25 November 2014

அற்பர் சூழ் உலகு

நீதி கேட்டு நெடும்பயணம் சென்ற கலைஞரிடம் 'நீதி கேட்க' அறிவாலயம்வரை நான் சென்றது தனியாக. அவரை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்கிற தகவலை அறிவாலய வளாகத்தில் இருந்தபடி 'நண்பனிடம்' கைபேசியில் கேட்டது எப்படிக் கெஞ்சியதாக ஆகும்?

'பெஸண்ட் நகர் ராஜாஜி பவன் வளாகத்திலிருக்கும் மத்திய அரசின் ஏஜென்சிக்குள் வெலை செய்ய நான் செல்ல விழைவதை உங்கள் அமைச்சரைச் சூழ்ந்த அதி உயர் அதிகார மையம் தடுப்பது நியாயமா' என்று கேட்க ஒரு கட்சியின் தலைவரைப் பார்க்கச் செல்ல இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு அல்லது மத்திய அரசு ஊழியர்களில் எத்தனைப் பேருக்கு ஆவேசமும் துணிவும் இருக்கிறது? 

வருகைக்குத் தாமதமாகும் எனக் தெரியவந்தபோது, இறுதியாய் இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம். அதையும் தடுத்தால் கட்டாயம் கலைஞரை சந்தித்தே தீருவோம் என்ற முடிவுடன் கலைஞரைப் பார்க்காமலே திரும்பியதை இப்படியெல்லாம் திரிப்பதுதான் திராவிட நேர்மை போலும்.

கதவுகள் அடைபட்டிருப்பதன் வேதனையை, திராவிடக் குஞ்சின் அறிமுகத்துக்கு முன்பே, நான் இணையத்துக்கு வர நேர்ந்ததன் அலுவலக நிர்பந்தம் பற்றி, இணையத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில் நான் எழுதியது இன்னமும் இணையத்தில்தான் இருக்கிறது.

எழுத்துக் கலை (தொடக்கப் பகுதி) http://www.maamallan.com/2010/08/blog-post_22.html

எல்லோரையும் எல்லா நேரமும் எல்லோராலும் தொடர்ந்து மிதித்துக்கொண்டிருக்க முடியாது என்பதுதான் எளிய விதி.

சரித்திரம் சுற்றிவந்து சத்தியத்தை முத்தமிட்டு அமர்த்தியிருக்கும் இடம் நான் விருப்பப்பட்டதற்கும் அதி உயர்ந்த இடத்தில் - எவருடைய சிபாரிசுமின்றி. உள்ளது உள்ளபடி உண்மயை உரைத்தேன் என்கிற ஒரே காரணத்திற்காக, என்னைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம்கூட தரப்படாதிருந்தும் முன் பின் அறிமுகமற்ற என் உயர் அதிகாரிகளால் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக என் 53வது வயதில் கொடுக்கப்பட்ட வாய்ப்பை, ஊருலகம் என்னைப் பற்றிக் கூறியதைப் பொய் என நிரூபித்து நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆனதால் ஏழெட்டு மாதங்களிலேயே டெப்புடேஷனாக பணியாணை கொடுக்கப்பட்டதும் இந்த இரண்டாண்டுகால வரலாறு.

இங்கு இருக்கையில் பதவி உயர்வு கிடைத்தால் திரும்பவும் அவரவரின் மூல துறைக்கே சென்றாகவேண்டும் என்பது விதி. இங்கே ஒருவரைத் திரும்பவும் எடுத்துக்கொள்வது கடின உழைப்புக்கும் ஊசலற்ற நேர்மைக்கும் ரகசியம் காக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி இருப்பதற்குமான அதிகபட்ச அங்கீகாரம். அது இன்று கிடைத்துள்ளது. நாளைக்கு அதிகாரபூரவ ஆணை வெளியாகக்கூடும் என அறியநேர்ந்தது.

உயிரைப் பணயம் வைத்து, அரசுக்கும் நாட்டு நலனுக்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க எத்தனை அல்பங்கள் வாயில் விழுந்து எழவேண்டி உள்ளது இந்த அற்பர்களும் குற்றவாளிகளும் கொடூரர்களும் சூழ்ந்த உலகில்.