04 September 2022

குமரித்துறைவி

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - அந்த
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே - எங்க  
ஆசிரியர் கெட்டதும் அதனாலே. 


வாங்கற அவனச்சொல்லு ஒத்துக்கறேன் 
குடுக்கற அவர் பொம்பள பக்கமே போகமாட்டாரே. 

பொண்ணுனாலே ஏன் தப்பாவே நெனைக்கிறீங்க. 
வீட்டம்மா தொந்தரவுக்கு உலகத்துல எவன் தப்பிச்சான். 

ஓ அப்ப அதிகார மையம் அருள் பாலித்துக் கிடைத்த பதவி காண்ன்றாக்ட்டுனு சவுக்கு சொல்றா மாதிரி இவனுக்கு அடிச்ச லக்கி பிரைஸ்தான் இதுங்கறியா. 

இல்லையா பின்ன. கொஞ்சம் பின்னாடி போய் பாருங்க. போன வருசம் அந்தம்மா எழுத எழுத ஒவ்வொண்ணுத்துக்கும் இவன் என்ன தூக்கு தூக்கி எழுதிக்கிட்டு இருந்தான். புகழ்ச்சிக்கு மயங்காத பொம்பளை உண்டா. அதான் புருசன்காரனைக் கொண்டுபோய் மீளமுடியாத பொதகுழில தள்ளி விட்டுருச்சி. 

அவன் வெள்ளந்தியாச்சேடா. அவன் பாராட்டுக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய பிளான் இருக்குனா சொல்றே.

வெள்ளந்தினு அவன் சொல்லிக்குவான்.

ஆமா உங்காளு ரொம்ப ஐயோ பாவம் பாரு. அப்படியே ஜெயகாந்தன் மாதிரி - வாய்ல வெரல வெச்சாலும் கடிக்கத் தெரியாத கொழந்தை. ஊர்ல இருக்கற பாப்பான்லாம் சேந்து சதித் திட்டம் தீட்டி செக்கரெட்டரினு ஒரு பாப்பாத்திய வீட்டுக்குள்ளார அனுப்பிவெச்சுட்டானுங்கனு அவுரு பொண்ணு சொல்லிக்கிட்டு இருக்கறா மாதிரி - இதெல்லாம் நம்பறா போலயா இருக்கு. 

நம்பமுடியிலேனா ‘இந்த புக்கு ஏன் அங்க’னு என்னைய மாதிரி ஒரு ஸ்டூடண்ட்டு கேக்க, ஆசிரியர், வளச்சி வளச்சி அவளோட ஊர் பாசம் அது இதுனு, போன டிசம்பர்ல எழுதிவெச்சிருக்கறதே இருக்கு போய் பாருங்க. 

அப்ப அவனை மாதிரியே ஆஹா ஓஹோனு ‘நியாயப்படுத்தல் கட்டுரைகள’ ஹோம் வொர்க் போல அத்தனை குருகுல அடிமைகளும் வரிஞ்சலா எழுதப்போறீங்கனு சொல்லு. 

தலையெழுத்து. அதை ஏன் கேக்கறீங்க. தலைமையின் கட்டளைய மீறமுடியுமா. பாவம் எங்க ஆசிரியராலையே மீற முடியலியே.