21 August 2010

ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்

Elia Kazan - USA
1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடிபெயர்ந்தார். அமெரிக்கா  பொருளாதாரத் தேக்கத்தால்  கடும்  அவதியில்  இருந்த காலம்.  கம்யூனிஸ்ட்  கட்சியில் உறுப்பினரானார். சிறிது  காலத்திற்குப்பின்  நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். 'க்ரூப்  த்தியேட்டர்' என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த  அமைப்பில்  இடதுசாரி  சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த  பல  நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.
 டென்னினிஸி வில்லியம்ஸின் A Streetcar Named Desire (1947) நாடகம் (1951) சினிமா  மிகப்பெரும் பெயர் வாங்கித் தந்தது. மார்லென் ப்ராண்டோதான்  இரண்டிலுமே   நாயகன். எலியா  கஸான்தான் இரண்டையுமே  இயக்குநர்.
24 வயதில் மார்லென் பிரண்டோ Streetcar Named Desire
நாடகத்தின் பின் அரங்கில் (1947)

1947 ல் ஹாலிவுட்டுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரி அனுதாபிகளை  'கண்டுபிடிக்க'  Joseph McCarthy's House Un-American Activities Committee  (HUAC)  நியமிப்பட்டது. 'துப்பறிந்து' பத்து  பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள்.  தண்டனை  அனுபவித்து  வெளிவந்தவர்களை  திரைப்பட நிருவனங்கள்  புறக்கணிக்கித்தன.  அவர்களின்  கனவுகள்  மிகுந்த எதிர்காலம் கேள்விக்குறியாகியது.

1952 ல் HUAC அமெரிக்க வாழ்முறையின் எதிரிகளை அடையாளம்  காட்டச்  சொல்லி  வற்புறுத்தப்படார்  எலியா   கஸான்.   நண்பர்களையும் தோழர்களையும்  'காட்டிக்கொடுக்க'  மறுத்தார்.  'ஒத்துழைக்கவில்லை' என்றால் ஹாலிவுட்டில்  அவரது  எதிர்காலம்  முடிந்துவிடும்  என்று   20 ம்  நூற்றாண்டு நரி நிருவண  அதிபரால்  மிரட்டப் படுகிறார்.  கலக்கத்திற்கு ஆளாகி, ஆரம்ப  நாட்களில்  க்ரூப்  த்தியேட்டரில்  தம்மோடு  இருந்தவர்களின் பெயர்களைத்  தெரிவிக்கிறார்.  உலகெங்கிலும்  இருந்து  கண்டனங்கள்.  ஏற்கெனவே கமிட்டிக்குத் தெரிந்திருந்த பெயர்களையேக் கொடுத்ததாகவும் தாமாக யாரையும்  'காட்டிக் கொடுக்கவில்லை'  என்றும்    கூறியது   ஹாலிவுட்டுக்கு உள்ளும்  வெளியிலும்  சமாளிப்பாகவே  கருதப்பட்டது. தனது  நிலையை நியாயப்படுத்தி முழுபக்க விளம்பரம் கொடுத்தார்.

1954 ல் ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட் என்கிற இந்தப் படத்தை இயக்கினார்.
துறைமுத்தின் தொழிலாளர்கள் சங்கத்தை, கொலைபாதகத்திற்கும் அஞ்சாத ஒருவன்  தன்னுடுய  கட்டுப்பாட்டில்  வைத்திருக்கிறான்.  ஒரு இளம்  தொழிலாளி  அந்த  சமூக   விரோதிகளின்  'பெயர்களை'  வெளியிட்டதற்காக அடிவாங்குகிறான்.

நிர்பந்தத்தினால் தாம் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கொடுத்த விளம்பரம் போல இது சினிமாவாக எடுக்கப்பட்ட விளம்பரம். படத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படியா தோன்றுகிறது.
சில  கதைகள்  மன  அவசத்தினால்  கூட  பிறந்திருக்கலாம் - 1950 லேயே இறந்து  போன  புதுமைப்பித்தன்  தீர்க்கதரிசனமாக சொல்லிவைத்த வார்த்தையல்லவா. லத்தியால் உருவான யானை  ஒன்றுக்கடித்து  பு  பி  யை  அவமானபடுத்த  முடியுமா  அதன்   அளவை   அது   காட்டுகிறது  அவ்வளவுதான்.


1999 ஆஸ்கார் விழாவில் எலியா கஸான் வாழ்நாள் சாதனைக்காக கெளரவப் படுத்தப்பட்டபோது எதிர்ப்பு எழுந்தது.

எல்லா பிரச்சிசினைகளுக்கும்  எளிய  தீர்வுகள்  இருக்குமேயானால்  வாழ்க்கை எவ்வளவு  ரம்மியமாக   இருக்கும்.   கயமைக்காக   கலையை   திரஸ்கரிப்பதா கலைக்காக  கயமையை   கண்டுகொள்ளாமல்   இருப்பதா?   இருத்தலின் நிரந்தரப்  பிரச்சனை.


ஆன்  தி  வாட்டர்  ஃப்ரண்ட்  வெளியாகி  வசூல் ரீதியாகவும்  மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எட்டு ஆஸ்கார் பரிசுகளை வென்றது

Best Actor in a Leading Role: Marlon Brando
Best Actress in a Supporting Role:Eva Marie Saint
Best Art Direction-Set Decoration, Black-and-White:Richard Day
Best Cinematography, Black-and-White:Boris Kaufman
Best Director:Elia Kazan
Best Film Editing:Gene Milford
Best Picture:Sam Spiegel
Best Writing, Story and Screenplay:Budd Schulberg
இந்தப்  படத்தைப்  பற்றி  நிறைய  கேள்விப்பட்டிருக்கூடும் திரையில் பார்த்திருக்கவும் வாய்ப்புகள்    குறைவு.  DVD     கிடைக்கிறது.   அப்புறம்  நானென்ன  நடுவில்.  படம்  பாருங்கள்.
மர்லென் பிராண்டொவை எவ்வளவு முறை பார்த்தாலும் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.  ஏதாவது  கிடைத்துக்  கொண்டே  இருக்கிறது.
மேதைமை  இருந்துகொண்டே  இருக்கிறது,  முதலும்  முடிவுமின்றி உருவாக்கப்பட்ட  தோற்றம்  அழித்து.  நாம்  நம்மை  புதுப்பித்துக் கொள்வோமாக. ஆமென்.
தகவல்களுக்கு: