22 October 2023

பயமுறுத்தும் பாத்திரம்

நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 

41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது. 

***

சினிமாவில் நடிக்கிற வெறியில் வெளி மாநிலத்திலிருந்து வந்து எல்லாவற்றையும் இழந்து, இனி பிச்சைக்காரன் வேடத்தில் மட்டுமே நடிக்கமுடியும் என்கிற அளவிற்கு நாசமாகிப்போன தெரிந்தவன் ஒருவனை சில நாட்களுக்குமுன் தற்செயலாகத் தெருவில் சந்தித்தான்.

என்ன நான் கேல்விப்பட்டது...


ஆமா.


நிஜமாவே சாமியாராகப் போகப் போறீங்களா.


ஆமா.


இனிமேல் உங்க ஜிப்பா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் உங்குளுக்கு யூஸாகாது இல்லையா. எனக்குக் குடுத்துடுங்கலேன்


அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனுக்கு ஒரு டீ பிஸ்கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்




30 September 2023

கரப்பான்பூச்சிக்கு வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் கரப்பான்பூச்சிக்கு நன்கு கேட்கிறது. 

கரப்பான்பூச்சி இல்லாத சமையல்கட்டே இருக்காது என்கிற அளவுக்கு விளக்கணைத்த வீட்டின் இருட்டில் சமையல் மேடை முழுக்கநசநசவென நிறைந்திருப்பவை கரப்பான்பூச்சிகள்.

28 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன

உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்

''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.

கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார்தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்

பால்தசார் நாணத்தில் சிவந்தான்

''நன்றி'' என்று கூறினான் அவன்

''இது உண்மை '' என்றார் டாக்டர்தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும்மென்மையாகவும் பருத்திருந்தார்மென்மையான கைகளைக் கொண்டிருந்தார். 

25 June 2023

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

21 June 2023

உலகச் சிறுகதைகள் 19 காஃப்கா

இந்தக் கதை வெளியான 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே காஃப்கா விசாரணை என்ற நாவலையும்  எழுதிக்கொண்டிருந்தார். என்ன குற்றம் செய்தான் என்று தெரிவிக்கப்படாமலேயே தண்டனை விதிக்கப்பட்ட ஜோசஃப்  கே. நாவலின் மையப் பாத்திரம். யார் தண்டனை விதித்தார்கள் என்பதும் தெரியாது, அந்த அமைப்பை அணுகவும் முடியாது. ஆனால், அவன் இயல்பான வாழ்க்கையை வாழலாம்எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம்அச்சமூட்டும் இந்தக் குழப்பமான காலத்தில் ஒரு பாதிரி அவனுக்குச்  சொல்வதாக   இந்தக் கதை நாவலில்  இடம்பெற்றுள்ளதுசட்டப் புத்தகத்தின் முன்னுரை அது என்று சொல்கிறார்முற்றுப்பெறாத அந்த நாவல்  காஃப்காவின்  மறைவுக்குப் பிறகு 1925ல்தான் வெளியானது.   . வி. தனுஷ்கோடி செய்த  நாவலின்  (ஜெர்மன்) நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை   க்ரியா பதிப்பகம் 1992-ல் வெளியிட்டது

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை

என்னய்யா மெஸ் இது. போவும்போதுதகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.  

14 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்

இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான். 

07 June 2023

உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்

ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை. 

ஆபீஸ் அத்தியாயம் 53 மிதப்பு

தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், 'தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவணந்தபுரம் போகலையாம்.  கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்' என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி