02 January 2022

எழுத்துக் கலை - 2


முன்னுரையும் ஒரு கதையும் அதை ஏன் நிராகரித்தேன் என்கிற கட்டுரையுமாக புத்தகம் கிண்டிலில் வெளியாகும். இது முதல் பகுதி. பின் இதைப்போலவே ஒவ்வொரு கதையும் அது குறித்த கட்டுரையுமாக அதே புத்தகத்தில் அப்டேட் ஆகி வெளியாகும்.

முதல் முறை ₹49 கொடுத்து வாங்கிவிட்டால் அப்டேட் ஆகும்போதெல்லாம் ஏற்கெனவே வாங்கியதை டெலீட் செய்து திரும்ப பணமின்றி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
5000 வார்த்தைகளைத் தாண்டுகையில் புத்தகத்தின் விலை ₹75 ஆகும். புதிதாக வாங்குவோர் இந்த விலையிலும் ஏற்கெனவே வாங்கியோர் ஏதுமின்றியும் அப்டேட்டட் புக்கை டவுன்லோட் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.
10,000 சொற்களைத் தாண்டும்போது புதியவர்களுக்கு ₹100. அதற்கு மேல் எத்தனைப் பக்கள் ஆனாலும் ₹100 மட்டுமே.
நான் எழுதி நானே நிராகரித்த இந்த 15 கதைகளே 14,000+ வார்த்தைகளில் இருக்கின்றன. இத்துடன் கட்டுரைகள் சேர இருக்கின்றன.
எனவே முன்னுரை+கதை+கட்டுரை என வெளியாகும்போதே ₹49 க்கு வாங்கிக்கொள்வதும் விடுவதும் அவரவர் தேர்வு.
***
எழுத்துக் கலை - 2 புத்தகத்தின் முதல் பகுதி கிண்டிலில் எப்போது வெளியாகும்.
புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்குள் வெளியிடப் பார்க்கிறேன்.
கிண்டிலுக்கும் புக்ஃபேருக்கும் என்ன சம்பந்தம்
தமிழன் படிப்பதே புக்ஃபேர் சமயத்தில் போடோ போட்டு போஸ்ட் போட்டுக்கொள்வதற்காகத்தானே
இந்தப் புத்தகம் அச்சில் எப்போது வெளியாகும்
யாருக்குத் தெரியும்
ஏன் இந்தப் புத்தகம்
எப்படி எழுதக்கூடாது ஏன் என்பதை எடுத்துக்காட்டுடன் சொல்வதற்காக