11 July 2015

மிஸ்டர் எவிடென்ஸ்

//ஒகே..நீங்கள் சொல்லுவது போன்று அவர் பிராமணர் இல்லை என்றே நான் ஒப்பு கொள்ளுகிறேன்.பிழையாக எழுதி இருந்தால் சாரி..கேட்கிறேன் .ஆனால் அவர் பிராமனர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இதுவரை அவரிடம் நேரடி தொடர்பு உள்ள 15 நபர்களிடம் பேசினேன்.மாலன் பிரமன்ர்தான் என்கின்றனர்.அவர் பிராமனர் இல்லை என்றாலும் பிராமணர் என்று அவருடன் நட்பில் இருப்பவர்கள் கருதுவதற்கு என்ன காரணம்? சரி..அது ஒரு பக்கம் இருக்கட்டும்.நான் மறுபடியும் கேட்கிறேன். நான் மதிக்கும் மாலன் அவர்கள் தலித்துகள் பிரச்னையை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே இது குறித்து ஏன் ஒருவரும் கேட்கவில்லை.அதை விடுங்கள் சாமி....தினம் தோறும் கோகுல்ராஜ் ராஜ் குறித்து பல்வேறு ஆங்கில ஊடகத்தில் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் உள்ளிட்ட தமிழ் இதழிகளிலும் செய்திகள் வந்து இருக்கின்றன.ஏன் அவரது புதிய தலைமுறை இதழில் செய்தி வரவில்லை?//


//ஆனால் அவர் பிராமனர் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்?//

மாலன் பிராமணர் இல்லை என்பது மட்டுமல்ல என் பதிவில் கூறியதுபோல அவர் சைவப் பிள்ளை என்பதற்கான ஆதாரம் இதோ http://i59.tinypic.com/2a6wmk6.jpg 

https://www.facebook.com/vmaamallan/posts/456455881084290?comment_id=4387153&offset=0&total_comments=10

நீங்கள், மாலன் மீது வைத்த விமர்சனம், மாலன் பிராமணராக இல்லாமல், சைவ வேளாளப் பிள்ளையாக இருக்கும்போதும் எப்படிப் பொருந்தும் என்பதையும் என் பதிவில் 'மோர் தேன் பிராமின்' என்பதை சைவப் பிள்ளைமார்களின் சம்பவங்களுடன் தெளிவாகக் குறிப்பிட்டு விளக்கியுள்ளேன். இணைய படிப்பாளிகள் போல நீங்களும் ஸ்கிம் பண்ணிப் படிப்பவர்தாம் என்றால் நிதானமாய் படிக்க வசதியாய் பழைய பதிவின் சுட்டி.

https://www.facebook.com/vmaamallan/posts/945917325471474?pnref=story

//இதுவரை அவரிடம் நேரடி தொடர்பு உள்ள 15 நபர்களிடம் பேசினேன்.மாலன் பிரமன்ர்தான் என்கின்றனர்// 

உண்மை அறியாத, அனுமானத்தில் ஓட்டும் அறைகுரைகள் ஏராளம் அதற்கெல்லாம் நான் என்ன செய்ய. நம் ஊரில், பிராமணரல்லாதோரில் பலருக்கு, கொஞ்சம் வெளுப்பாய் இருப்பவனெல்லாம் பார்ப்பான். பார்ப்பனரில் பெரும்பாலோருக்கு, வெளியில் சொல்லிக்கொள்ளா விட்டாலும் கருப்பாய் இருப்பவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாய் சூத்ரா. 

//அவர் பிராமனர் இல்லை என்றாலும் பிராமணர் என்று அவருடன் நட்பில் இருப்பவர்கள் கருதுவதற்கு என்ன காரணம்?// 

பொதுவான காரணம், மாலனுடன் நட்பாய் இருப்போரில் நீர் தேர்ந்தெடுத்தவை எதுவும் தெரியாமல் ஆனால் எல்லாம் தெரிந்ததாய் எண்ணிக்கொள்ளும் முண்டங்கள் என்பது. அவர்கள் அப்படி நினைக்கும்படி மாலன் நடந்துகொள்ள சிறப்பான காரணம்... வேறென்ன ஓசியில் கிடைக்கிற முத்தத்தை உளறிக் கெடுப்பானேன் என்கிற சைவைப் பிள்ளைமார் சாத்வீக புத்திசாலித்தனம்தான்.

//சரி..அது ஒரு பக்கம் இருக்கட்டும்.நான் மறுபடியும் கேட்கிறேன். நான் மதிக்கும் மாலன் அவர்கள் தலித்துகள் பிரச்னையை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே// 

நீங்கள் ஏன் அவரை மதிக்கிறீர்கள் என்பதை ஓப்பனாய் சொல்ல முடியாத அளவுக்கு அப்படியென்ன ரகசியம். 

 //இது குறித்து ஏன் ஒருவரும் கேட்கவில்லை.// 

:))) 

//அதை விடுங்கள் சாமி....தினம் தோறும் கோகுல்ராஜ் ராஜ் குறித்து பல்வேறு ஆங்கில ஊடகத்தில் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் உள்ளிட்ட தமிழ் இதழிகளிலும் செய்திகள் வந்து இருக்கின்றன.ஏன் அவரது புதிய தலைமுறை இதழில் செய்தி வரவில்லை?//

மாலன் என்கிற தனி நபரைப் பிடித்து உலுக்குங்கள். அதை விடுத்து இப்படித் தத்துபித்தென தலித்துகளுக்கு ஆதவாய் குரல்கொடுக்காத எல்லோருக்கும் தப்புத்தப்பான ஜாதி பெயரில் காரணம் கற்பித்துக்கொண்டு இருந்தால் உங்கள் தரம் இதுதான் என்று சுலபமாய் அடித்து ஒதுக்கிவிட நீங்களே வழியமைத்துக் கொடுத்தவராக ஆகிவிடுவீர்கள்.

15 பேரிடம் விசாரித்து அவர் பிராமணர்தான் என்று தெளிவாகியிருந்தால், உங்கள் பதிவை, என் ஒருவனுக்காக நீங்கள் நீக்கியிருக்கத் தேவையே இல்லையே. 

பிராமணராகவோ, ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்திருந்தாலும் திருநெல்வேலியைப் பூர்வீகமாய்க் கொண்ட சைவைவப் பிள்ளையாகவோ இல்லாமல், மாலன் என்கிறவர் எந்த ஜாதியுமே இல்லாமல் வானில் இருந்து நேரடியாய் குதித்த தனி நபராகவே இருந்து ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருந்தால், உங்களது இந்த 'தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டுகொள்வதில்லை' என்கிற விமர்சனம் பொருந்தாமல் போய்விடுமா.

உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இன்ஸ்பெக்டராகி திருச்சிக்கு சென்றபோது என்னுடன் வேலை பார்த்த, என்னைவிட பத்துவயதுக்குமேல் மூத்த இவர், திருச்சிக்கு அருகிலுள்ள XXX பகுதியை சார்ந்த பட்டியல் இனக்காரர். கொஞ்ச நாளிலேயே நெருங்கிவிட்டோம். தற்செயலாய் XXX என்கிற அதிகாரியைப் பற்றிப் பேச்சு வந்தது.

நரசிம்மன், அந்தாளு பிள்ளமாரு. செம ப்ரெய்னு. ஆனா பார்ப்பானவிட டேஞ்சரு. பாப்பான்கிட்டையாச்சியும் டேஞ்சர் ஓப்பனா தெரிஞ்சிடும் உசாராயிக்கிடலாம். இவங்க சைலண்ட்டா இருந்து காய் நகத்தியே ஆளை காலி பண்ணிடுவாய்ங்க. 

அஞ்சி செட்டி புள்ளையக் குடுத்து ஒரு பாப்பாரப் புள்ளைய வாங்கு 
அஞ்சி பாப்பாரப் புள்ளையைக் குடுத்து ஒரு பிள்ளைமார் புள்ளையை வாங்குனு 
எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க. 

XXX நீங்க வேற, அவுரு அசைவப் புள்ளைங்க. 

சைவப் புள்ளமாரா இருந்தா டபுள் ஸ்ட்ராங் டிக்காசன். அசைவம்ங்கிறதால அப்பிடியொன்னும் ரொம்ப கம்மியாயிடாது. 

அப்பறம் ஏன் இந்த ஃபெலிக்ஸு இப்பிடி முண்டமா கெடக்குது. இதுவும் மூனு ஜெனரேசன் முன்னால நெத்தில பட்டையும் கழுத்துல கொட்டையுமா திரிஞ்சதுதானே. 

ஒரு படி பட்டாணில ஒன்னு ரெண்டு கூடவா சொத்தை இருக்காது. இவனைக்கூடப் பாருங்க, வேலைல பெரிய கழட்டியா இல்லாட்டாலும் எவ்ளோ கமுக்கமா இருக்கான்.

பாண்டிச்சேரியை ஒட்டிய சிற்றூரில் இருந்த தொழிற்சாலைக்கு இரண்டு குழுவாய் ஆடிட்டுக்கு சென்றிருந்தோம். இருவரும் தம்மடிக்க ஒதுங்கியபோது அவர் கூறினார்.

நரசிம்மன், திரும்பிப் போகும்போது நீங்க கொஞ்சம் நடுவுல உக்காருங்க. 

காரில் செல்லும்போதும் தம்மடிப்பவன் என்பதால் கதவுப்பக்கம் என்னுடையதென்பது எழுதப்படாத சட்டமாய் வைத்திருந்த எனக்கு அது சாத்தியமே இல்லை. 

ஏங்க 

உங்ககிட்ட இதுதான் பிரச்சனை எதுக்கெடுத்தாலும் ஏன் எதுக்குனு கேட்டுகிட்டு. சொன்னா கேளுங்க. நடுவுல உக்காருங்கன்னா உக்காருங்க. 

ஏன்னு சொல்லுங்க. 

நடுவுல நான் உக்காந்து அவுரு மேல லேசா பட்டுட்டாக்கூட எதோ பட்டமாதிரி சும்மா சும்மா தோளைத் தொடச்சிக்கிறாரு உங்க சூப்பிரெண்டெண்ட்டு. அது எனக்குப் பிடிக்கலை, என்றார். 

இத்தனைக்கும் அப்போது எனக்கு சூப்பிரெண்டெண்ட்டாய் இருந்தவர் அசைவப் பிள்ளைதான். வலுத்தவன் மூர்க்கமாகவும் பூஞ்சைகள் நாசூக்காகவும் தலித்துகளை எப்படி நடத்துகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் தலித் செயல்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் பழைய பாப்பார பஜனையையே பாடிக்கொண்டிருப்பார்கள். இதற்குப் பொருள் பார்ப்பனர்கள் மேன்மையடைந்து விட்டனர் என்பதன்று. பார்ப்பனரை மட்டுமே குற்றவாளிகளாய் திராவிடர்கள் காட்டிக்கொண்டிருப்பது, சொந்த குற்றவாளிகளுக்கு பெயில் வாங்கிக் கொடுக்கத்தான். இதை செய்ய வீரமணி போதாதா எவிடென்ஸ் வேறு எதற்கு.

இதெல்லாம் யாருக்கும் தெரியவேண்டும் என்றோ கதையாய் கட்டுரையாய் எழுதினாலும் யாருக்கும் புரியவேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கலாகாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் என்ன இருந்தாலும் நானும் ஒரு பார்ப்பான்தானே. 

திரும்பவும் சொல்கிறேன். 

தக்கார் தகவிலார் என்ப தவரவர் 
எச்சத்தால் அறியப் படும் 
அறியப்படவேண்டும் ஜாதியாலன்று மிஸ்டர் எவிடென்ஸ்.