08 September 2016

காட்பாடி காட் பாடி கோட்பாடு கோட் போடு

இறைநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள் மனிதனை பீடத்தில் ஏற்றாமல் இருக்கவேண்டும் என்று ஆல்பர்ட் காமு எச்சரித்தார். பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை. சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.

- வெங்கடேஷ் சக்கரவர்த்தி


எழுதி இருக்கறது அஞ்சு வாக்கியம். 

அதுல முதல் வரி அண்ணந்து இல்லை. காமு சொன்னது. அதுல அண்ணனோட கைவரிசையைக் காட்ட முடியலை.

இரண்டாவதுதான் முதல்தை வெச்சு சொந்தமா எழுத முண்டிப் பார்த்தது. அது எந்த லட்சணமா இருக்குதுன்னு பாருங்க.

//பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள்.//

அப்படியான சூழல்ல இப்படிப் பண்றதுல என்ன ஆச்சரியம். இது என்னவோ அசாதாரணமா இப்பதான் நடந்துட்டாப்புல ஆராரோ ஆரிரரோ அதிர்ச்சிப் பைத்தியமாட்டம் இதுக்குப் போயி என்னா பில்டப்பு. சுஜாதாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் வெகுஜன வாசர்கள் மத்தியிலும் பிரமிள் சுரா நகுலன்லாம் இலக்கிய வாசகர்கள்கிட்டக் கல்ட் ஃபிகராவும்தானே வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 

//ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை.// 

சாமியா வேண்ணா கும்புட்டுக்கோ ஆர்க் லைட்டை பின்னாடி புடிக்காதே கண்ணு கூசுதுங்கறாரு போல இந்த சினிமா வாத்தியாரு.

//ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை.//

என்ன எழவு செண்டன்ஸ் இது முடிஞ்சிதா முடியலியா. இல்ல ஒண்ணுக்குள்ள ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வருதா கருமம்.

//சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.// 

இந்த எழவுக்குப் பேரு கோட்பாட்டுத் தமிழ். இந்த எச்சியை எல்லாரும் பயபக்தியோட கைல வாங்கி தலைல தடவிக்கணும். 

//சிக்கல் எங்கிருக்கிறது என்றால்// சிக்கல் எங்க இருக்குதுனு இப்ப உங்க எல்லாருக்கும் புரிஞ்சிட்டிருக்குமே.

ஒரு சொற்றொடரை ஒழுங்கா எழுதத் துப்பில்லாதவன்தான் கோட்பாடு காட்பாடினு கத்திக்கிட்டுத் திரியிறான் தன்னையும் ஒரு ஆளாகக் காட்டிக்கொள்ள.

நான் FBல இருந்து இப்படி அல்லு கழட்டிக்கிட்டு இருந்தா இவங்கக் கச்சேரியை எப்படி நடத்தறது. அதான் எனக்கு ஆப்பு. 

போங்க இதையும் பிரிண்ட் எடுத்துகிட்டு கும்பலா போய் போலீஸ் கமிஷனர் சீஃப் ஜஸ்டிஸ்னு எல்லார்கிட்டையும், எங்களை எப்படி கிள்ளறான் பாருங்க சார்னு புகார் குடுத்து கருத்து சுதந்திரத்தைக் காஷ்மீர்ல காப்பாத்துங்க வாழை மட்டைகளா.

காட்பாடி காட் பாடி. கோட்பாடு கோட் போடு

கெளம்புங்க கெளம்புங்க அவ்வளவுதான் இன்னைக்கி பயாஸ்கோப்பு.