25 June 2023

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

இந்த வருட இதயம் பேசுகிறதுதீபாவளி மலரில் ஒரு அதிசயம். வர்ஜாவர்ஜமின்றிஅகிலன்சுந்தர ராமசாமிகலைஞர் கருணாநிதிஅசோகமித்திரன்செல்வி ஜெயலலிதாசா. கந்தசாமிபட்டுக்கோட்டை பிரபாகர்டி. செல்வராஜ்சுஜாதாகு. சின்னப்ப பாரதிஹேமா ஆனந்ததீர்த்தன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்ராஜேந்திரகுமார். ஆ. மாதவன்இந்துமதிநகுலன்சிவசங்கரிநீல பத்மநாபன்ஜோதிர்லதா கிரிஜாஆதவன்சு. சமுத்திரம்அனுராதா ரமணன்வல்லிக்கண்ணன்வாஸந்திஜெயந்தன்காசியபன் என்று எல்லோருடைய புகைப்படங்களும்குறிப்பிடத்தக்கதென எழுத்தாளர்களே குறிப்பிடும் அவரவர் நாவலின் பெயருமாக ஒரு ஆல்பம் போல வெளியிடப்பட்டிருக்கிறது,

ஒரு எழுத்தளான்புகைப்படம் எடுத்துக் கொள்வதிலோஅதை பத்திரிகையில் வெளியிடுவதிலோ தவறேதுமில்லை. ஆனால் எந்தப் பத்திரிகையில்எந்த விதத்தில்?

உண்மையைத் தேடும் சுந்தர ராமசாமிக்கும்இளமை இனிமை புதுமைக்கும் என்ன உறவுவியாபாரப் பத்திரிகைகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்திய கசடதபற கலகக்காரரான சா. கந்தசாமிக்கும்கலாசாரத்தைச் சீரழிக்கும் நபும்சக’ பத்திரிகைக்கும் என்ன கூட்டுபெண்விடுதலை என்று தாண்டிக்குதித்து எகிறும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கும் தொடையில் எங்கே மச்சம் என்று தேடச்சொல்லி போட்டி வைக்கும் இதழுக்கும் என்ன தொடர்புமதம் மக்களுக்கு அபின் என்று சதா ஜெபிக்கிற சிவப்பிலக்கியவாதிகளான டி. செல்வராஜ்கு. சின்னப்ப பாரதிக்கும்இந்துமத மொத்த குத்தகைக்காரரான மணியனுக்கும் என்ன சம்பந்தம்?

வியாபாரப் பத்திரிகையில் எழுதுவதைவெகுஜனங்களை அடைகிற நோக்கம் என்கிற அம்சத்திலேனும் ஏற்றுக்கொள்ளலாம். மேற்படி எழுத்தாளர்களின் நாவலையோ அல்லது நாவல் சுருக்கத்தையோ வெளியிட்டுகூடவே புகைப்படம் போட்டிருந்தாலும் பரவாயில்லை. வெளியிட்டிருப்பது 'வெறும் பொட்டோ'.

சாகித்திய ஞானபீடங்களுக்கெதிராக யுத்த சந்நத்தம் கொள்ளும் இவர்கள். 'நீ இதுவரை என் எழுத்தைக் கேட்டதில்லை. இப்போதும் என் எழுத்தை வெளியிடப் போவதில்லை. போட்டோதான் கேட்கிறாய். எழுத்தாளன் என்கிற விதத்தில் என் முகத்தை விடவும் எழுத்துதான் முக்கியம்போட்டோ தரமுடியாது போய்யா என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

இலக்கியம்எந்த சீரழிவை எதிர்த்து. சமூகத்தின் திரைகளைக் கிழித்து வெளிச்சம்போட்டு காட்டுகிறதோஅந்த நிலையை மேன்மேலும் வளர்க்கிறஆயிரம் பிரதிகள் போட்ட தரமான புத்தகம்ஐந்து வருடத்திலும் விற்று முடியாதபடிக்குநாடு முழுக்க நரகலைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையில்எழுத்துகூட இல்லைதங்கள் முகம் சில ஆயிரம் பிரதிகளில் அச்சேறிதமிழ் மகாஜனங்களை அடைவதில் அப்படி என்ன சந்தோஷம்?

தன் பத்திரிகையின் ஆபாச முகத்தைத் திரை விலக்கிக் காட்டிவிட்டார் என்ற காழ்ப்பில்இலக்கியத்திற்கும்கிசுகிசுமூட்டி கிளப்பிவிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதமதம்+ செக்ஸ் என்று தமிழர்களுக்கு ஆத்ம சரீர சுகமளிக்கும் மணியன்இதே பத்திரிகையில் வண்ணநிலவனைப் படுகேவலமாகத் தாக்கினார். சக எழுத்தாளன்ஒரு நியாயமான விஷயத்திற்குக் குரல் கொடுக்கப்போய்கேவலப் படுத்தப்படுவதைக் கண்டித்து மேற்படி எழுத்தாளர்கள் எவரும் குரலெழுப்பவில்லை. மாறாக அவன் கேட்டவுடன் எங்கிருந்து மாலை விழுந்தாலும் பரவாயில்லை என்று கழுத்தை நீட்டி போட்டோ அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே இவர்களின் எழுத்து நாளைக்கே வியாபாரத்தனமாகிவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய பயில்வான்கள்போயும் போயும் போட்டோ தடுக்கியா விழவேண்டும்?

இந்த எழுத்தாளர்களையெல்லாம் தோளில் சுமந்தபடி சுற்றிவருகிற இளைஞர்களை இதைவிட வேறு எப்படி அவமானப்படுத்திவிட முடியும் 


***


இது வெளியான 1983 ஞானரதத்தைத் தேடிப்பிடித்து, இந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிவைத்த மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமிக்கு நன்றி.