07 June 2023

உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்

ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை. 

ஆத்திரம் அவனைப் பற்றிக்கொண்டது. 

அவன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். அவனுடைய முகம் சிவந்து போயிருந்தது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முஷ்டியைச் சுருட்டி மேஜைமீது குத்திக்கொண்டிருந்தான். முதலில் ஒரு குத்துமறுபடியும் ஒரு குத்து. பிறகு 'மாறியாக வேண்டும் மாறியாக வேண்டும்என்று கத்தியபடியே மேஜைமீது கைகளால் அறையத் தொடங்கினான். அதன் பிறகு கடிகார ஒலி கேட்கவில்லை. 


*** 

அநேகமாக மனிதர்கள் அனைவருக்குமே அடிப்படையில் பணமே வாழ்வை அர்த்தப்படுத்துவதாக இருப்பதால் அதுவே  வாழ்வின் ஒரே இலக்காக ஆகிவிடுகிறது. 

பெரும்பான்மையைக் கவரும்படி எழுதி, பிரபலமாகிப் பணம் பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று இருப்பதால், வணிக எழுத்தாளன் கிழடுதட்டிப் போனாலும் காதல் கத்தரிக்காய் என்று கிளுகிளுக்கவைப்பதிலேயே கிடக்கிறான். வாழ்வில் பொருள் தேடுவதைவிட வாழ்வின் பொருளைத் தேடுவதையே முதன்மையாகக் கொண்டிருப்பதால் இலக்கிய எழுத்தாளன் கிழவர்களைப் பற்றி எழுதுவபவனாக இருக்கிறான். 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 18 மேஜை மேஜைதான்