30 July 2011

கலி முத்திடுத்து

<ஆனால் மாணவனைத் தூக்கும்போதே அவன் இறந்து விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் முழு கல்லூரியையும் அணிதிரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.>

<இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தோழர்கள் தலையீட்டின் பேரில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.>

ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!

கல்கி போட்டியில் அசோகமித்திரனுக்குப் பரிசு


அசோகமித்திரன் என்பவர் அறிமுக எழுத்தாளரா? இன்றைக்குச் சரியாக 30 வருடங்கள் முன்னால் 1981 கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் அறிமுக எழுத்தாளனாய் மூன்றாவது பரிசு வென்ற மூத்த எழுத்தாளன் என்கிறமுறையில் அசோகமித்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

வெட்டி வினவு

<பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை> 

29 July 2011

எனினும்...

குப்பையாகிப்போன இரும்பு
கொதித்துக் குழம்பாக ஓடி

போதா பேதம்

குடித்துக்கொண்டிருந்த காலத்தில், குடிக்காமல் இருக்கும்போது சகஜமாய் உளறிக்கொண்டு திரிபவன், குடித்ததும் குடித்துவிட்டு உளறியதாய் ஆகிவிடக்கூடாது என்கிற தன்னுணர்வில், வாய்மூடி மெளனியாகிவிடுவேன்.

ஜன்மபந்தம்

ப்ரணதார்த்தி ஹரன் என் அலுவலக நண்பன். நன்றாகப் பாடுவான். எஸ்ஐஇடி கல்லூரிச் சாலைக்கும் எல்ஆர் ஸ்வாமி கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அண்ணாசாலை பிராக்கெட் ஆகும். அந்த வளைவில் இருக்கும் கட்டிடத் திட்டுகளில் சற்றே உள்ளொடுங்கிய ஒன்றில் இப்போது இருக்கும் சேவை வரிப் பிரிவுக்கு பதில், முழுக்கவும் கலால்துறை மட்டுமே இருந்த காலம் அது. அப்போது. அலுவலகத்தின் பின்புறம் கேண்டீன் என்கிற பெயரில் இருந்த ஒற்றை அழுக்கு மேசையில் வடைக்கும் டீக்கும் இடையில் ஹரனின் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.

28 July 2011

விட்டதா சனி?

யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல் - முதல் பாகம்

இது இரண்டாம் பாகம்

Yesterday

why did u write abt me on u r blog?
was it fair?
sir r u there?

இலக்கியம்

துல்லியமாய்க் காணவேண்டி
அணிந்துகொண்ட கண்ணாடி,
எப்படி இருக்கிறது என்றறியக்
கண்ணாடியைப் பார்த்தால்,
கண்ணுக்குப் புலப்படாத
பொக்குப் பொகறைகளைத்
துல்லியமாய்க் காட்டிற்று.

27 July 2011

மணி கெளல்


fromS.Anand anandsiga@gmail.com
tomadrasdada
dateWed, Jul 27, 2011 at 7:08 PM
subjectMani Kaul
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

Images from this sender are always displayed. Don't display from now on.
hide details 7:08 PM (2 hours ago)


Konangal pays tribute to a rare genius of Indian cinema Mani Kaul 
(25 December 1944 – 6 July 2011) http://konangalfilmsociety.blogspot.com/

கலையும் நிலையும்

நேற்று மாமல்லன் எழுதிய இந்த கட்டுரை படித்தேன். 


இது போன்ற கட்டுரைகள் முடியும்போது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் வருகிறதே ? அது ஏன் தோழர் ? ஒருவேளை சுஜாதாவின் சிறுகதைகள், ஒ ஹென்றியின் புனைவுகளின் தாக்கமாக இருக்குமோ ?

சூ·பி இயக்கம் – பிரமிள் (ஆபிதீனுக்கு நன்றி)


ஜூன் 10, 2008 இல் 2:12 மாலை (ஆன்மீகம், கட்டுரை, பிரமிள்

திரு. கால சுப்ரமணியம் தொகுத்த பிரமிளின் ‘பாதையில்லாப் பயணம்’ நூலிருந்து…

26 July 2011

கடவுளும் மனிதனும்

சட்டமிட்ட ஜன்னலில்
சித்திரங்களை மாயாஜாலமாய்
வரைந்துகொண்டிருந்தார் கடவுள்

ரு-சிகரம்


தமிழே ததிங்கிணத்தோம் என்றாலும்
எம்ப்டி தம்டீ என்று
இங்கிலீஷில் எழுதியதால்,

25 July 2011

யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல்

Today

hai sir
hw r u
i hv been flowing u r blog fr long
just awesom

ஒப்பனை

முதல் பார்வையில் முளைத்த மோகம்
காதலில் கிளைத்த ரூபம் காட்டிக்
காமத்தில் தழைத்தது.

24 July 2011

ஆன்மீக சாமானம்


நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

இன்றைய தங்கம் வெள்ளி மார்க்கெட் நிலவரம்

http://www.alexa.com/siteinfo/savukku.net# சவுக்கு 27,553 - 2,379

http://www.alexa.com/siteinfo/cablesankar.blogspot.com# கேபிள் சங்கர் 54,647 - 6,782

http://www.alexa.com/siteinfo/jackiesekar.com# ஜாக்கிசேகர் 62,068 - 8,053

http://www.alexa.com/siteinfo/vinavu.com# வினவு 70,648 - 8,828

http://www.alexa.com/siteinfo/truetamilans.blogspot.com# உண்மைத்தமிழன் 73,637 - 9,818

http://www.alexa.com/siteinfo/charuonline.com# சாரு நிவேதிதா 101,442 - 12,125

http://www.alexa.com/siteinfo/jeyamohan.in# ஜெயமோகன் 185,439 - 21,812

http://www.alexa.com/siteinfo/sramakrishnan.com# எஸ்.ராமகிருஷ்ணன் 549,301 - 69,213

ஆளாளுக்கும், எச்சி தடவி சிலேட்டைப் பளபளப்பாக்கற சின்னப் பசங்களாட்டம் தளத்தை (அடுத்தவன் செலவுல) சீவி சிங்காரிச்சி, பின்னாடி போயிட்டு இருக்காய்ங்க!

23 July 2011

தவிப்பு

பால்கனிக்குப் போகும்போதெல்லாம்
தாழப்பறந்து விரட்டத் தொடங்கிற்று

நான் அவனில்லை - அவன்தான் இல்லை # எம்டிஎம் ஃபேஸ்புக்கில்

உங்கள் கவிதை மொழிபெயர்ப்புக்கு ஒரு கமெண்ட் எழுதினாலும் எழுதினேன் என் தகவல் பெட்டி நிரம்பி வழிகிறது. 'மாம்ஸ்' என்கிறார்கள், 'இன்னாம்மே' என்கிறார்கள் இதுவெல்லாமாவது பரவாயில்லை, ஆனால் 'தல' என்னும்போதும் 'பிரிச்சி மேஞ்சிட்டேங்க' 'சான்ஸே இல்ல' என்று உரையாடும்போதும் என் கண்களில் நீர் மல்கிவிடுகிறது. 'பார்ட்டி' என்று அழைத்துவிட்டால் கதறியே அழுதுவிடுகிறேன். உரையாடல்களின் சாரத்தை உங்களுக்கு சொல்லாவிட்டால் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் போலிருக்கிறது. சாராம்சம் இதோ:

22 July 2011

குறுங்கவிதைகள்

எதைப்பார்த்து குரைக்கிறது
என்பது தெரியும்வரை

கொம்பு

எதையும் பிடிக்காமல்
சும்மா கையை வைத்துக் கொள்வதுதான்
எத்துனைக் கஷ்டம்

21 July 2011

போஸும் ஆபீசும்

ஜெயமோகனுக்கு கிடைத்தது வடகிழக்கில் போஸு

ஜெயமோகனின் முன்ஜாமீன்


இது என்ன முன் ஜாமீனா?

ரணமற்ற ரத்தக்கறை

முண்டியடுத்து முன்னேறிய
முட்டிகளில் ரணம்.
கரங்களில் உயிர்களின் ரத்தக்கறை.

துருத்தலும் இருத்தலும் - இரண்டு கவிதைகள்

புள்ளிக் கோலம் என்பதற்காக
புள்ளி புள்ளியாய்த் தெரிவது கோலமாகுமா?

வருகை

பக்கத்து இருக்கையில்
சுந்தரகாண்டம் படிக்கும் பெண்ணுக்கு
நினைத்தது ஜெயமாக,
ஆர்ப்பாட்டமின்றி
ஜெபிக்க முடிந்திருந்தால்,
எப்போதோ வந்திருப்பார்
எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்டவர்.

20 July 2011

தேடல்

கசிந்துருகிய மனிதன் கடவுளைக் கண்டான்.

கோயிலை இடிக்கறதுங்கறது...

 rozavasanth 

@ 
பொதுவாகவே ஒன்பது மணிக்கே சூரியனைக் காண்பவன். ஞாயிறு எனில் காலைக் காப்பியே மதியம் ஒரு மணிக்குத்தான். ஆகையால் திரைப்பட சங்கக் காட்சிகள் இருந்தால் தவிர ஞாயிறு பகல் ட்ரைவ்-இன்னுக்கானது அல்ல. 

19 July 2011

மனரோகசிரோமணி

குரைத்துச் சாவது நாயின் விதி
எனில்
குரைப்புக்கு உரையெழுதுவதா 
என்
ஜன்ம சாபல்யம்?

பல்கலைக்கழகத்தில் பாடமாக...

http://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/waste-a-tamil-poem-by-vimalathitha-mamallan-translated-by-me/251199861559185

WASTE (a Tamil poem by Vimalathitha Mamallan translated by me)
by Rajan Kurai Krishnan on Monday, July 18, 2011 at 7:50pm

18 July 2011

கவிதையும் கவிஞனும்

எதையோ தேடிப்போனவன், Ayyanar V பஸ்ஸில் இடறி ஏற, விக்ரமாதித்யனின் இந்தக் கவிதையைக் கண்டதும் துணுக்குற்றேன்.

மழை அழகானது
நான்
சமவெளியில்...

- விக்ரமாதித்யன்

மண்ணாங்கட்டி

இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.

கிழி

கிழி
கிழிகிழி என
கையில் அகப்பட்ட
எல்லாவற்றையும் கிழி
கிழிப்பது உன் ஜனநாயக உரிமை.

இடையில், சற்றே குனிந்துன்
இடையைப் பார்த்து உறுதி செய்துகொள்
கிழியாமல் இருக்கிறதா என்று.

17 July 2011

அம்பலப்படுத்துவது சரிதான். ஆனால் நாம் அவமானப்படுத்துவது யாரை?

ஆறுதல் வேண்டி எழுதப்பட்ட கடிதம்கூட மானக்கெட்டவனுக்கு, பழிவாங்கக் கையில் கிடைத்த ஆயுதம். 

சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி பெற்றுதான் கடிதம் வெளியிடப்பட்டதா? அதை நாமும் சுற்றில் விடுவதா? 

அம்பலப்படுத்துவது சரிதான். ஆனால் நாம் அவமானப்படுத்துவது யாரை? 

ஆவேசப்படாமல் சிந்தித்துப் பார்த்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

வியர்த்தம்

சுயம் எரித்துத்
தீயாய் கனன்றெழ
விதிக்கப்பட்டிருந்த கரித்துண்டு,

வெளிநாட்டு எழுத்தாளருக்கு உள்நாட்டிலிருந்து ஒரு கடிதம் - [கதைபோலவும் படிக்கலாம்]

இயற்கையின் காவியம் பதிவை ஃபேஸ்புக் தனிச்செய்தியில் பாராட்டி இருந்தீர்கள். கூகுள்+ஸில் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி. 

கண்ணீர்ச்சுவடு

கன்னம் தொட்டு செல்லம் கொஞ்சிய
முன்பின் அறியா பெண்களின் சுகந்தம்,

16 July 2011

நாய்கள் ஜாக்கிரதை!

குமாரி பிரேமலதா டபிள்யூ ஆர் ஸ்வர்னலதா கல்கி சாண்டில்யன் நாபா அகிலன் சுஜாதா என்று படித்துக் கொண்டிருந்தபோது இப்படி இருந்தவன்

ராரா! சரஸக்கு ராரா!

”ஏண்டா நரசிம்மன்னு வைத்த சோளிங்கர் குலதெய்வத்தின் சிரேஷ்டமான பெயரை மாமல்லன் பீமல்லன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறாய்? கர்மம் கர்மம்”

15 July 2011

அடுத்து ஒரு விண்ணப்பம்

fromparthasarathi.jayabalan@*****
tomadrasdada@gmail.com
dateThu, Jul 14, 2011 at 12:12 PM
subjectRE: ழார் பத்தாயின் குதிரை
mailed-by*****
hide details 12:12 PM (20 hours ago)
மாமல்லன் சார் - நன்றி என்று ஒரு வார்த்தை சொல்வது பொருத்தமாக இராது.

ஆமாம் போங்கடா!

ஆத்மாவை சுத்தி கரித்தால்தான் ஏடிஎம்மிலிருந்து டாலராக எடுக்கலாம். 

14 July 2011

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீfromanbu.chezian saravanan saro_anbu@yahoo.co.in
tomadrasdada@gmail.com
dateThu, Jul 14, 2011 at 4:27 PM
subjectஅன்புள்ள மாமல்லன்,
signed-byyahoo.co.in

அன்புள்ள மாமல்லன்,

சுயம் சம்பந்தப்படாதபோது ஜெயமோகன்...

சுயம் சம்பந்தப்படாதபோது பரவாயில்லை ஜெயமோகன் சரியாகவே பேசுகிறார்.

தி.ஜா, வெ.சா,சுஜாதா

ஒரு வேளை...

ஒரு வேளை, பேயோன் என்கிற பெயரில் எழுதுபவர் உண்மையில் எஸ்.ராவாகக்கூட இருக்கலாமோ?

விசேஷ காரணம் ஏதுமில்லை,இதைப்படிக்கத் தொடங்கியதால் வந்த சொந்தேகம்.

ழார் பத்தாயின் குதிரை [கதை] - பார்த்தசாரதி ஜெயபாலன்

மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ, புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். 

12 July 2011

விருது மானத்தைக் காப்பாற்றுமா?

அடிப்படைத் தமிழே தெரியாமல், பிறந்ததே புத்தகம் வாசித்தபடி என்பது போல் போஸ் கொடுத்து மொக்கைகளிடம் இலக்கிய விருதுகள் அள்ள வேண்டுமா - இன்றே சேருவீர் எஸ்.ரா டுடோரியல்.

கிழக்கின் Dial B for Books - சபாஷ்!

போன் அடியுங்கள். புத்தகம் வீடு தேடி வரும்.

நல்லார் ஒருவர் உளறல்

மனப் புரட்டே இணையத்தில்
மை பரவுவதாய் உளறாதே.
மெய்நிகர் உலகில் ஏதடா மை?

கன்னத்தில் விழுந்த அறை (கதைகதையாம் காரணமாம்)

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா - கன்னத்தில் விழுந்த அறை!

1981ல் புறநகர் ரயில் செண்ட்ரலை நோக்கி வந்துகொண்டு இருந்தது. மாநகரின் வடக்கு எல்லையைத் தாண்டிய சிற்றூரில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது நவீன நாடகக்குழு. இலக்கியக் கலகக்காரன், சினிமாப் பிரவேசி, அரசுக் கல்லூரி ஆசிரியன், அரசு / வங்கி / அச்சக ஊழியர்கள், சினிமா இயக்குநர் ஆகக் கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்தவன், சுதந்திர பத்திரிகையாளன் எனக் கலப்படமான நபர்களால் ஆன நாடகக் குழு. காவல் நிலைய கற்பழிப்புகளை அம்பலப்படுத்தும் நாடகம். குழுவுடன் கெளரவ அங்கத்தினராய் ஜன்னலோரம் நாடக ஆசிரியரும் பட்டும்படாமல் அமர்ந்து வந்து கொண்டிருந்ததார்.

11 July 2011

பிராமணார்த்த எண்டர்தட்டி ரெண்டு கவிதைகள் பார்ஸேல்

காமாட்சியை வரைந்தாலும் 
ஏன் பாப்பாத்தி சாயலிலேயே 
வ ரு கிறது?

வடை படை (அடி தடி கவிதைகள்)

இளமைக்காலச் சேற்றை அளைந்து
பெருசுகள்
பூசிக்கொள்வதைப் பார்த்ததில்,

10 July 2011

கட்டி தங்கம் வெட்டி எடுத்து...

எப்போது ஜெயமோகனின் தளத்தைத் திறந்தாலும் பத்மநாபஸ்வாமி ஆலையம்போல் தங்கமாகக் கிடைக்கிறது. சுயபுத்தி உள்ள எவனேனும் தனக்குப் பிடித்த கவிதைகளைத் தன் கவிதைகள் என்று சொல்லிக் கொள்வானா? ஜெயமோகன் பிரபஞ்சத்திற்கு வெளியில் இருக்கும் ஆன்மீகப் பிரஜை அல்லவா கேவலமான மனிதப்பிறவிகளுக்கான விதிகள் கடவுளைக் கட்டுப்படுத்தமுடியுமா என்ன?

முடிச்சு

நீளமாய் இருந்த நூலில்
முடிச்சு போட்டு வளையமாக்கினான்.

அவதூறு - கதை சொல்லவா

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - அவதூறு

நூறுசதம் மாமி உள்நாட்டில் இருக்கும்போதே பிழிந்த வடாம்: 

“நண்பனை ஓரினச்சேர்க்க்கையாளன் என்று அவதூறு சொல்லித் திருந்தவன் ”. 

09 July 2011

மாதக்கூலி (கதையாகவும் கொள்ளலாம்)

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - மாதக்கூலி

மாலை கரைந்து இருளத் தொடங்கியிருந்தது எனினும் ஷெட்டோடு ஒடுங்கி உள்ளே நுழைந்த வாயிலில் இருந்து நேராகத் தெரிந்த குஷன்வைத்தப் பெரிய  பழுப்புநிற நாற்காலியே பெரும்பாலும் பெரியமனிதரின் பிறப்பிடம் என்பதுபோல் மயக்க வைத்த தோற்றம்.

கட்அவுட் கலாச்சாரம்!

பார்வை மட்டும் சினிமாவப் பாக்கறதோ?

08 July 2011

நாய் நாட்டாமை

தெரியவந்தவள் எவளானாலும் இளித்தபடி
வளைக்கப் பார்ப்பதையே
முழுநேரத் தொழிலாய்க் கொண்டிருக்கும்
தெருநாயை எவரும் தெற்றாய் எடுப்பதில்லை
நாய் நாட்டாமை வேஷம் கட்டி
நாட்டியம் ஆடும்போதுதானே
தோலுரிக்கவேண்டி வருகிறது.


ஜீசஸ்!

ஜீசஸ் ஸேவ்ஸ் பகவான் ஸ்பெண்ட்ஸ் - ஓஷோ சொன்னது.
பொண்டாட்டி சம்பாதிக்கிறா நான் செலவழிக்கிறேன்
- வெட்டிப்பயலின் வேதாந்தம்
# படிப்பின் பலன்

கொட்டைக்கு ஒரு குட்டு

தாரம் தாரம் ஆதாரம்
ஒண்ணுக்கு ரெண்டாய் சேதாரம்
போதாரம் வருதாரம்
பிறவியிலேயே பூதாரம்
பூச்சாண்டி காட்டி உர்ரென்றால்
பண்ணாடைக்கும் பீதாம்பரம்

போடாப்போடா கிழக் காலே
பயமுறுத்தாதே வழக்காலே
போட்டதைத் தின்னு செரிச்சிக்கோ
பொழுது போகாட்டி அரிச்சிக்கோ

07 July 2011

இருக்கும்போது...

புகழின் உச்சியில் இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில், திடீரென ஒரு கேள்வி உதித்ததது. வீட்டில் இருந்தபடியே நண்பர்களின் தொலைபேசி நம்பர்களை சுழற்றத் தொடங்கினார். வெவ்வேறு குரல்களில் எல்லோருக்கும் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். 

மூட்டம் ஓட்டம் கண்ணாடி

மூட்டம்

கவிந்திருக்கும் அழுக்குத்துணியை
கைகாலுதைத்து விலக்கத்துடிக்கும்
குழந்தையின் கிலேசத்தைக்

முகாமுகம்

தினத்திற்குப்
பதினாறு மாத்திரை தின்கிறவளை
நார்மல் எனச்சொல்லி
மணமுடிக்க வைத்து
நம்பியவனின் வாழ்வை நாசமாக்கி
விவகாரம்
கோர்ட் படியேறி
விவாகரத்தாக முற்றும்போது
நிஜம் சொல்லவும் முன்வராத
நேர்மையின்மைக்குப்பெயர்
ஆன்மீக மருத்துவமா?
இல்லை
பொட்டு வைத்த புரோக்கர்தனமா?

முகமூடியை முகமென்று நம்பி
சுற்றிவந்து கைதட்டும்
ஜோடுதாங்கிக் கூட்டமே சொல்!

சாதாரண எழுத்தாளனை
தாஸ்தாவெஸ்கி ஆக்காமல்
தூங்காதுபோலும் சமூகம்!

05 July 2011

அருளக்கிடைத்த பொருள்

காலைக் கடனாய் அலங்கரித்து
அசுவாரசியமாய்
படியில் அமர்ந்திருந்த
நடைபாதைக் கோவிலின் குருக்கள்

கெக்கரே பிக்கரே

ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஆ பெ செ தெ அவங்கப்பன் தாடி

04 July 2011

நான் பிறந்தது தீர்ப்பு சொல்வதற்காக அல்ல நேசிக்க - சுகுமாரன்

பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார் டி.எஸ்.இலியட். அவை: எண்ணிக்கைப் பெருக்கம்,வித்தியாசம், சீரான படைப்புத்திறன். பாப்லோ நெரூதாவை விட இலியட்டின் மதிப்பீட்டுக்குப் பொருத்தமான வேறொரு நவீன கவிஞர் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த நோக்கில்தான் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நேர்காணலொன்றில் 'இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று குறிப்பிட்டார்.

03 July 2011

மக்கள் கவிஞனும் மலம் சுமக்கும் பெண்ணும்

பூ

இரண்டுநாள் கழித்து வா
நாளைக்கு வா
என்கிற
நாஸூக்கு வார்த்தைகளை
பால்கனிப் பாதுகாப்புத் தடுப்பில் 
மார்பழுந்த
நிலம் நோக்கி உதிர்க்கும்
மாடி வீட்டுப் பெண்களிடம்,

02 July 2011

களை

வாய் வீச்சில் 
தன்னை வாளென்று நம்பி
காற்றில் சுழன்ற
சவரக்கத்தி,
மொக்கை 
என்பதற்கு சாட்சியாய் 
மண்டிக் கிடக்கிறது தாடி.

மறவாதிரு மனமே! அது மதி!

மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.

01 July 2011

சும்மா இருக்கக் கத்துக்கணும்

காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவாகத்தானிருக்கும் என்று ஆருடமாய் உளறுவேன். பிறகொருநாள் எச்சிலாய்த் துப்பியதை ஹிஹிஹி என்றபடி வழித்து நக்குவேன்.