20 August 2012

சி.ஆர்.விஜயலஷ்மி நினைவேந்தல் ஒரு பகுதியின் ஒலிவடிவம்


புரிசை கண்ணப்ப தம்பிரானின் புதல்வர் காசி, 
கருணா பிரசாத், 
பாரவி, 
கருணா பிரசாத், 
முத்துசாமி நடேஷ்

18 August 2012

எமூர்

அன்று மாலை கிண்டி ரயில் நிலையத்தில் உயரதிகாரியை சந்திக்கவேண்டி இருந்தது. தூரல் மழையாகுமுன் வண்டியை விரட்டிக்க்கொண்டு சென்றேன். முதற்பார்வைக்கே நிழலுருவங்களாய் வரிசை நீண்டிருப்பது தெரிந்தது. நடைமேடை சீட்டு வாங்க எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும்போல் தோன்றவே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பாலத்தின் படிக்கட்டுகளில் ஏறினேன். நடைமேடைக்கு இறங்காமல், பறந்துகொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலின்றி நடுவழியிலேயே சுவரோரம் நின்றுகொண்டேன். மண்ணின் மைந்தர்தம் வாய்த்திறம் வெள்ளை டைல்ஸ் சுவரை ஓவியங்களாய்  அலங்கரித்திருந்தது. புட்டத்தில் ஓவிய நகல் பதித்துவிடாதிருக்க சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள நேர்ந்ததில், பரபரத்துக்கொண்டிருந்தவர்களின் முழங்கைமுட்டிகள் தொப்பையைப் பதம்பார்த்துக்கொண்டிருந்தன. இனிபொறுப்பதில்லை தொப்பையைக் குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் பேப்பரையாவது அந்த காலம்போல் தரையில் குந்தி உட்கார்ந்து படிக்க வேண்டும்.