09 October 2011

ஜெயமோகனின் என்றைக்குமான மதிப்பு

08.10.11 நிலவரப்படி Alexa Traffic Rankல் ஜெயமோகனின் இன்றைய மதிப்பு

240,615
Global Rank 

44,255
Rank in INDIA 

Reputation
167
Sites Linking In 

http://www.alexa.com/siteinfo/jeyamohan.in#

மூன்று மாதங்களுக்குமுந்தைய நிலவரம் Sunday, July 24, 2011

Global Rank - 185,439 
Rank in INDIA - 21,812

பழைய இடத்தைப் பிடிக்கத்தான் இந்த ”பாரதியின் இன்றைய மதிப்பா?”

அடப்பாவமே! தினந்தோறும் மூன்று நான்குமுறை விச்ராந்தியாய் முக்கியேமுக்கியே, முடிந்தது எல்லாம் இந்த எக்குதானா?

<தமிழகத்துக்கு வெளியே எங்கும் நல்லவாசகர்களால் பாரதி முக்கியமான கவிஞராகக் கருதப்பட்டதில்லை.>

பாரதி மகாகவி இல்லை என்று ஆரம்பிதது மூன்றாமத்து தவணையிலேயே முக்கியமான கவிஞர் இல்லை என்று ஆகிவிட்டது. புத்தகக் கண்காட்சிக்கு இன்னுமிருக்கும் 90க்கும் குறைவான நாட்களில் 60க்கும் அதிகமான வாதப்பிரதிவாதங்கள் உருவாக்கப்பட்டால் விவித பாரதி போல விவாத பாரதி என்கிற வகைமாதிரிப் புத்தகம் என்கிற விளம்பரத்தோடு எண்ணிக்கை ஏற்றலாம். தமிழகமே திரண்டு வந்து விவாதித்தால் இன்னமும் நல்லது, மகா புத்தகம் மெகா புத்தகமாகிவிடவும் வாய்ப்புண்டு. மலிவுப்பதிப்பாக வெளிவருகையில் பாரதி மனுஷனே இல்லை, இன்னும் சொல்லப்போனால் பாரதி என்று ஒருவனே இல்லை என்று ஆழ்வெளியில் ஆராய்ந்து நிறுவப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. முன்பதிவு செய்வோருக்கு சகாயவிலை போல, திருவோடு விளங்கும் குருவோடு குழுமத்தில் விவாதிப்போருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜெயமோகனோடு வெட்டவெளியில் கட்டிப்புரளும் ஜடாயுக்களுக்கும் ராயல்டிக்கு பதிலாக கேள்வியின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பிரதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டால் ஊரெல்லாம் பாரதி என்பதே பேச்சு என்றாகிவிடும். முடிவில் கல்கி போல பாரதியை இன்றைய தலைமுறையிடம் பரப்பவே இதைச் செய்ததாய் சுபம் கார்டும் போட்டால் கல்லாவுக்கு கல்லாவும் ஆச்சு குல்லாவுக்குக் குல்லாவும் ஆச்சு.

இந்தப் பட்டுக்கோமணத்தை அதன் சீரிய தளத்தில் எவருமே எதிற்கொள்ளவில்லை என்று இணைய குஞ்சாமணிகளுக்குக் குறைவேறு முட்டிக்கொண்டு வருகிறது. கைக்கு அடக்கமானவர்களே சிறந்த கைத்தடிகளாக இருக்க முடியும். 

புடிச்சாப் படி இல்லாட்டாப் போடா பொக்கே என்கிற விட்டேத்தி மனோபாவம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் கணக்குப்போட்டுக் காய் நகர்த்தி எழுதிக்கொண்டிருப்பவன் சிறந்த கார்ப்பொரேட் கணக்குப்பிள்ளையாக இருக்கலாம் கலைஞனாக எப்படி இருக்கமுடியும்? ஏற்கெனவே போடப்பட்ட கணக்குகளின் மாதிரிப் பட்டியல்:

ஆஸ்தான இசை - ஷாஜி (பெஞ்சில் ரெடியாக ராமச்சந்திர சர்மா)
ஆஸ்தான கவிஞர் - தேவதேவன் (ட்வல்த் மேனாக யுவன் சந்திரசேகர்)
ஆஸ்தான எழுத்தாளர் நாஞ்சிலார் (சப்டிட்யூட்டாக அ.முத்துலிங்கம்)

மகா எழுத்தாளர் ஆசனம் - சுய ஆசனத்திற்கு மட்டும்.