17 August 2010

இண்டர்வ்யூ

Federico Fellini - இத்தாலி (1987)
இன்று Inception பார்த்தேன் மிரட்டி இருக்கிறார் Christopher Nolan. தொழில்நுட்ப பிருமாண்டம் பிரமிப்பை உண்டாக்குகிறது. கனவுக்குள் கனவுக்குள் கனவு.

1994ல் கல்கத்தா திரைப்படவிழாவின் நிறைவுப்படமாகவும் Felliniக்கு அஞ்சலியாகவும் இண்டர்வ்யூ படத்தைத் திரையிட்டார்கள். பொதுவாகவே விழாவின் நிறைவுப் படம்,விரைவு ரயில் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதனால்  சாய்ஸில்  விடப்பட்டுவிடும்.  அன்று  ரயிலைப் பிடித்த பலபேர் படத்தைத் தவற விட்டதற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.
Felliniயை இண்டர்வ்யூ எடுக்க ஒரு ஜப்பானிய திரைப்படக்குழு காமிராவும் கையுமாக வருகிறது. ஃபெலினி படம் எடுத்துக்கொடிண்ருப்பதை அவர்கள் படம் எடுக்கிறார்கள். ஃபெலினி எடுத்துக்கொண்டிருப்பதோ ஒரு டைரக்டர் படம்  எடுத்துக் கொண்டிருப்பதைப்  பற்றி.  அந்தப்படமோ  இளம் பத்திரிக்கையாளனாக சினிசிட்டா என்கிற ஸ்டூடியோவுக்குள் நடிகையை இண்ட்டர்வ்யூ எடுக்கவரும் ஃபெலினியைப்பற்றி. கொஞ்சம் இருங்கள் எங்கோ தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறன். அதாவது.......
தெருவோர  படபிடிப்பிலேயே  எல்லோரும்  பார்த்திருக்கக் கூடும் காமிராவிற்கு  முன்னும்  பின்னும்  இருக்கக்கூடிய  கூட்டத்தை,  இதை ஒருவர்  இயக்கிக்கொண்டு இருப்பார்.  இந்தப்படத்தில்  ஜப்பானியத் திரைக்குழுவும்  நடிகர்கள்,  அவர்களையும்  சேர்த்து  ஃபெலினி  இயக்கியபடியே  டைரக்டராக  நடித்துக்கொண்டு  இருப்பதாக  இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
Anita Ekberg
சவரக்கடை கண்ணாடி பிம்ப பிரதிபலிப்பு விளையாட்டை லவலேசக் குழப்பமும் இல்லாமல் சினிமாவின் பின்புலத்தில் கரையும் நிழல்களை திரையிலே காட்டியிருப்பார்.
Marcello Mastroianni
எழுதிக்கொண்டே போகலாம் பக்கம் பக்கமாய் ஆனால் பார்ப்பதில் கிடைக்கிற பரவசத்தை எழுதிக்கெடுத்த பழி எனக்கெதற்கு?

87ல் எடுக்கப்பட்ட படம்.

பல சமயம் பணம் மட்டுமே படம் எடுக்க உதவுவதில்லை.

The more things change, the more they remain the same

DVD பார்ஸன் பேஸ்மெண்டில் 30-40 க்குக் கிடைக்கிறது வாங்கிப் பாருங்கள். (திருட்டு DVD என்று முடிவாகிவிட்டது Blu Ray copy யாகக் கேட்டு வாங்கிப் பளிச்சென்று பாருங்கள்)

மேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்கவும் (படம் பார்த்தபின்)

 http://en.wikipedia.org/wiki/Intervista

http://www.imdb.com/title/tt0093267/