30 August 2010

நன்றி நவிலல்

தமிழ்ப்பறவை said...

மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன்.

இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது.

August 27, 2010 3:56 PM

விமலாதித்த மாமல்லன் said...

பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி  மறக்கும்.  தந்தை   வழிமொழியான  மராத்தி  சுத்தமாக மறந்து .....இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக....

26 August 2010

குறும்படங்கள் - கரடி தொடர்ச்சி

The Bear - Film by Jean-Jacques Annaud


பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட, தக்கினியூண்டு இருந்துகிணு வெள்ளெலி மாதிரி இருந்ததால ஆஸ்ரமத்தானாட்டம், நைஸ்ஸா உள்ள பூந்து வாராவாரம் ஒன்னும் புரியாட்டியும், ஊமக்கோட்டானாட்டம் படம் பாக்குறது. மாட்டினா டின்னு கட்டிறப் போறானுங்களேனு க்ளைமாக்ஸ்ல, வெளியப்போறக் கதவாண்ட நின்னுகினு தெரைக்கிப் பின்னாடி படம் பாக்குறது.

குறும்படங்கள் - கரடி

The Bear - Film by Jean-Jacques Annaud


23 August 2010

குறும்படங்கள் - தி ப்ளாக் ஹோல்

தி ப்ளாக் ஹோல்


நிறைய சொல்கிற ஒரு பேசாப்படம்

21 August 2010

ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்

Elia Kazan - USA
1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடிபெயர்ந்தார். அமெரிக்கா  பொருளாதாரத் தேக்கத்தால்  கடும்  அவதியில்  இருந்த காலம்.  கம்யூனிஸ்ட்  கட்சியில் உறுப்பினரானார். சிறிது  காலத்திற்குப்பின்  நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். 'க்ரூப்  த்தியேட்டர்' என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த  அமைப்பில்  இடதுசாரி  சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த  பல  நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.

வெண்ணிற இரவுகள்

Luchino Visconti di Modrone - Le notti bianche (White Nights), 1957, based on Fyodor Dostoevsky's short story
தாஸ்த்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற  இரவுகள்  கதையை  வலைத்தள மகாஜனங்களில்  பெரும்பாலானோர்  படித்திருக்க  வாய்ப்புகள்  அதிகம். முக்கியமான  காரணங்கள்,  மலிவுவிலை  சோவியத்  வெளியீடு.  சின்ன தலையணை. அநேகமாக  பொது  நூலகங்களில்  மற்றும்  நடைபாதை  பழைய புத்தகக்கடைகளில்  இன்றும் சுழற்சியிலிருப்பது.

19 August 2010

17 August 2010

ஹெய்மத்

Edgar Reitz - ஜெர்மனி

இண்டர்வ்யூ

Federico Fellini - இத்தாலி (1987)
இன்று Inception பார்த்தேன் மிரட்டி இருக்கிறார் Christopher Nolan. தொழில்நுட்ப பிருமாண்டம் பிரமிப்பை உண்டாக்குகிறது. கனவுக்குள் கனவுக்குள் கனவு.

1994ல் கல்கத்தா திரைப்படவிழாவின் நிறைவுப்படமாகவும் Felliniக்கு அஞ்சலியாகவும் இண்டர்வ்யூ படத்தைத் திரையிட்டார்கள். பொதுவாகவே விழாவின் நிறைவுப் படம்,விரைவு ரயில் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதனால்  சாய்ஸில்  விடப்பட்டுவிடும்.  அன்று  ரயிலைப் பிடித்த பலபேர் படத்தைத் தவற விட்டதற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.