15 July 2024

அதிகார பிலிம் காட்டல்

பொதுவாகவே நம் ஊரில், படித்தவன் புத்திசாலி படிக்காதவன் முட்டாள் என்கிற மூடநம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதிலும் படித்தவன் பெரிய பதவியில் இருந்து வேறு ஓய்வுபெற்றவனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவர் தெரியாமல் சொல்லிவிடுவாரா என்கிற மூடநம்பிக்கை வேறு சேர்ந்துகொள்ளும். 

சொந்தப் புத்தியையோ பொது அறிவையோ பயன்படுத்தி எவருமே யோசிப்பதில்லை. 

IAS ஆவதற்காகத் தேர்வு எழுதி IIS ஆகி Press Information Bureau வில் 34 வருடங்கள் சர்வீஸ் போட்டு அதில் அதிஉயர் பதவியான டைரக்டர் ஜெனரல் வரை போய் இடையில் 5 வருடங்கள் OSD to PMO வாக ஜாய்ண்ட் செகரெட்டரி ரேங்க்கில் இருந்து ஓய்வுபெற்றவர் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும். 

எப்படி இருக்கிறார், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் கே. முத்து குமார் என்பவர் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

IIS ஐயா, அசோசியேஷனில் மெம்பராக, விற்பனை ஆவணம் என்கிற Sale Deed இல்லையென்றாலும் கீழ்க்கண்ட ஆவணங்களில் எதாவது ஒன்று போதும் என்று 4 விஷயங்களைப் பட்டியலிடுகிறார். 

1.          Possession Certificate என்கிற வீட்டுச் சாவியைப் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ்.

இதைத் தவிர இவர் சொல்கிற மற்ற எல்லாமே வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும் காமெடிகள் என்பதால்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன்.

2.          Encumbrance Certificate என்கிற வில்லங்கச் சான்றிதழ்.

வீடு விற்பனை செய்யப்பட்ட பிறகுதானே அதைப் பதிவு செய்யவே முடியும். பதிவு செய்யப்பட்ட வீட்டிற்குத்தானே வில்லங்கச என்பது சான்றிதழை எடுக்கமுடியும். (Sale Deed)சேல் டீடே இல்லாத வீட்டிற்கு வில்லங்க சான்றிதழ் எங்கிருந்து வரும். IIS ஆண்டைக்கே வெளிச்சம். 

பட்டியலில் அடுத்தது ரெம்ப ஸ்பெஸல் அய்ட்டம்.

3.          Property Tax Receipt என்கிற சொத்து வரி ரசீது. 

IIS அய்யாவீடு இன்னும் பதிவு செய்யப்பட்டு என் சொத்தாகவே ஆகாதபோது எப்படி அய்யா சொத்து வரி கட்டமுடியும். சொத்துவரியே கட்டாமல் சொத்து வரி ரசீது மட்டும் எங்கிருந்து அய்யா வரும். 

இதென்ன பிரமாதம். அடுத்துவரதைப் பாருங்க. ச்சும்மா அதிருமில்ல.

4.          நம் பெயரில் இருக்கிற மின்கட்டண ரசீது அல்லது நீர் கட்டண ரசீது 

என் ஃப்ளாட்டுக்கான மின்சார கட்டணத்தைச் செலுத்துவதற்கான TANGEDCO  ஆப் இது. இந்த வீட்டை ‘வாங்கி’ 6 வருடங்களுக்கு மேல் ஆகியும் நான் இன்னும் வீட்டைப் பதிவு செய்யவில்லை என்பதால் இணைப்பு இன்னும் EE & AO பெயரில்தான் இருக்கிறது. என் பெயரிலேயே இல்லாத மின் இணைப்புக்கு, கட்டண ரசீது மட்டும் எப்படி என் பெயரில் வரும்.

அடுத்து - அல்லது நீர் கட்டணம் கட்டிய ரசீது என்று ‘கைப்புள்ளஅளவுக்கு அடித்துவிடுகிறார் IIS அய்யாசாமி. 

இவர் செக்கூலர் என்றாலும் நான் கருப்பு சிவப்பு காவி என எல்லாவற்றையும்  வெள்ளாவியில் வைத்து வெளுத்து விடுகிறேன் என்பதால் RSS அம்மைகளின் இருவரணியொன்று இவருக்கு ஆதரவாக அச்சுபிச்சென உளறிக்கொண்டு ஓடிவரும். என்னைப் பாப்பானாகப் பார்க்கும் திராவிடப் பன்னாடைகளும் கூச்சமே இல்லாமல் இந்த இந்துத்வ சாணிகளோடு கூட்டணி அமைத்துக்கொள்ளும் எனக்கு எதிராக.

TNHB 1500 சோழிங்கநல்லூரில் மெட்ரோ வாட்டர் என்ன ஒவ்வொரு வீட்டிற்கும் இபி போல தனித்தனி மீட்டரையா பொருத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த வளாகத்திற்கும் சேர்த்துதானே அசோசியேஷன் மே முதல் ஒவ்வொரு மாதமும் நீர் கட்டணத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறது. அதனால்தானே அசோசியேஷனுக்கு மெய்ண்ட்டனன்ஸ் கட்டியவர் முதல் மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் நீரை ஓசியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ், ரிடையர்டு ஜட்ஜ் ஜீவானந்தம் போன்ற நடமாடும் தெய்வங்கள் எல்லாம் சுத்தப்படுத்தி வைக்கப்பட்ட வளாகத்தில் ஒட்டுண்ணிகளாய் காலையும் மாலையும் நடை போய்க்கொண்டு இருக்க முடிகிறது.  

ஆக, ஒட்டுமொத்தமாக எல்லோரும் பயன்படுத்தும் நீருக்கான பில்லை, அசோசியேஷன்தான் கட்டுகிறது எனும்போது அசோசியேஷனில் ‘சேர வருபவருக்கு’ அவர் பெயரில் கட்டிய தண்ணி பில்லு எங்கிருந்து வரும். 

எனவே, மேற்படி ஆவணங்கள் அனைத்துக்கும் Sale Deed  என்கிற விற்பனை ஆவணமே அடிப்படை. இது இப்படி இருக்க, சேல் டீடே இல்லாவிட்டாலும்... என்கிற பீடிகையுடன் ஆரம்பிக்க, முத்து குமாருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும். எல்லாம், ஒரு காலத்தில் IISஆக இருந்தது கொடுக்கிற தன்னம்பிக்கைதான் வேறென்ன.

தமிழராகவே இருந்தாலும் தமிழே புரியாத இவர் இவ்வளவு அபத்தமாக உளறிக்கொட்டிக்கொண்டு இருந்தாலும் கூடவே விவகாரமாகத் திரித்துக்கொண்டும் இருப்பவர் என்றாலும் இவரும் ஒரு ஆளாக வாட்ஸப்பில் திரிந்துகொண்டு இருப்பதற்கு அடிப்படைக் காரணம், உளறுவதை இங்கிலீஷில் உளறிக்கொண்டிருக்கிறார் என்பதுதான். அதோடுகூடஊர்ப்பக்கம் ரெக்கார்டு டான்ஸ் ஆடுகிற பெண்களின் உடம்பிலும் உடையிலும் ஜிகினா பளபளப்பதைப்போல அகராதியில் இருக்கிற வார்த்தைகளை அள்ளி அங்கங்கே தூவி வைக்கிறார் என்பதும் சேர்ந்து எல்லோரையும் நியூசன்ஸ் கேஸாக மிரட்டிவிடுகிறது. 

வளாகத்திலேயே வசிக்காமல் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலைகளின் அரசியின் மடிமேல் அமர்ந்துகொண்டு, உள்ளூர அனைவரையும் அறிவிலிகளாக எண்ணிக்கொண்டாலும் ஒவ்வொரு போஸ்டின் இறுதியிலும் அரசியல்வாதி போலப் போலிப் பணிவுடன் கும்பிடு இமோஜி ஒன்றைத் தவறாமல் போட்டுக்கொள்வதும் பெரிய மனிதர் என்கிற போலி முகத்தை அளித்து இவரைத் தப்பிக்கவைத்துக்கொண்டு இருக்கிறது. 

உள்ளீடற்று, இந்த லட்சணத்தில் அடிப்படையே தெரியாமல் இருக்கிற இவர் பேச்சைக் கேட்டு, வாட்ஸப்பில் இவர் சுட்டுத் தள்ளிக்கொண்டு இருக்கிற அறிவுரை வடைகளின்படியும் ஆலோசனை வடைகளின்படியும் அசோசியேஷனை நடத்தவில்லை என்று நலச்சங்கத்தையும் குறிப்பாக சங்கச்  செயலாளரையும் என்னோடு இணைத்து பதிவுக்குப் பதிவு வறுத்து எடுத்துகொண்டு இருக்கிறார் – யாருமே இவரை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை அசோசியேஷன் உட்பட என்பதே தெரியாமல். 

இவரைப்போல வெட்டியாக இல்லாமல் தலைக்குமேல் கிடக்கிற சொந்த வேலைகள் சோற்றுக்கான வேலைகள் போக அசோசியேஷன் வேலைகளையும் அர்ப்பணிப்போடு இழுத்துப் போட்டுக்கொண்டு தன்னலமற்று செய்துகொண்டிருப்பவர்களுக்கு இவர் செலுத்தும் கைமாறு இதுதான். 

நலச்சங்கத்தில் நான் யாருமில்லை; எப்போதும் நான் யாருடனும் இருப்பவனும் இல்லை; யாராலும் என்னைக் கட்டுப்படுத்தவும் முடியாது என்பது, என்னைத் தெரிந்த என் எழுத்தைப் படித்த எல்லோருக்கும் தெரியும். எதுவுமே தெரியாத IIS அய்யாவுக்கு இதுமட்டும் எப்படித் தெரிந்திருக்கமுடியும்.

எனவே, வாட்ஸப்பில் இங்கிலீஷில் வடை சுட்டுக்கொண்டு இருப்பவர் ‘எல்லாம்புத்திசாலி என்றோ ஐஏஎஸ் படித்தவர் ‘எல்லாம்அறிவாளி என்றோ இந்தியப் பிரதமருக்கே சிறப்பு அதிகாரி என்கிற பதவியில் இருந்தவர் ‘எல்லாம்‘மிகவும் திறமைசாலியாகத்தான் இருப்பார்’ என்றோ ‘நம்பாதீர்கள்’. பாவப்பட்ட பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டு நிற்பதில் தப்பில்லை. நாமும் அதையே செய்துகொண்டு இருக்கலாமா. 

யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்கு, பொது அறிவுக்கு, பொருந்தாத எதையும் நம்பாதே 

-       பெரியார்

19 June 2024

டுபாகூர் ரைட்டிங்

//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன்  எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும்  குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக்   கடந்து சென்று  கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது  செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

07 June 2024

சாம்பார்

திடீரெனப் பசியெடுத்தது இருவருக்கும். என்ன சமைப்பது என்று பிடிபடவில்லை என்பதோடு அவளுக்குக் கண்ணும் சொக்கவே, 'என்ன செய்யறது' என்றாள்.

‘BBயில் வரவழைத்த அல்மண்ட் ஹனி கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிட்டால் போயிற்று’ என்றேன்.
‘நீங்க சாப்ட்டுடுவீங்க. அது இனிப்பினிப்பா இருக்குமே’ என்றாள்.

04 April 2024

எல்லோரையும் பொருட்படுத்துவது நேர விரயம்

ஒரு சமயம் உங்கள் புனைவு என்னும் புதிர் நூல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தேன்.

அதன் தலைப்பில் ஒரு பிழை உண்டு. (என்னும் - எனும்)

22 February 2024

இலக்கியத்த கத்துக்கப் போறேண்டி

Sun, 4 Feb


வணக்கம் 12:54 PM

யெஸ் 12:55 PM


மாணவரா 12:56 PM
இல்லைங்க வாசகன் தான் 12:57 PM

புக்கு வாங்கமுடியாதவரா 12:57 PM


ஆமாம் 12:58 PM

21 February 2024

சாரி டமில் மதர்

இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா) 

30 January 2024

ஓஎம்மாரும் ஓல்டு மெட்ராஸும்

ஒருவாரமாகவே என் Mac Adapter படுத்திக்கொண்டுதானிருந்தது. அதற்காக அதைக் கோபித்துக்கொள்வதும் நியாயமில்லை. 2018 ஜனவரியில் வாங்கியது 2023 டிசம்பர் வரை ஓடாய் உழைத்திருக்கிறது. அதுவும் 'கசடறதபற'வை வேர்டுக்கு கன்வர்ட் பண்ண ஆரம்பித்ததில் இருந்தே 24 மணிநேரமும் ஆனிலேயே இருந்துகொண்டு இருக்கிறது.

10 January 2024

குடும்பத்தில் ஒரு குழப்பம்

ஆபீஸ் 82 தெளிவு படிச்சியே இந்த வார புனைவு என்னும் புதிர் படிச்சியா. ரொம்பச் சின்னதாச்சே

நீதான சொன்னே, இந்தக் கதை உலகச் சிறுகதைகள் 2ல இருக்கு புக்குல படிச்சிக்கோன்னு. நீ புக்கே குடுக்கலையே

08 January 2024

உள்ளதைச் சொல்லுகிறேன்

உலகச் சிறுகதைகள் 1 & 2, இதுவரை முன்பதிவு செய்துகொண்டு பணம் அனுப்பியிருப்பவர்கள் முறையே 124 & 102 

இவற்றில் முதல் தொகுதிக்கான அட்டை டிசைன்புத்தக வடிவமைப்பு, 252 பிரதிகளுக்கான (PODயில் காப்பி எண்ணிக்கை 4ல் இருக்கவேண்டும் என்பதால் கேட்ட 250, 252ஆக ஆகிவிட்டது) அச்சடிப்பு எனச் செலவிட்ட மொத்தப் பணத்தையும் முதல் தொகுதிக்கு முன்பதிவுத் திட்டத்தில் 124 நூல்களுக்கு நீங்கள் அனுப்பிய பணமே ஈடுகட்டி விட்டது. 

22 October 2023

பயமுறுத்தும் பாத்திரம்

நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 

41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது. 

***

சினிமாவில் நடிக்கிற வெறியில் வெளி மாநிலத்திலிருந்து வந்து எல்லாவற்றையும் இழந்து, இனி பிச்சைக்காரன் வேடத்தில் மட்டுமே நடிக்கமுடியும் என்கிற அளவிற்கு நாசமாகிப்போன தெரிந்தவன் ஒருவனை சில நாட்களுக்குமுன் தற்செயலாகத் தெருவில் சந்தித்தான்.

என்ன நான் கேல்விப்பட்டது...


ஆமா.


நிஜமாவே சாமியாராகப் போகப் போறீங்களா.


ஆமா.


இனிமேல் உங்க ஜிப்பா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் உங்குளுக்கு யூஸாகாது இல்லையா. எனக்குக் குடுத்துடுங்கலேன்


அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனுக்கு ஒரு டீ பிஸ்கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்