையும் ஒரு சேர புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. யாராவது பத்ரியிடம் என் சார்பாகப் பேசுங்களேன்…> 

பின் நவீனத்துவ நந்தனார்

சிதம்பரம் போகாமல்...

இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி

பல்லவி

சிதம்பரம் போகாமல் இருப்பேனோ நான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ நான்

06 March 2012

கேக்கூ விட்ட அபான வாயு 497

துறைக்குள்ளேயே எதிர்த்து நின்று முடிந்தவரைப் போராடிப்பார்த்து முடியாமல் போனதால் உதவி கேட்டுப்போனேனே தவிர எம்டிட்ரம் இளிப்பு காட்டுவதைப்போல ஒன்றும் ‘நல்ல’ போஸ்டிங் கேட்டுப் போகவில்லை. 

05 March 2012

வட்டத்திற்கு வெளியிலும் ஒரு வட்டம்

ஆயிரம் வேலைகளை ஒரே நேரத்தில் இழுத்துப்போட்டுக்கொண்டு  ஆழ்நிலை தியானத்தில்  இருக்கும் இலக்கிய ஆசானுக்கு நம்மாலான கைங்கைர்யம்.

விருதுன்னா சும்மாவா?

இன்று காலையில் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தபோது, இணைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி, உங்கள் நண்பருக்கு ஜனாதிபதி விருது கிடைத்திருக்கிறது, நீங்கள் சொல்லவே இல்லையே என்றாள்.

04 March 2012

தல சாமியாரின் பணிவிடை - [குட்டிக்கதை] - 499

சிலும்பியிலிருந்து உள்ளே போய் வெளியேறிய புகைமண்டலம் அந்த மாடி அறையையே கந்தர்வலோகமாய் ஆக்கிக்கொண்டிருந்தது. சிரிப்பும் கும்மாளமுமே அந்தப் பிராந்தியத்தின் தேசிய கீதம். அங்கே எவர் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கிண்டலடித்துச் சிரிக்கலாம். பிரதான தெய்வத்திற்குப் பிடித்தது எது பிடிக்காதது எது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே அவசியம்.

03 March 2012

பாகிஸ்தானுக்கு ஆதரவாக விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்பாட்டம்

ஆர்.எஸ்.எஸ் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மற்றும் இந்திய  தேசாபிமான அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றன என்றால்,இந்துக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது இந்திய தேசத்திற்கு எதிரான காரியங்கள் ஏதேனும் நடந்திருக்கும் என்பதுதான் இதுவரையில் அவர்கள் உருவாக்கியிருந்த பிம்பம். 

01 March 2012

இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை...

முதலில் இந்தக் கடிதத்தை நான் பிரசுரிப்பதாய் இல்லை... அதற்குக் காரணம் கடிதத்தின் இறுதியில் பி.குவாய் இருக்கும் இரண்டு வரிகள்.

இதயம் கூட ’உண்மை’ பேசுகிறது

இதயம் பேசுகிறது மணியன் மேல் எந்த காலத்திலும் எனக்குத் துளிகூட மரியாதை இருந்தது கிடையாது. மாறாக, கேள்விப்பட்டதை விஷயங்கள் காரணமாய் மட்டமான அபிப்ராயமே உருவாகி இருந்தது.