பார்க்க ஜேம்ஸ் பாண்ட் போல் இருந்தாலும் ஜேம்ஸ் வசந்தனுக்கு எப்படியும் 60க்கு மேல் இருக்கும். பிஷப் ஹீபர், ஜமால் முகமது கல்லூரிகளில் தமிழே படிக்கவில்லை என்றாலும் பள்ளி சிபிஎஸ்ஸி இல்லையென்றால் குறைந்தது ஒரு பாடமாகவாவது தமிழ் இருந்திருக்கும். பாடமாகத் தமிழே படித்ததில்லை என்றாலும் கரிஸ்மாக்கு ஸ்பெல்லிங் என்ன. அதை எப்படி உச்சரிக்கக்கூடாது என்று பேஸ்புக்கில் வகுப்பு எடுப்பதால் ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
