17 August 2010

ஹெய்மத்

Edgar Reitz - ஜெர்மனி
அப்போதைய மெட்ராஸில் (எனக்கு எப்போதுமே இது மெட்ராஸ்தான்) ஃபில்ம் சேம்பரில், ஹெய்மத் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியும் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஜெர்மன் கல்ச்சுரல் சென்ட்டரும் இணந்து திரையிட்டன. இந்த ஒரு படத்தைத் திரையிட்டதற்காக மட்டுமே CFSக்கு (சிவக்குமார், ஹரிஹரன், கல்யாணராமன் என எத்தனை பேரின் உழைப்பும் ஆர்வமும்) என் சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள்.

சுகுமாரனும் நா.விச்வநாதனும் (பாதசாரி) கோவையிலிருந்து இதற்காகவே வந்து தங்கியிருந்து பார்த்தனர்.

ஏதோ பட்டறை போல காலை 9 1/2 மணிக்குத் தொடங்கி 11 1/2 க்கு டீ 1 லிருந்து 2 சாப்பாடு 3 1/2 க்கு டீ 5 1/2 க்கு இண்டர்வெல்.

ஆமாம் மீதி படம் அடுத்த நாள். படத்தின் நீளம் 16 மணி நேரம்.

அப்படி என்னதான் நூதனமான விஷயத்தை அதில் சொல்லிட்டான். ஒரு கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பிரிதல், கூடுதல், வம்ஸம் விருத்தியாகிறது. குக்கிராமம் ஊராகி நாடு வல்லரசாகி போர் புரிந்து சுடுகாடாகி திரும்ப மறுபிறப்பெடுத்து தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி தனக்கும் இடைப்பட்ட வீழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதாக மீண்டெழுந்து இவ்வளவுக்கும் இடையில் இளம் பெண்ணாக இருந்த ஒருத்தி காதலித்து குழந்தைகள் பெற்று கணவனைப் பிரிந்து வேறொருவனோடும் குழந்தை பெற்று அவனையும் விபத்தில் இழந்து இருபது வருடம் கழித்து வீடு திரும்பிய கணவனை வேறு யாரோவாக பாவித்து முதுமையடைந்து இறக்கிறாள் .

1980களில் படம் முடிகிறது.

படத்தலைப்பிற்கு அர்த்தம் என்னவோ? அதுவா வேற ஒன்னுமில்லே 'வீடு' என்று பொருள்.

கதை 1919ல் முதல் உலகப் போரிலிருந்து சிமோன் வீடு திரும்புவதில் தொடங்குகிறது.

கதையின் நாயகி மட்டும் 20 லிருந்து 80 வயதுவரை ஒரே பெண்.

முழுமையாக உருப்பெற்று வந்திருக்கும் பாத்திரங்கள் மட்டுமே முப்பதைத் தாண்டும்.  கோட்டோவியமாய்  நான்கு  கிறுக்கலில்  எழுந்து  நிற்பவை மட்டுமே 50 தைத்தாண்டும். ஆனால் சிறு குழப்பமும் இருக்காது, யார் யார் என்னென்னவாக  இருந்தார்கள்,  இருக்கிறார்கள்  என்னவாக  ஆகிறார்கள் என்பதெல்லாம்  தெளிவாக  இருக்கும்.  பதட்டத்துடன்  குறிப்பேட்டைப் புரட்டத்  தேவையில்லை.

DVD எங்கே கிடைக்கும் என்று மட்டும் கேட்காதீர்கள், அதைத்தான் நானும் 86 லிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்.

இப்போதுதான் அப்பா அம்மாவையே இன்டர்நெட்டில் வாங்கிக்கொள்ள முடிகிறதே, இது முடியாதா என்ன? தேடுங்கள் கண்டடைவீர்கள். எனக்கும் தெரிவியுங்கள்
ஸ்லைட்ஷோ http://www.toutlecine.com/images/tag/0008/00084737-eva-maria-bayerwaltz.html



Disc 1 (120')
Episode 1 "The Call of Faraway Places (1919-1928)" (119'18")
Released from a French POW camp at the end of the Great War, Paul Simon returns to his home village of Schabbach in the Hunsruck determined to persue his fascination with radio communications rather than the traditional family trade of blacksmithing. Alois Wiegand - a wealthy farmer, who has become Mayor of Schabbach - shares Paul's enthusiasm for technology (he has just purchased a motorcycle and will later own the village's first motor car) and provides the financial backing for Paul's first wireless set...   
Disc 2 (148')
Episode 2 "The Centre of the World (1929-1933)" (89'37")
Paul arrives at Ellis Island in New York, while back in Schabbach the pine marten is finally caught in the trap and the dead woman's bloodied clothes are found in the wood. The arrival of an aristocratic French horsewoman also causes a momentary stir, but the villagers are too bound up in their daily round to remain curious about her for long...
Episode 3 "The Best Christmas Ever (1935)" (57'50")
Schabbach is now connected to the telephone network. But Lucie is far from content with the pace of her husband's progress. Consequently, she ingratiates herself with the district's new Gauleiter, who not only shares Eduard's surname, but also his interest in photography. Exploiting their new Party connections, the couple moves to the neighbouring village of Rhaunen, where Eduard becomes mayor and Lucie commissions a luxurious villa - paid for a loan from a Jewish bank in Mainz...
Disc 3 (176')
Episode 4 "The Highway (1938)" (58'19")
Maria and Pauline go to the cinema to see the latest Zarah Leander movie in Simmern. Back home, they get tipsy and dress up as Spanish dancers. Maria confides that she is keen on Otto Wohlleben, the engineer supervising the six thousand-strong Todt's labour brigade that is building a new road through the region. Robert returns from buying jewellery and shows them the death's head rings that are so popular with the Todt crew...

Episode 5 "Up and Away and Back (1938-1939)" (58'36")
Tragedy strikes when Lucie's visiting parents are killed in a car crash in the woods, confirming the villagers' suspicion that the outside world can no longer be kept at bay because of the intrusive road...
Episode 6 "The Home Front" (1943)" (58'37")
Disc 4 (161')
Episode 7 "Soldiers and Love (1944)" (58'36")
As the Wehrmacht goes on the retreat in Russia, Anton's propaganda unit is detailed to fake newsreel footage of Partisan activity by executing POWs in the woods...
Episode 8 " The American (1945-1947)" (102'02")
Disc 5 (139')
Episode 9 "Little Herman" (1955-1956)" (138'25")
Disc 6 (183')
Episode 10 "The Front Years (1967-1969)" (82'08")
Episode 11 "The Feast of the Living and the Dead (1982)" (100'23")
Maria has died and the family has assembled in Schabbach to pay their respects - including Paul and some relatives from Brazil. However , Hermann almost misses the funeral and arrives in the village during a torrential downpour to see his mother's coffin abandoned on the road...
Some episodes seem to be softer and grainier than other, over all they are quite acceptable. Black and white sequences tend to be much crisper with nice rendition of blacks. Occasional dithering and artifacts are occasionally present but within an acceptable level. Audio is also up to par and subtitles appear to be well translated.
Note: Manu on Disc 6 has wrongly titled Episode # 10 as "The Proud Years" instead of "The Front Years".

மேலதிகத் தகவலுக்கு



பிகு: முதல் நாள் மதியம் ஃபில்ம் சேம்பரிலிருந்த் ட்ரைவ்-இன்-உட்லண்ட்ஸுக்கு மதிய உணவிற்காக நடந்து வந்தவர்கள் சி.மோகன், வஸந்தகுமார், பஷீர், சுகுமாரன், நா.விஸ்வநாதன் மற்றும் நான். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் அனேகமாக யாரும் யாரோடும் சகஜ பாவத்தில்கூட இன்று இல்லை. நட்போடு இருக்கக்கூடிய ஒரே நபர் நான்தான், (அத்தி பூத்தார்போல் எப்போதெனும்தான் சந்திப்பு என்றபோதிலும்). இத்தனைக்கும் இரவு பத்துமணி வாக்கில் என்னைப் பார்க்க நேர்ந்தால் அப்போதெலாம் பதறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். நம்ம கையில மாட்டினா ரெண்டா நாலா ஆறான்னு (சமயத்தில் மறு நாள் மாலை ஆறாகக் கூட) யார் கண்டா? எல்லாரும் ஒன்னா சேந்து போக மனசு வெச்சாலும் ட்ரைவ்-இன்னைத் தாத்தா சூ மந்திரக்காளி ஆக்கிட்டாரே. ஒரு விதத்தில் பார்த்தால் இதுகூட ஹெய்மத் போலத்தான். எத்தனை பிரிவுகள். ஆனால் அவரவர்க்கு அவரவர் நியாயம். அட அதனாலதான் அது பெரிய கலைப்படைப்பாக இருக்கிறது.