19 April 2023

ஆபீஸ் அத்தியாயம் 46 அலைதலின் ஆனந்தம்

வேப்பாறுனு பக்கத்துல காட்டாறு ஓடுது. போலாமா என்றான் உதயசங்கர். 

அதுக்கென்ன போலாமே என்று உற்சாகமாகக் கிளம்பினான். அப்போதுதான் அது எவ்வளவு மோசமன பகுதி என்பதே தெரியவந்தது. 

தனியா போனா சமயத்துல வெட்டிப்புடுவாய்ங்க. போன வாரம்தான் வாய்த்தகறாருல ஒருத்தன் கையை வெட்டிப்புட்டாய்ங்க.

அதுபோக இது எம்.எல் ஆளுங்க நடமாட்டம் இருக்கற பகுதி.  

அவனுக்குத் தெரிந்த எம்.எல் என்கிற நக்ஸலைட்டுகள் எல்லாம்வீராச்சாமி பா. ஜெயப்பிரகாசம் என்று மக்கள் கலை இலக்கிய கழகம்மக்கள் கலாச்சார கழகம் என்கிற பெயரில் இயக்கங்களை நடத்திக்கொண்டுபேங்க்கிலும் கோட்டையிலும் வேலை பார்த்துகொண்டுஆபீஸ் விட்டபிறகு அதிகபட்சம் தட்டி தூக்கி கோஷம்போடுகிறவர்களாகவும் குறைந்தபட்சம் டீக்கடையில் கூடிக்கூடிகைது பண்ண தேவாரத்தின் ஆட்கள் கைவிலங்குடன் பக்கத்து டேபிளில் காத்திருப்பதைப்போல அடித்தொண்டையில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுகிறவர்களாகவுமே இருந்தார்கள். 

காற்றில் மேல்வேட்டி பறந்தது. அதை இழுத்து இழுத்துப் பிடிப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஆற்றுக்குப் போகிற வழியில் எதிர்ப்பட்ட ஓரிரண்டு ஊர் ஜனங்கள்அந்த இருட்டிலும் சாமி என்று குனிந்து கும்பிட்டனர். 

ஆபீஸ் அத்தியாயம் 46 அலைதலின் ஆனந்தம்