Sun, 4 Feb
வணக்கம் 12:54 PM
யெஸ் 12:55 PM
மாணவரா 12:56 PM
இல்லைங்க வாசகன் தான் 12:57 PM
புக்கு வாங்கமுடியாதவரா 12:57 PM
ஆமாம் 12:58 PM
கிடைக்குமா சார் 12:58 PM
ரெண்டுல எது வேணும் 1:01 PM
எழுத்துக் கலை 1:01 PM
ஓகே. மொபைல் நம்பரோட முழுமுகவரி குடுங்க 1:02 PM
எழுத்துக் கலை நூல் எழுத்தின் நுணுக்கங்கள் அறிய உதவுமா 1:03 PM
(முகவரி)
எவனுக்குத் தெரியும். அது படிக்கிறவங்கலையும் பொறுத்தது இல்லையா 1:06 PM
ரொம்ப கரெக்ட் சார் 1:07 PM
நூல் எப்போது கிடைக்கும் சார் 1:09 PM
ஏன் வீட்ல யாரும் இருக்கமாட்டாங்களா. கொரியர்ல வரும் 1:10 PM
சரிங்க சார் 1:13 PM
என் கிண்டில் புத்தகங்கள்
https://amzn.to/3b3TNBJ 8:07 PM
நன்றி சார் 8:19
Mon, 5 Feb
புக் டிசைனரா க்ரியா பாலாஜியும்
கவர் டிசைனரா சந்தோஷ் நாராயணனும்
ப்ரிண்ட் பண்ண கம்ப்யுப்ரிண்ட்டும்
டிஸ்ட்ரிப்ப்யூட் பண்ண பனுவலும் இருந்தா இந்த POD யுகத்துல
யாரையும் எதிர்பார்க்காம
ரூம்ல உக்காந்துக்கிட்டே
எந்த எழுத்தாளனும் ஈசியா பதிப்பாளராகிடலாம் - என்னை மாதிரி😊 8:12 PM
https://www.madraspaper.com/category/இலக்கியம்/நாவல்/ 9:10 PM
Tue, 6 Feb
தங்கள் நூல் வந்தடைந்தது
மிக்க நன்றி சார் 7:51 PM
💐 8:45 PM
👍👍 12:32 PM
Yesterday
என் புதிய சிறுகதை
ஓய்வுபெற்ற மனிதரும் இரண்டு குண்டுப் பெண்களும்
https://www.madraspaper.com/maamallan-story-series-1/ 6:42 AM
Ok Sir 6:47 AM
சாரி டமில் மதர்
https://www.maamallan.in/2024/02/blog-post.html 11:43 PM
Today
Nice Sir 👍 7:22 AM
வாசிக்கணும்னு கூட இல்லே வாங்கி வீட்ல கடைல கம்பெனில வெச்சாலே சுபிக்ஷம் பெருகும். ஐஐடில சீட் கிடைக்கும். அமெரிக்காக்காரன் அள்ளிக்குவான். சீக்கிரம் கல்யாணம் செட்டாகும்னு கல்கி பகவான் லெவல்ல போஸ்டர் அடிங்க ஜெ
இன்னுமா EMI அறிவிக்கல 4:48 PM
நான் அவர் எழுத்தின் வாசகன் , ரசிகன்
சில கருத்தில் முரண்பாடு இருக்கிறது
ஆனால் இதில் ஒன்றும் பெரிய பிழை தெரியவில்லை சார் 4:52 PM
ஒருவனின் வாசகன் என்பதே அடிப்படையில் அடிமைத்தனம். இலக்கிய வாசகன் எப்படி ஒருவனின் வாசகனாக இருக்கமுடியும். ரசிகன் என்று சொல்ல வெட்கப்பட்டு வாசகன் என்கிறீர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அஜித் விஜய் ரசிகர்கள் வெட்கப்படுவதில்லை 4:57 PM
இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்
பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்
ஜெயமோகனின் மாடன் மோட்சம் சிகரமா தகரமா
ஜெயமோகனின் படுகை
ஜெயமோகன் என்கிற பிறவி மொக்கை
ஜெயமோகனின் கோத்திரம் என்ன?
ஜெயமோகன் குழுமத்தில் விட்ட குமிழிகள்
அயோக்கியத்தனமே ஜெயமோகனின் அறம்
https://amzn.to/3KCPIBR 4:59 PM
அப்போது ஜெயமோகன் எழுத்து இலக்கியம் இல்லை என்று சொல்கிறீர்களா ? 5:09 PM
‘எழுத்துக் கலை’ இன்னும் படிக்க ஆரம்பிக்கலையா 5:12 PM
முயற்சிக்கிறேன்
நான் பெரும்பாலும் விமர்சனங்கள் கட்டுரைகள் படிப்பதில்லை
ஆய்வு நோக்கில் இருந்தால் படிப்பேன்
ஆனால் தங்களுடைய வசைமாரியா இருக்கும் போலயே சார் தலைப்பே சொல்கிறது ! 5:12 PM
அப்பறம் எதுக்கு எழுத்துக் கலை கேட்டீங்க 5:14 PM
இல்லைங்க படிக்கனும் 5:14 PM
அது எழுத்து நுட்பத்தை விவரிக்கும்னு நெனச்சு தான் 5:15 PM
படிச்சிட்டு கண்டிப்பா சொல்றேன் 5:15 PM
கட்டுரை விமர்சனம் படிக்கிறதில்லேன்னா ஏன் ‘எழுத்துக் கலை’
திருப்பி அனுப்பிடுங்க 6:15 PM
ரசிகர் விசிறி பட்டாளத்தால ஒண்ணையும் தெரிஞ்சிக்கவோ புரிஞ்சிக்கவோ முடியாது. உடனடியாக புத்தகத்தைத் திருப்பி அனுப்பவும் 5:17 PM
சரிங்க சீக்கிரம் அனுப்பி வைக்குறேன் 5:17 PM
முகவரி சொல்லுங்க 5:18 PM
OK 5:19 PM
அப்ப உங்க பார்வையில் யார் தான் இலக்கியவாதி 5:22 PM
போஸ்ட் ஆபீஸ்ல ரெஜிஸ்டர்டு பார்சல்ல அனுப்புங்க 42 ரூபாய்தான் ஆகும். அதுக்குமேல ஆகக்கூடாது 5:23 PM
சரிங்க கண்டிப்பாக அனுப்புறேன்
ஆனா கொஞ்சம் தாமதம் ஆகும் 5:25 PM
எதுக்கு சார் காசெல்லாம் 5:25 PM
என்னை ரொம்ப அசிங்க படுத்துர மாறி இருக்கு 5:26 PM
இதுல என்ன அசிங்கம் 5:26 PM
நான் புக்கு வாங்கக் காசில்லாம லைப்ரெரில திருடியிருக்கேன் 5:27 PM
புக்கு வாங்க முடியாதவர்னா காசு இல்லன்னு மட்டும் அர்த்தமில்ல அந்த புக் எங்க கிடைக்கும்னு தெரியாமகூட இருக்கலாம் 5:28 PM
இப்படி ஒரு புக் இருக்குன்னே பாரா சார் பதிவுலதான் தெரிஞ்சிது 5:29 PM
என் எழுத்தைப் படித்தால்தானே தெரிய. பொங்கலா இது இந்தா வெச்சுக்கோனு குடுக்க. படிங்க வசை கிசைனு ஓடாம என்னதான் சொல்லியிருக்குனு படிங்க தன்னால தெரியவரும்.
ஆபீஸ் மெட்ராஸ் பேப்பர்லதான வருது சந்தா கட்டிப் படிங்க 5:36 PM
எழுத்து நுட்பத்தை கொஞ்சாமாச்சும் கத்துக்கலாம்னு தான் தேடித்தேடி அது சார்ந்த நூல்களாக வாங்கிட்டு இருக்கேன்
"எழுத்து கலை" னு உங்க புக் பேர் பாத்ததும் கேட்டேன் மற்றபடி வேறொன்றும் இல்லை.
இதே "எழுதும் கலை"னு ஜெயமோகன் நூல் ஒன்றும் உண்டு. 5:37 PM
(என் எழுத்தைப் படித்தால்தானே தெரிய...)
சரிங்க 5:38 PM
Unga phonepay number sollunga sir 5:41 PM
இதேதான் நம்பர் 5:43 PM
அவரோடது 2009 ல வந்ததுனு நினைக்கிறேன் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது 5:44 PM
அடேங்கப்பா 5:45 PM
Phonepay ல வரலயே சார் 5:46 PM
எஸ்.ராவோட நாவலென்னும் சிம்பொனி கூட இருக்கு 5:47 PM
9551651212 வருமே 5:47 PM
App issue ah iruku sir 2 days la anupu vitturen 5:49 PM
எழுத்துக் கலை நாவல் பத்தி இல்லே. எஸ்ரா மாபெரும் மொக்கை. எழுத்துக் கலை புக்கை நீங்க இன்னும் பிரிக்கவே இல்லேனு தெரியிது. மிக்க மகிழ்ச்சி. அப்படியே அனுப்பிவைங்க. திறந்த மனதோட இருக்கற யாருக்காவது யூஸாகும் 5:49 PM
நோ ப்ராப்ளம். புக்க உடனே அனுப்பிடுங்க 5:50 PM
நான் படிக்கலன்னு தான் முன்னாடியே சொல்லிட்டேன் 5:50 PM
பாராவோட எழுதுதல் பற்றிய குறிப்பு நூலும் இருக்கு சார் 5:52 PM
படிக்காமையே அனுப்பிடுங்க அதான் உங்க ஆரோக்கியத்துக்கு நல்லது. இதுல ரெண்டாவது கட்டுரைலையே எஸ்ராவை உண்டு இல்லேனு ஆக்கியிருப்பேன். ஆனா 2020 புக்ஃபேர்ல இது தேசாந்திரிலையே வித்துது 5:53 PM
நான் தான் பாரா உட்படனு சொன்ன்னேனே எனக்கு அப்பறம் வெளியானதுதான் அது 5:54 PM
அப்டி இல்லங்க சார் சரியான விசயத்தை யார் சொன்னாலும் அதை ஏத்துப்பேன்
தவறான இலக்கியம் எதுன்னு தெரிஞ்சா தானே சரியானத நோக்கி போக முடியும் 5:55 PM
கிண்டில் லிஸ்ட் குடுத்தேனே. படிச்சாதானே ஏன் எப்படித் தவறானது தெரியும். வசைமாரினு டைட்டிலைப் பாத்தே ஓடற நோஞ்சானா இருந்தா உருப்படமுடியாது 5:57 PM
கரெக்ட் தான் சார் 😂
படிச்சிட்டு சொல்லி இருக்கனும் 5:59 PM