28 September 2025

மாட்டிக்கினாரு ஒர்த்தரு

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒர்த்தரு - இவர 

காப்பாத்தனும் காப்பாத்தனும் கர்த்தரு 

2017ல் கையும் களவுமாய் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட்ட இசைக் கட்டுரைத்தொடர் விக்கிப்பீடியா திருடன் எம்ட்டி ட்ரம் திருந்தவில்லை இன்னமும் அப்படியேதான் இருக்கிறான் என்பதைத்தான் நிரூபிக்கிறது நேற்றைய சர்ச்சை. 

10.43க்குப் போட்ட ஒரிஜினல் போஸ்டில் ஸீரோடிகிரி ராம்ஜி போன் பண்ணியதைப்பற்றிதான் வருத்தப்பட்டு சிவராமனிடம் சொன்னதாக இருக்கிறது. ஆனால் அதை சிவராமன் கண்டுகொண்டதாக ஒரு வார்த்தைகூட இல்லை. 

ஆனால்அடுத்து அந்தப் போஸ்டையே 17.38க்குத் திருத்திப் போட்டதில் இந்தப் பின் நவீனத்துவத் திருடன் எதைச் செருகியிருக்கிறான் என்று பாருங்கள்.

 //இந்த மாதிரியான தாக்குதல்களுக்கு நடுவே ராம்ஜி உங்களை அழைத்து மொழிபெயர்ப்புகளையும் படைப்புகளையும் கேட்பது அவர் உங்களுக்குத் தரும் பெரும் ஆதரவு என்று சிவராமன் தெரிவித்தார்.//

 காலையில் வெளியிட்ட போஸ்டை மாலையில் திருத்தவேண்டி வந்தது ஏன்10.43க்கும் 17.38க்கும் இடையில் நடந்தது என்ன?

மதியம் 13.09க்குஇசைத் திருடனின் இரண்டு போஸ்ட்டுகளுக்கும் சேர்த்துத் தன்னிலை விளக்கமாக ராம்ஜி ஒரு போஸ்ட் போடுகிறார். 

அதில்எம்ட்டி ட்ரம்மிடம் புத்தகங்களைப் பதிப்பிக்க விரும்புவதாகத் தாம் சொன்னது உண்மைமொழிபெயர்த்த புத்தகமாக இருந்தாலும் சரி என்று சொன்னதும் உண்மை என்கிறார்.

அத்தோடு நிற்காமல்இவன் இப்பேர்ப்பட்ட இசைக் கட்டுரைத் திருடன், AI மொழிபெயர்ப்பாளன் என்று தெரிந்திருந்தால் இவன் அருகிலேயே போயிருக்கமாட்டேன் எனக் கர்ர்ரென்று காறியும் துப்பிவைத்திருக்கிறார்.  

இதைப் பார்த்ததும் அறிஞர் என அப்பிக்கொண்டிருக்கும் அரிதாரம் கலைந்து சந்திச் சிரித்துவிடுமேஎந்தப் பதிப்பகமும் நம்மை எட்டிக்கூடப் பார்க்காதே என்று முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் சிவராமன் சொன்னதாக எழுதிக்கொள்ளும் இடைச்செருகல் கரெக்‌ஷனை 17.38ல் செய்திருக்கிறது இந்தக் கில்லாடிக் கிரிமினல். 

ராம்ஜியின் அழைப்பு குறித்துதிருத்தப்பட்டதில் இருப்பதைப்போல 'சிவராமன் சொல்லியிருந்தால்யாராக இருந்தாலும் பதிவில் அதைத்தானே முதலில் பயன்படுத்தியிருப்பார்கள்.  ஏன் காலையில் போட்ட போஸ்டில் அது இல்லை

ராம்ஜி பதிவு போட்டதற்குப் பின்னால் ராம்ஜியின் பதிவுக்கு மறுப்பைப் போல ஏன் 'சிவராமன் சொன்னதை'க் கொண்டுவந்து நைஸாகச் செருகவேண்டும்

அறிஞ்சர் என்று நம் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் பின் நவீனத்துவப் பெண்டுலம் நான் சொல்லவில்லை என்று மறுத்து நம்மைக் காட்டிக்கொடுத்துவிடவா போகிறது என்கிறஅய்யோ பாவம் என்று ந முத்துசாமி செய்த சிபாரிசு பிச்சையில் கிடைத்த ஃபோர்ட் ஃபெளண்டேஷன் கொடுத்த தன்னம்பிக்கைதானே இது. 

இங்கிலீஷ் பேசமுடிவதை வைத்துக்கொண்டு உலகமெல்லாம் சுற்றலாம். பேஸ்புக்கில் செக்கூலர் என்று போஸ்ட் போட்டுக் கொண்டு கைதட்டு வாங்கிக்கொள்ளலாம். பின் நவீனத்துவம் பேசறவன் எப்படி பிள்ளைமாரா தேடிப் பார்த்து 'கெட்டிக்கிட்டான்என்று - எவனுக்கும் தெரியாது - என்பதால்  எவனும் கேட்கப்போவதில்லை. என்னை விட்டால் யாருமில்லை என்று திமிர்த் தெனாவட்டாகத் திரியலாம். 

ஆனால்இந்த ஜம்பப் பருப்பெல்லாம் மொத்த சரித்திரமும் தெரிந்தஇன்னும் இருந்துகொண்டிருக்கிற பழைய ஆட்களிடம் வேகாது. கதை கதையாகச் சொல்ல ஆரம்பித்தால் கதை கந்தலாகிவிடும்.

அப்பாவி என்று சுப்ரீம் கோர்ட்டே சர்ட்டிபிகேட் கொடுத்தாலும்...

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.