17 May 2023

உலகச் சிறுகதைக்ள் 14 இடாலோ கால்வினோ

வாசிப்பு என்ன செய்யும் என்பது, கட்டுரைக்கான பொருள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதைக் கதையாக எழுதமுடியுமா?. மிகச்சிறந்த கதையாக எழுதமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கதை. 

வாசிப்புஏன் எப்படி என்று எல்லாவற்றையும் கேள்விகேட்க வைத்து, உள்ளூர விவாதித்து மனிதனை சுயமாக சிந்திக்கிற சுதந்திரமானவனாக ஆக்குவது. ராணுவம், கேள்வியே கேட்காமல் கீழ்படிகட்டுப்படு என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்துவது. பின்னதைக் கொண்டுபோய் முன்னதில் விட்டால் என்ன ஆகும் என்பதை விரித்துப் பார்ப்பதுதான் கதை. 

கதையம்சமுள்ள கட்டுரைகள் வசீகரிப்பதைப்போல, கட்டுரைபோல் இருக்கிறகருத்தை நேரடியாகச் சொல்கிற கதைகளில் கலையம்சம் திரளுவதில்லை என்பதால் அவை இலக்கியரீதியாக வெற்றியடைவதில்லை. 

வாசிப்பு என்ன செய்யும் என்கிறஎளிதில் கட்டுரையாகிவிடக்கூடிய கருத்துசெய்தி, எவ்வித ஆர்பாட்டமுமின்றி உயர் நகைச்சுவையோடு எப்படி சிறந்த கலைப்படைப்பாகி வெற்றிபெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனமாகப் படித்தாலே எளிதாகப் பிடிபட்டுவிடும்.

எல்லா கதைகளுமே எதையேனும் சொல்லத்தான் எழுதப்படுகின்றன. முதிராத கைகள் 'அதை'த் தத்ரூபமாக்கமுடியாமல், பெயருக்கு கண் மூக்கு காது என்று 'பிடித்துவைத்து'விட்டுப் போய்விடுகின்றன. எதிலும் உச்சத்தை எட்ட முனைவதே மனித லட்சியமாக இருக்கையில், எப்படி படைப்பிலும் ரசனையிலும் மட்டும் சாதாரணத்தோடு சமரசம் செய்துகொள்ளமுடியும். 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 14 நூலகத்தில் ஒரு ஜெனரல்