16 January 2013

ஜாலியும் ஸீரியஸும்

அலுவல் நிமித்தமாய் நேற்று மதியம் எண்ணூர் போய்விட்டு மாலையில் திரும்பிக்கொண்டிருக்கையில் சுகுமாரனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

எங்க இருக்க?

அண்ணாநகர் கிட்ட வந்துகிட்டு இருக்கேன். 

அந்திமழை ஸ்டாலுக்கு உன் புத்தகம் வேணும்.

சரி ஹரன் பிரசன்னாகிட்ட பேசறேன். 

நானே பாத்து பேசிக்கிறேன். 

நீ பாத்து பேசிக்கிறியா? கேரளா நம்பர்லேந்துல்ல கால் வந்துது. 

அதுலதான் கூப்டேன். ஆனா நான் இங்க புக்ஃபேர்லதான் இருக்கேன்.
அலுவலகம் வந்து என் வண்டியை எடுத்துக்கொண்டு கண்காட்சிக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 8க்குமேல் ஆகிவிட்டது.

முதலில் அந்திமழை கடைக்குச் சென்று அங்கு சுகுமாரன் இல்லை என்றதும் ஹரன் பிரசன்னாவைத் தேடி கிழக்குக்குச் சென்றேன். அங்கிருந்த ஊழியரிடம் அந்திமழை கடை எண் 535ல் பிரதிகள் கேட்டதைக் தெரிவித்தேன். மிகச்சில பிரதிகளே இருப்பதாகத் தெரிவித்தார். உடனே உற்சாக மிகுதியில் கீழ்க்கண்ட ட்விட்டைப் போட்டேன்.
பிறகு கடை எண் 246 காலச்சுவடில் சுகுமாரன் பிரபஞ்சன் கண்ணன் இருப்பதைப் பார்த்து அங்கு சென்று விஷயத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஓரக்கண் பார்வையில் கல்லாவைப் பார்க்க உற்சாகம் சற்றே வடிந்தது. காரணம்,  பில் போடும் மேசையில் எட்டு பிரதிகள் இருந்தன.  

அங்கிருந்து மனுஷய புத்திரனிடம் சென்றேன். மூனு நாள்ல 173 வித்துருக்குனா பெரிய சமாச்சாரமுங்க. நா வேணா சாகித்திய அகாதெமி விருதுக்கு ரெக்கமெண்ட் பண்ணறேன் என்றார். புத்தகம் அவர் கடையில் சட்டெனத் தட்டுப்படவில்லை. எனினும் மனுஷின் இந்த வார்த்தைகளுக்குப் பின் எதோ இருக்கிறது என்று மட்டும் தோன்றியது.

திரும்ப கிழக்குக்கு வந்தால் ஹரன் இருந்தார். 

இல்லையில்ல புக்கு கொஞ்சம் இருக்கு. ஆழில மொதல்ல குடுத்தது போக அப்பறம் கொஞ்சம் குடுத்துருக்கேன். இங்க ஒரு அஞ்சி கிட்ட இருக்கு. அந்த கிழக்குல (கடை எண் 115?) 10 காப்பிகிட்ட இருக்கும். மத்த கடைகளுக்குக் குடுத்தது ஒரு 50 இருக்கும். போயிகிட்டுஇருக்கு. ஆழில திரும்ப குடுத்துருக்கேன். காலச்சுவடுல குடுத்துருக்கேன். பரிசல்ல போகலை. உயிர்மைல போகலை. மானிட்டர் பண்ணிகிட்டுதான் இருக்கேன் என்றார்.

ஐயையோ நான் 173 காப்பியும் போயிடுச்சின்னு ட்விட்டு போட்டுட்டனே என்றேன்.

கைல இருக்கறது போக அடுத்து காப்பி வியாழக்கெழமைதான் வரும். இருக்கறது நாளைக்கி போயிடும். நீங்க போட்டதுல ஒன்னும் பெரிய தப்பில்லை. அப்படியே விடுங்க என்றார். 

அப்போதுதான் மனுஷ்ய புத்திரன் எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன சாகித்திய அகாதெமி விருது பற்றிப் புரிந்தது. அவமானமாக இருந்தது. பொய் சொன்னதாக அல்லவா ஆகிவிட்டது என்று மனம் அடித்துக்கொள்ளவே, இதைப் போட்டேன்.


ஏற்கெனவே ’நல்ல பாப்பான்’ என்று காட்டிக்கொள்வதற்காகவே இந்த புத்தகத்தைப் போட்டிருப்பதாக வேறு ஒரு தமிழர் கூறியிருந்தது என் காதுக்கு வந்திருந்ததைப் பற்றி பொன்னி வைகறையிடம் கூறியிருந்தேன். விடுங்க நாலு பேரு நாலுவிதமாப் பேசதான் செய்வான் என்று அவர் நேற்று சொல்லியிருந்தார்.

இது எனக்குப் புதிதும் அன்று. நுங்கம்பாக்கம் அலுவலகத்தில், கேண்ட்டீனுக்கு வெளியில் ஆம்லெட் போட அனுமதிக்க வேண்டும் என்று 1994கில் போராடி பிரியாணி பொட்டலம் வரை கொண்டுவர தீவிரமாய் ஆதரித்ததில் என் பெயர் ’நாறி’ இருந்தது என்பதை, பல வருடங்கள் வரை அறியாது இருந்தேன்.

டேய் நரசிம்மா! நீ நியாயமான காரியத்துக்கு முன்னாடி நிக்கிறேன்னாலும் பாப்புலாரிடிக்காகவும் சமயத்துல நீ பேசறேங்கறதும் உண்மைதான. நான்-வெஜ் கொண்டாரணும்னு விஜயலக்ஷ்மி மேடம் பக்கத்து டேபிள்லையே பிரியாணி கொண்டாந்து சாப்டதுல்லாம் அராஜகம்டா. என்று கோவிந்து என்கிற கோவிந்தராஜன் (ஐயங்கார்) 2007ல் 13 வருடம் கழித்துக் கூறியது நினைவுக்கு வந்தது. 

எந்த கும்பலின் அரவனைப்புமின்றி அநாதையாக இருக்கும்போதே நான் உயிர்ப்போடு இருப்பதாய் எனக்குள் இருக்கும் எண்ணம் இந்த ‘நல்ல பாப்பான்னு காட்டிக்க’ என்கிற இப்போதைய விருது உறுதி செய்தது. 

ஆனால் கோவிந்து போல முகத்துக்கெதிரில் சொல்லவோ திட்டவோ எத்துனைப் பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது? அதிலும் இணையத்தில் விபூதி சாம்பிராணிகள் ஆண் பெண் வித்தியாசமின்றி அநேகம் கொட்டிக் கிடக்கின்றன.

இணையத்து பிராணர்கள் சின்மயிக்கு எதிராய் வெளிப்பட்ட அவதூறுகளைத் தங்களுக்கும் தங்கள் குலத்துக்கும் எதிராய்த் தொடுக்கப்பட்டப் போராகவே கருதுகின்றனர். எனவே அவர் பக்கத்தில் இருந்து செய்யப்பட்ட அக்கிரமங்கள் எதையும் எந்த கேஷவர்களும் பரிசீலித்துப் பார்க்கக்கூடத் தயாராயில்லை என்பது மட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சின்மயியைக் கேள்வி கேட்பவனை எவ்வளவு தூரம் இழிக்க முடியுமோ அவ்வளவு தூரம் கேவலப்படுத்தவும் செய்கின்றனர். 

அதே சமயம் சதை பிசினஸ்ஸை தாய் மசாஜ் என்கிற பெயரில் கூட்டிக்கொடுத்து விளக்கேந்துபவன் பிராமணன் என்கிற ஒரே காரணத்தால் அதைப் ப்ரொஃபெஷன் என்று சுலபமாகக் கடந்து அவனோடு ஈழிக்கொள்வதிலும் இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
படிச்சு வாங்கின பட்டமாவே ஆயாச்சா என்பது மாயவரத்தான் என்கிற இந்த பிராமண மாமாப்பயலின் பட்டயா டாட் காமையா? அல்லது அவன் இந்தத் தொழில்முறை மாமா, பன்றிப் பயல் என்று குறிப்பிடும் என்னையா? விருந்தூம்பும் பயலால் பன்றியாக நான் குறிப்பிடப்படுவதென்பது எனக்கு க் கிடைத்த விருதுக்கு சமானமே அன்றி அவனுக்கு விருந்து படைக்கும் சாமானங்களின் அவமானமன்று.

எனவே சின்மயி புத்தகம் என்பது எதிரெதிர் அணியாக ஆகிவிட்டது. 65 ரூபாய் அடக்கவிலை உள்ள புத்தகத்துக்கு 120 ரூபாய் என்பதில் கைக்காசை செலவழித்தவன் என்ன கோடி ரூபாயா கல்லாகட்டிவிட முடியும்? விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே ஸ்ரீ800 - 11எழுத்துருவில் போட்டிருந்தால் 350 பக்கங்களுக்குப் போயிருக்க வேண்டிய புத்தகத்தை 10 ஃபாண்ட்டில் போட்டு 248க்குக் கொண்டு வந்திருக்கிறேன். போகவும் என்னுடைய முதலீடு என்பதால் இணையத்தில் இருக்கும் இக்கட்டுரைகளை இன்னமும்கூட மறைக்கவில்லை.

இருந்தும் இத்துனைப் பிரதிகள் விற்றிருப்பதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அது இயல்புதான் அதற்காக நான் பொய் சொல்கிறேன் என்பதைக் கேட்கையில்தான் அட ச்சீ என்ன நொள்ளை நியாயம் பேசினாலும் கடைசியில் நீங்கள் இவ்வளவுதானா என்றுதான் எண்ணம் மேலெழுந்து கைக்கிறது.

இந்தப் புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் தப்பித்தவறி அத்துனைப் பிரதிகளும் விற்று முடிந்துவிட்டன என்று கிழக்கு பத்ரியே வெள்ளைத் தாள் அறிக்கை வெளியிட்டால் வாயால் வடை சுட்டு பிழைப்பு நடத்தும் ’வாத்தியார்’கள் எல்லாம் கழுமரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு விடுவார்களோ?
சின்மயி புத்தகம் விற்றுத் தீர்ந்தது என்பதற்கு இந்த நக்கல் எதிர்வினை நன்றாகத்தான் இருக்கிறது. இதுதான் இணையம். இப்படித்தான், ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டுக் கொள்வதில்தான் இதன் சுவாரசியமே இருக்கிறது.
இதில் என் பெயரே இல்லை. எனினும் இந்த அமெரிக்கவாசி எனக்குதான் கூறுகிறார் என்பது நேரத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். கிழக்கு பதிப்பகம் புத்தகத்தைக் கவர்ச்சிகரமாய் வெளியிட்டுவிட்டது என்று சொல்கிறார். தவறில்லை. அவரவர் கோணம். பத்ரியைக் கேட்டல் இலக்கணம் போன்ற வறண்ட விஷயத்தை சுவாரசியமாய் மக்களிடம் கொண்டு சொல்ல மடிசஞ்சித்தனம் தடை என்று சொல்லக்கூடும் அவரவர் வியாபார உத்தி. அவரவர் தேர்வு. அவரவர் ஏற்பு.

என் புத்தகத்தைக்கூட இந்தப் பிரச்சனையைக் கவர் செய்ய ஜூவியில் வெளியான இந்தப் படத்தையோ
அல்லது இந்தப் படத்தையோ
வெளியிட்டிருந்தால் இன்னமும் கொஞ்சம் பிரதிகள் கூட விற்றிருக்கும். ஆனால் அது, கண்டிக்கிறேன் பேர்வழி என்றபடி கண்ணடித்துக்கொண்டு  சின்மயியைக் காட்டி விற்கும் கேவலமாகத்தான் இருந்திருக்கும். நிச்சயம் சின்மயின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் புத்தகமாய்த் தோன்றி இருக்காது. அதிக பிரதிகள் விற்கும் சின்மயி புத்தகமா? குறைந்த பிரதிகள் விற்கும் மாமல்லன் புத்தகமாக இருக்க வேண்டுமா என்றால், பின்னதே என் தேர்வு என்பதையே என் புத்தகத்தின் முகப்பு அறிவிப்பதில் எனக்கு பெரும் திமிர்தான் சந்தேகமே இல்லை.

காவேரித் தண்ணி குடிச்ச பிரில்லியண்ட் மாயவரத்தான் போட உதவுவதற்கும் மாமல்லன் போடுவதற்கும் அடிப்படை வேறுபாடு இருக்க வேண்டாமா?

ஜாலியா தமிழ் இலக்கணம் கற்பதற்கு வருவோம்.

கறுப்பு / கருப்பு பற்றியும் மேற்குறிப்பிட்ட ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடுகிறார். 

அதாவது நான் பயன்படுத்திய ’று’ தவறூ என்று. பேருக்குத் தமிழ் இலக்கியம் படித்தவனே தவிர வகுப்புக்கே போனவனில்லை என்பதால் என்னிடம் இலக்கண சுத்தம் இல்லை என்பது எனக்கே தெரியும். இந்த எனக்கேவுக்குப்பிறகு ’த்’ போட்டு எழுதுகிறேன் அது தவறு என்று சுட்டியதே காலச்சுவடு அரவிந்தன்தான். திருத்திக் கொண்டேன். சந்திப்பிழை நிழல்போல என்னை சந்ததம் தொடர்கிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்தக் கறுப்பு / கருப்பு பற்றி இணையத்தைத் துழாவியதில் கிடைத்தவை இவை.


ஜாலியாக தமிழ் எழுதுவோருக்கு இலக்கணப்படி கருப்பு. தீவிரமாகத் தமிழ் எழுதுவோருக்கு கறுப்பு என்றும் கொள்ள வேண்டுமோ?





எவ்வளவு மையமாக எழுதுகிறார் பாருங்கள். அவரைச் சொல்லிக்கொள்கிறாரா இல்லை என்னைச் சொல்கிறாரா என்றே பிடிகொடுக்கா சாமர்த்தியம் முதுகெலும்பு விறைப்பாய் இருப்போர்க்குக் கஷ்டம். ஙப்போல் வளைவோருக்கு முப்போதும் கவலையில்லை.




வாயில் இருக்கும் பல்லைத் துலக்குவது எளிது. எல்லோரும் துலக்கிப் பளபளவென்றுதான் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் பல்லைத் துலக்குவது எப்படி என்று, முடிந்தால் ஜெயமோகனிடம் கடிதம்போட்டு ஆன்மீகமாய் விளக்கிக்கொள்ளலாம்.