20 September 2015

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா

நான் சொன்னேன்ல அது மாதிரியே லெட்டரை வாங்கிக்க மாட்டேன்னுட்டான் EB ஆபீஸ்ல 


சரி குடு 

ஆம்பிளைங்க போனா வாங்கிக்குவான். பொம்பளைனா ஏமாத்தறான் 

அதெல்லாம் ஒன்னுமில்லை. ஆம்பளை பொம்பளையெல்லாம் இல்லை. வாய் தான் வேணும். வாய் இருக்கறவங்ககிட்ட வாலாட்ட மாட்டான். 

நீ கேக்கறாப்பல எல்லாத்தையும் நானும் கேட்டுப் பாத்தேன். AE லீவு திங்கக்கெழமைதான் வருவாருன்னுட்டான் 

AE இல்லேன்னா அடுத்தது யார்னு கேட்டியா 

எங்களுக்கெல்லாம் பேப்பர் வாங்கிக்க பவர் இல்லேன்னுட்டான் 

அவனை நீ யாரு உன் டெசிக்னேஷன் என்னன்னு கேட்டியா 

இப்பிடில்லாம் ஆம்பளையாட்டம் என்னால எப்படிக் கேக்க முடியும் 

குடு அந்தப் பேப்பரை 

****

இங்க யாருங்க சீஃப் 

AE. ஏன் என்ன விசயம் 

அவர் ரூம் எது 

அவர் இல்லை லீவு திங்கக் கெழமைதான் வருவாரு 

அவருக்கு அடுத்த இன்சார்ஜ் யாரு 

என்ன விசயம்னு சொல்லாமலே கேள்வியா கேட்டுகிட்டுப் போறீங்களே நீங்க யாரு சார் 

என்ன விசயம்னு எல்லார் கிட்டையும் சொல்லிகிட்டு இருக்கணுமா. வியாழக்கிழமைலேந்து திங்கக் கெழமை வரைக்கும் AE லீவுனா ஆபீஸ் எப்பிடிங்க நடக்குது. அடுத்த பொசிஷன்ல இருக்கறவர் யாரு 

நான்தான். உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு சொல்லுங்க 

நீங்க யாரு 

ஃபோர்மென். அவர் இல்லாதப்ப நான் தான் இன்சார்ஜ் 

உங்க பேரு 

பேரு ஊருல்லாம் இருக்கட்டும் என்ன விசயம்னு சொல்லுங்க சார் 

இந்தாங்க 

என்ன கம்ப்ளெய்ண்டு

லெட்டர்ல எழுதியிருக்கு இல்லே படிச்சுப் பாருங்க 

என்ன மீட்டர் ஃபால்ட்டா ரீடிங்குல பிரச்சனையா 

அது லெட்டருக்குப் பின்னாடி இருக்கு பாத்துக்குங்க.

என்ன சார் சண்டை போட வந்தா மாதிரி பேசறீங்க 

சண்டைதான் போட வந்தேன். என் ஒய்ஃப் வெயில்ல அவ்ளோ தூரம் நடந்து வந்து குடுத்தா லெட்டரை வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்களாமே 

ரவுண்ட்ஸ் போய்ட்டு நான் இப்பதான் வந்தேன். இங்க யார் வேணும்னா ஒக்காந்துருப்பாங்க. இது ஒருத்தர் சீட்டு இல்லை. 

EB கவர்மெண்ட் ஆபீசா இல்லையா 

ஆமா 

கவர்மெண்ட் ஆபீஸ்ல லெட்டரை வாங்கிக்க மாட்டேன்னு சொல்ல முடியுமா 

நீங்க குடுத்தீங்க நான் வாங்கிகிட்டேனில்ல 

அந்த லெட்டரோட ஜெராக்ஸ் காப்பிதான் இது. கையெழுத்து போடுங்க 

கையெழுத்துலாம் போட முடியாது 

அப்ப லெட்டரை வாங்கிக்க முடியாதுனு எனக்கு லெட்டர் குடுங்க 

லெட்டரை AE கிட்ட குடுத்துடறேன் 

சார் நாம ரெண்டு பேரும் என்ன அண்ணன் தம்பியா இல்லை சொந்தக்காரங்களா. நம்பி குடுக்கவும் வாங்கவும். நீங்க சர்வீஸ் செய்ய இருக்கீங்க. நான் கன்ஸ்யூமர். லெட்டரை வாங்கிகிட்டதுக்கு கையெழுத்துப் போட்டு ஸ்டாம்ப் சீல் போட்டு அக்னாலெட்ஜ்மெண்ட் குடுங்க

திங்கக் கெழமை வந்து நீங்களே AEஐ நேர்ல பாத்து குடுத்துக்குங்க 

அப்ப நீங்க எதுக்கு இருக்குறீங்க. அவருக்கு அடுத்தது நீங்கன்னுதானே சொன்னீங்க. அவர் இல்லாட்டா அந்தப் பொறுப்பு உங்குளுதுதானே 

நான் பேப்பரை வாங்கிக்க மாட்டேன்னு சொல்லலியே 

எனக்கு வேண்டியது இந்த ஆபீஸ்ல பேப்பரை நான் குடுத்துட்டேங்கறதுக்கு அத்தாட்சி. AE லீவுலேந்து வர வரைக்கும் இந்த ஆபீசுக்குத் தபாலே வராதா. இல்லை வர தபால்காரரை போயிட்டு AE இருக்கும்போது வானு  திருப்பி அனுப்புவீங்களா

அந்த ரூமுல போய் ஸ்டாம்ப் வாங்கிக்குங்க

ஸ்டாம்ப் வாங்கியாச்சு இப்ப கையெழுத்து போடுங்க 

அதான் சீல் போட்டு டேட்டும் போட்டு குடுத்தாச்சே இன்னும் என்னாத்துக்குப் பிரச்சனை பண்றீங்க 

நீங்க மட்டும் இன்னைக்கு இதை வாங்கியிருக்கலே இதை அப்படியே சீஃப் மினிஸ்டர் செல்லுக்கு அனுப்பி இருப்பேன் 

எங்க வேணா அனுப்பிக்குங்க 

உங்குளுக்கு என்ன உங்க AEக்கு இல்லை ஓலை வரும். ஸ்டேட் கவர்ன்மெண்ட்டுல ஏங்க இப்படி இருக்கீங்க. நானும் ஒரு செண்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீதான். கவர்மெண்ட் ஆபீஸ்ல பேப்பர்னு யார் கொண்டாந்து குடுத்தாலும் வாங்கிகிட்டு அக்னாலெட்ஜ் பண்ணனும். பேப்பரை வாங்கிக்க மாட்டேன்னு சொல்றது சட்டப்படி குற்றம். சிடிசன் சார்ட்டர் எங்க. வெக்கலையா 

எல்லாத்தையும் திங்கக்கெழமை வந்து AE கிட்ட டீட்டெய்லா கேட்டுக்குங்க சார் 

****

என்ன ஆச்சு லெட்டர் வாங்கிகிட்டானா 

வாங்கிக்காம 

நான் சொன்னேன்ல பொம்பளைய பைசாவுக்கு மதிக்க மாட்டேங்கறானுங்க 

திரும்பவும் சொல்றேன். ஆம்பளை பொம்பளை இல்லை. கவர்மெண்ட் ஆபீஸ்லனு இல்லை பொதுவாவே வாய்தான் முக்கியம். வாய்தான் வேலை செய்யும். பிபி எகிறிட்டாப்புல காட்டிக்கணும். தப்பான வார்த்தையைத் தவிர்த்துக் காட்டுத்தனமா ஓவர் பவர் பண்ணிப் பேசிக்கிட்டே போவணும். எப்பப்பார்த்தாலும் பேஸ்புக்குலையே இருக்கேன்னு அலுத்துக்கறியே இப்ப தெரியிதா பேஸ்புக் எவ்ளோ யூஸ்ஃபுல்னு.