அண்ணே! இங்ஙணக் கொஞ்சம் பாருங்கணே!
பத்து வருச ப்ராஜெக்டுனு சொல்லி தொடங்கினப்ப இருந்த பாப்புலாரிட்டி நாலாம் மாசமே சுத்தமா தொங்க ஆரம்பிச்சிடுச்சி.
அம்பை கிம்பைனு ஆதாரம் குடுக்காம எதையாச்சும் அடிச்சிவிட்டாதான் நம்பளையும் நாலு பய படிக்கான்.
இண்ட்டர்நெட்டு நெம்ப வேஸ்ட்டுணே!
இங்க முக்காவாசிப் பயபுள்ள நாத்திகன். அவன்கிட்ட சூதர் கீதர் வேத வியாசர்லாம் வேலைக்காவாது. நாம்ப காவியம்னா அவன் காவி ஈயம்கான்.
பிராமீன்ஸுக்குக்கூட ஒரிஜினல் பிராமின் எழுதின மகாப்ஸ் அளவுக்கு எளிமையா இருக்கோணும்.
அண்ணன் மாடாக்கெடந்து சவத்த புடிச்சி இந்த இளு இளுக்கீஹ பாவம்.
புரியி ஞானபீடத்துக்குக் குறிவெச்சாதான் சாகித்திய அகாடெமியாச்சும் கெடைக்கும்.
அதுவும் பிஜேபி ஆட்சிக்கு வந்து கமிட்டில இந்தப் பீச்சாங்கைக்காரனுவ இல்லாம இருந்தாதான் ஆச்சு.
அதெல்லாம் நெடுங்கனவு. அது எப்ப கொடுங்கனவா ஆயிடும்னு ஆரால கணிக்க முடியும்.
ஆனா பாருங்கணே காசா பணமா? வரவர இந்தக் குழுமத்து பயபுள்ளைங்ககூட
இந்தக் கேடுகெட்ட இனையத்துலகூட இதை விசுவாசமா ஷேர் பண்ண மாட்டேங்கான்!
அதை நெனச்சாதாணே துக்கம் தொண்டைய அடைக்கி!