26 January 2023

மானம் மனிதர்க்கு அழகல்ல அடிப்படை

26.10.2017 முதல் 26.01.2023 வரை 64 மாதங்களில் கிண்டில் எனக்கு அளித்திருக்கும் 35% ராயல்டி ₹1,10,617.05. சராசரியாக மாதம் ₹1728. 

எழுத்தாளனுக்கே கிண்டிலில் வெளியிட நயாபைசா செலவில்லை எனும்போது, பதிப்பாளருக்கு என்ன முதலீடு இருக்கிறது. அப்புறம் ஏன் அதிலும் வந்து வாயை வைக்கிறார்.


ஆனால், அருந்ததிராய் புத்தகங்களை வெளியிட்டபடியே, ‘சடையில் பேன் போல சகஜாமாககிண்டில் உரிமையை எழுதிக்கொடுத்தால்தான் காலச்சுவடில் உங்கள் புத்தகம் வெளியாகும் என்கிறார் கண்ணன் பாசிஸ்டைப் போல


அத்தனைப் பதிப்பகங்களும் - காலச்சுவடை காசு என்பவர்கள், கண்ணை பாப்பான் என்று திட்டுபவர்கள், சமூகநீதி, சமத்துவம், சம உரிமை என்று தொண்டை கிழிய கத்துகிற எல்லோரும் இப்போது கண்ணனைப் போலவே கிண்டில் உரிமையை ஒப்பந்தத்தில் கட்டாயமாக்கிவிட்டனர். (இல்லை என்றால் நிர்பந்திப்பதிக்காத ஸீரோடிகிரி விதிவிலக்கு).


காசு என்று வந்துவிட்டால் எல்லாருடைய ஜட்டிகளும் காற்றில் பறந்துவிடுவது சகஜம்தானேஇதற்கு, மானமிகு சமூகநீதிப் பொரளிகள் விதிவிலக்காய் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அநீதியில்லையா.


இதனால்தான், யதார்த்தத்தில் கட்டாயப்படுத்துகிற எவனுக்கு எதிராகவும் வாயே திறக்காமல் அடிபணிந்து மண்டியிட்டு சலாம்போட்டபடியே, எழுத்தில் தான் பெரிய புழுத்தி என்று வாய்கிழிய உதார் விடுகிற எந்த எழுத்தாளனையும் நான் மயிருக்குக்கூட மதிப்பதில்லை


மானம் என்பது மனிதர்க்கு - அழகோ அலங்காரமோ அணிகலனோ இல்லை - அடிப்படை.

https://amzn.to/3b3TNBJ