25 December 2014

மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை 
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.> 
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.

<அதில் கணிசமான கவிதைகளை நான் வாசித்துவிட்டிருக்கிறேன்.> 
எல்லாமே ஏற்கெனவே புக்கா வந்துட்டதுதான். இதையும் மீறி காசைக் கரியாக்கறது உன் இஷ்டம். 
<ஒரு காவிய அனுபவத்தை அளிப்பது அது என்று ஐயமின்றிச் சொல்லமுடியும்> 
அதான் ஏற்கெனவே அனுபவிச்சிட்டியே. அனுபவிச்சதையே திருப்பி எதுக்கு அனுபவிக்கப்போறே. புதுசா அனுபவி. புக்ஃபேருக்குள்ளயே புச்சா வெண்முரசு இன்னோரு இன்ஸ்டால்மெண்ட்டு ரிலீசாயிடும். அதிக்குள்ள இதை வாங்கி இன்ஸால்வெண்ட்டுனு சொல்லீறாத 
<முன்பொருமுறை ஒரு காட்டில் நின்றுகொண்டிருந்தபோது அருகே கல்பற்றா நாராயணன் நின்றார். எதிரே ஒரு குரங்கு. அதன் ஓயாது நெளியும் வாலை நோக்கி அவர் சொன்னார் “அதன் ஆறாவது புலன் அது”. ஆச்சரியமான வரி. குரங்கின் மனமும் அதுவே என்று தோன்றியது. நிலைகொள்ளாதது. ஆரய்ந்துகொண்டே இருப்பது. ஓயாது முத்திரைகள் சைகைகள் வழியாகப் பேசிக்கொண்டே இருப்பது.> 
நொண்டினு சொன்னதுக்கு குண்டில குச்சவிட்டு ஆட்டிட்டானுங்க. ஆகவே இப்பக் குரங்குனுதான் சொல்லவேண்டி இருக்கு. ஓயாத மெண்ட்டல் குரங்குனு நீயாவே புரிஞ்சிகிட்டாலும் தப்பில்லே. 
<இருபத்தொன்றாம் நூற்றாண்டில் காமம் ஒரு தனி புலனாகச் செயல்படத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.> 
சாமான் மேட்டர் சாமானியப்பட்டதில்லை.
<அது ஓர் அறிதல் முறையாக, வெளிப்பாட்டு முறையாக ஆகிவிட்டதோ என.> 
கவிதை எழுதியே மேட்டர் முடிச்சிகிறார்னு அப்பட்டமாக சொல்ல முடியும் 
<மனுஷ்யபுத்திரனின் இக்கவிதைகளில் பல காமம் சார்ந்தவை> 
துரதிருஷ்டவசமாய் சரோஜாதேவி பெங்களூர் பதிப்பு கவிதையா எண்டர் தட்டி புக்கு போடாம வரிவரியா போட்டுடறான். இல்லேனா சாருவுக்கு மிஷ்கின் சொன்னாப்புல நானும் சொல்லி இருப்பேன். 
<ஆனால் அதனூடாக ஓர் அறிதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது> 
இல்லாட்டி மட்டும் இன்னா இதும் அதான் 
<ஒரு பெருந்தொகை கவிஞனின் கூறுமுறையை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வகுத்துக்காட்டுகிறது.> 
ஒரே டெம்ப்ளேட்டுதான் இதை, இதைவிட கெளரவமா வேற எப்படி சொல்ல? 
<கம்பனின் விருத்தத்தின் ஒலி நம் செவியில் நிலைத்துவிடுவதுபோல. அகஎழுச்சியை அப்படியே கூறமுயலும் தேவதேவனின் நேரடியான மொழிக்கு ஒரு நிலையான வடிவம் இருப்பது போல.> 
பற்பல சந்தத்துல எழுதின கம்பனை சும்மா ஒரு 'இது'க்காகதான் சொன்னேன். தேவலாம்தேவனை இளையராஜாகூட ஒரு பெரிய நாற்காலில உக்காரவெச்சதே நான்தான். இதெல்லாம் சொல்லாட்டா, இந்தக் கவிதைத் தொகுதியை நான் சொத்தைனு சொல்றேன்னு ஓப்பனா தெரிஞ்சிடுமே.
<மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒரு அந்தரங்கமான டைரி.> 
அதை என்ன மயித்துக்கு உங்கிட்ட ஜேப்படி பண்ணி காசுக்கு விக்கிறான்னு நீயே கேட்டுக்கோ 
<எழுதி உடனே கிழித்துவிடுமளவு அந்தரங்கமானது.> 
அனாலும் அதை இந்த வெக்கெங்கெட்டப்பய காசாக்கப் பாக்கறான் பாரு 
<அதன் மொழி மாறாதது, ஏனென்றால் அகமொழியை மாற்ற எவராலும் முடியாது> 
இம்பெட்டட் டெம்பிளேட் டெக்னாலஜி 
<அனைத்துக் கவிஞர்களிடமும் அவர்களுக்கான ஒரு மொழிவெளிப்பாடு உள்ளது. சற்று எத்தனித்தால் அதை தேய்வழக்கு என்று சொல்லமுடியும்.> 
இந்தாள்கிட்ட எத்தனிக்காமையே சொல்லலாம்னு நான் சொல்லவரது உனக்குப் புரியிதா 
<ஆனால் அந்த நிரந்தரச் சொல்லாட்சிகள் மட்டுமே அவர்களின் அகத்தை தூண்டுகின்றன.> 
இந்த டெம்பிளேட் மட்டும் இல்லாட்டி இந்தாளுக்குக் கவிதையே எழுத வராது. 
<நுட்பமான மாறுதல்களுடன் அவை மீண்டும் மீண்டும் நிகழ்ந்து எப்போதும் முழுக்கச் சொல்லமுடியாத ஒன்றைச் சுற்றிவருகின்றன.> 
மேட்டரே இல்லாம கவிதை எழுத இவன்கிட்டதான் கத்துக்கணும் 
<நுண்மையாக்கம் [improvisation] தான் கலை. வகைவகையாகச் சொல்லிச்செல்வது அல்ல> 
வள்சரவாக்கம் பட்டிணப்பாக்கம்னு இப்பிடி எதுனா ஒன்னை சொல்லிவெச்சாதான் பாராட்ராப்புலையும் தோணும். டேய் திட்டறாண்டானு எவனாச்சும் முழுச்சிகிட்டு எடக்குமுடக்கா சொல்லிவெச்சா இந்த ஒன்னை மட்டுமே வெச்சிகிட்டு வலிச்சி வலிச்சி எழுதி எஸ்கேப் ஆக முடியும் 
<திரும்பத்திரும்ப வருகின்றனவா என்ற ஐயம் எழுப்பும் மொழிவடிவம், ஒன்றையே சொல்கின்றன என்று எண்ணவைக்கும் கவிதைக்கணங்கள்> 
என்னடா பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரேனு கவலைப்படாதே சிஸ்யா. பின்னாடியே சப்பைக்கட்டு வந்துகிணு இருக்குது 
<ஆனால் அவற்றின் நுண்மையாக மாறிக்கொண்டே இருக்கும் வண்ணவேறுபாடுகள் வழியாக வெளிப்படும் இக்கவிதைகள்> 
என்னடா இவுரு தன்னைவிட பெருசுன்னு எங்க புகழ்ந்துடுவாரோனு கவலைப் படறியா சிஸ்யா தோ பார் 
<தேவதேவனின் ஒளிமிக்க கவியுலகுக்கு நேர்மாறான இடம் ஒன்றை நிரப்புகின்றன. சமகால தமிழ் அகத்தின் இன்னொரு திசை. இருண்டது.> 
எப்பிடி நம்ம உட்டா லகடி கிரிகிரி 
<நாளை அன்று சென்னையில் நூல் வெளியிடப்படுகிறது. வாழ்த்துக்கள் ஹமீது> 
இதுக்கு சாணியவே கரைச்சி ஊத்தீருக்கலாம்னு சொல்றீங்களா. அதுக்குதான் சாநி இருக்காரே மேடையிலயே, எவனாச்சியும் கொஞ்சம் சீவி விட்டா போதும் மிச்சம் மீதி எல்லாம் அவர் பாத்துக்குவாரு.