17 January 2017

கரையாத நினைவுகள்

இன்று, ஏறக்குறைய ஏழரை மணியளவில் தொடங்கி, புத்தகக் கண்காட்சியின் ஒரு வரிசையைக் கூட விடாது சுற்றி வந்தேன் - நான் எவ்வளவு பிரபலம் என்பதை எனக்கு நானே தெரிந்துகொள்ள. குறைந்தபட்சம் என்னை யாரேனும் அடையாளமாவது தெரிந்துகொள்கிறார்களா அட்லீஸ்ட் யாரோ போல் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்கிற சந்தேகக் குறியேனும் எந்த முகத்திலாவது தெரிகிறதா என எதிர்படும் முகங்களையெல்லாம் துழாவியபடி சென்றுகொண்டிருந்தேன். டைகூட அடிக்க வக்கில்லாத இந்தத் தாடிக்காரப் பயல் நம்மை ஏன் இப்படிப் பார்க்கிறான் என்கிற ஐயத்தைத்தான் காண முடிந்தது. முன்றில் கடையைக் கடந்தபோது, கருப்பி டி சர்ட் அணிந்த இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சள் டி சர்ட்டிடம் குனிந்தது தெரிந்தது என் பிரமையாகக்கூட இருக்கலாம். எல்லோரும் என் தலை தட்டுப்பட்டதுமே எண்பது தொண்ணூறடி தூரத்திலேயே, என்னைத் தெரியாத பாவனையை மிகுந்த பிரயாசையுடன் தங்கள் முகங்களில் அணிந்து கொள்வதாக பாவித்துக் கொள்வதுதான் எவ்வளவு இதமாக இருக்கிறது. 

14 January 2017

அடத் தேவாங்கே

யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன்.