21 June 2023

உலகச் சிறுகதைகள் 19 காஃப்கா

இந்தக் கதை வெளியான 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே காஃப்கா விசாரணை என்ற நாவலையும்  எழுதிக்கொண்டிருந்தார். என்ன குற்றம் செய்தான் என்று தெரிவிக்கப்படாமலேயே தண்டனை விதிக்கப்பட்ட ஜோசஃப்  கே. நாவலின் மையப் பாத்திரம். யார் தண்டனை விதித்தார்கள் என்பதும் தெரியாது, அந்த அமைப்பை அணுகவும் முடியாது. ஆனால், அவன் இயல்பான வாழ்க்கையை வாழலாம்எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம்அச்சமூட்டும் இந்தக் குழப்பமான காலத்தில் ஒரு பாதிரி அவனுக்குச்  சொல்வதாக   இந்தக் கதை நாவலில்  இடம்பெற்றுள்ளதுசட்டப் புத்தகத்தின் முன்னுரை அது என்று சொல்கிறார்முற்றுப்பெறாத அந்த நாவல்  காஃப்காவின்  மறைவுக்குப் பிறகு 1925ல்தான் வெளியானது.   . வி. தனுஷ்கோடி செய்த  நாவலின்  (ஜெர்மன்) நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை   க்ரியா பதிப்பகம் 1992-ல் வெளியிட்டது

சட்டம் என்கிற உருவமற்ற பொருள் உயிருள்ள மனிதர்களைக் கண்ணுக்குத் தெரியாதவகையில் எப்படியெல்லாம் கட்டுப்படுத்துகிறதுஉள்ளேயே நுழையவிடாமல் சாகடிக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிற எண்ணம் காஃப்காவுக்குத் தோன்றியதே அவரது தனித்த பார்வை காரணமாகத்தானே. கலையே பார்வையைத் தருகிறது. பார்வையே கலை உருவாகக் காரணமாகவும் இருக்கிறது. 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 19 - சட்டத்தின் வாயிலில்