18 October 2011

கவிதையின் உயிரும் அவரவர் உயரமும்


இணையத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் பலமே, எவனாவது சீரியஸாக எதையாவது பேசினால் அதிலிருந்து ஓரிழையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரிரு சிரிப்பான் போட்டு பஸ் ஓட்டுவதுதான். இதைப் பார்க்க்கையில் அய்யனார் தாளிப்பு பன்மடங்கு தேவலாம். முதிரா இளம் கோபத்தில் கொந்தளித்தாலும் ’உணர்ந்தால்’ ஒப்புக்கொள்ளும் நேர்மை சாதுர்யவாதிகளுக்கு எந்த ஜன்மத்திலும் சாத்தியமில்லை. அதுதான் ஜெயமோகனின் சாபமும் கூட.

17 October 2011

உம்மாச்சி காப்பாத்து

மொட்டை மாடியில்

புத்தகத்தை மூடி, எழுந்து
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து
புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;
விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி
வானேறிக் கொண்டதும்
நான் கவனிக்கத் தவறியதும்
வேதனையாய் மனதிலாட.

தேவதேவன்

16 October 2011

பூவா தலையா - ஜெயமோகன்?


காளிராஜ் என்பவரை முன்னிருத்தி செய்யப்பட்ட மேற்படி மதோபதேச காலட்சேபத்தில் 

11 October 2011

புல் அரிப்பு

தள்ளுவண்டியில்
மல்லாக்கக்கிடக்கும் இழைப்புளிமேல்
தேய்க்கப்பட்ட கட்டிஐஸ்
கொளுத்தும் வெயிலைக் குளிர்விக்குமா?
தெய்வம் தொலைந்த திருவிழா நசநசப்பில்
பனி பொழிவதாய்
பயல்கள் நனையக்கூடும்.

09 October 2011

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சிரிப்பு மூட்டும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விருது ஸ்பெஷலிஸ்ட் திருவாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒலக சினிமா புத்தகத்தில் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் முடிவு பற்றி எழுதி இருப்பதை கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்ததும் வெடித்து சிரித்துவிட்டேன். 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்மின் இந்தக் கட்டுரை தமிழர்களால் மட்டுமல்லாது தன்னைத் தமிழன் என்று உணரும் ஒவ்வொருவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் என்பது இந்தக் கன்னட-மராட்டிய எளிய தமிழனின் வேண்டுகோள்.

ஜெயமோகனின் என்றைக்குமான மதிப்பு

08.10.11 நிலவரப்படி Alexa Traffic Rankல் ஜெயமோகனின் இன்றைய மதிப்பு

08 October 2011

பாரதி சின்னப்பயல்

ஞான் கவி இல்லா.

கம்பனை நோக்கில்
தமிழின் நவீன ஆதி கவியே மகாகவி இல்லா.
அவன்டெ கவியில்
ஒருஜிநாலுடீயும் ஞான் கண்டிட்டில்லா.

06 October 2011

காடு

விளையாட்டாய்க் கிறுக்கத் தொடங்கிக்
காடாக்கிக்கொண்டிருந்தாள் குழந்தை.

கடந்துவந்த பாதையின்
வரைபடத்தை விரித்து
பத்திரமாய் அவளைக் கடக்க வைப்பது எப்படியெனப்
பதறிக்கொண்டிருந்தார் தந்தை.

ரத்தம் போலவே முட்களும் புதியவை
பதற்றம் மட்டும் அரதப் பழசு.

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக் கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

04 October 2011

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி - போலந்து சிறுகதை


ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்? 

27 September 2011

உயிர்

எப்போதும் உனக்கு சொல்லிக்கொள்

எளிய சொற்களில் கடின விஷயமா
கடின மொழிக் கற்றைகளில் எளியதா
என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே
எஞ்சி இருப்பதே கொஞ்சம் எனும்போது
சிக்கனம் அவசியம்

26 September 2011

மூடுதிரை

வெயில் வந்ததே என்று ஜன்னலை மூடினேன்
காற்றும் வராமல் போனது.

நிலவு பார்க்க திறந்து வைத்தேன்
கொசுக்களும் வந்தன.

மனத்தைத் திறந்து மூடுவதுபோல்
அவ்வளவு எளிதில்லை
ஜன்னலைத் திறப்பதும் மூடுவதும்.

22 September 2011

மோட்சம்

சுற்றுச்சூழலின் விழிப்புணர்வோ 
கிணறு குளம் கடல் கிட்ட இல்லாத சங்கடமோ 
பால்கனி பக்கெட்டில் கரைந்துகொண்டிருந்த
களிமண் பரம்பொருள்
தொட்டிச்செடியை பெலப்படுத்தக்கூடும்