16 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 45 பார்வைகள்

தஞ்சாவூர் கும்பகோணம் என்று கூவிக்கொண்டிருந்த பஸ் தி ஜானகிராமனை நினைவுறுத்தவே அதில் ஏறிக்கொண்டான். இப்போது தி.ஜாவும் இல்லை என்றாலும் நித்ய கன்னி எழுதிய எம்.வி.வெங்கட்ராம் கும்பகோணத்தில் இருக்கிறார் என்று நம்பி சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. முக்கியமான நாவல் என்று நித்ய கன்னியைப் படிக்கச்சொன்னதே நம்பிராஜன்தான். 

சாப விமோசனம் படித்தபோது அடைந்ததைவிடவும் பலமடங்கு வியப்பை ஏற்படுத்தியது நித்ய கன்னி. 

ராமாயணத்தில் இருந்து ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துக்கொண்டுஅதைத் தற்கால பார்வையில் நவீனமாக, எதிர்மறையாகநாற்பது வருடங்களுக்கு முன்

ராமாயண பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் - பிடிக்காமல்கூட இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை 

என்று எவ்வளவு தைரியத்துடன் புதுமைப்பித்தனால் சொல்லமுடிந்திருக்கிறது.  எப்படிப் புதிதாக பார்க்க முடிந்திருக்கிறது என்று படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. 

அதேபோல, சூர்ப்பனகைக்கு ராமன் கிடைக்கவில்லை என்கிற ராமாயண கதையையே தலைகீழாக மாற்றி -  ராமன் கடவுள் என்பதால் அவனுக்கு சூர்ப்பநகை கிடைக்கவில்லை என்று, 'அவனோ த்சொ! கடவுள்என தருமு சிவராமு எழுதிய 'ராமன் இழந்த சூர்ப்பனகைகவிதையின் வீச்சும் அட இப்படியெல்லாம் கூட பார்க்கமுடியுமா என்கிற அசாதாரணமான தாக்கத்தை உண்டாக்கிற்று. அவையாவது சிறிய அளவிலான கதை கவிதை. 

ஆபீஸ் அத்தியாயம் 45 பார்வைகள்