20 October 2012

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்



இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது. 

எழுத வந்ததிலிருந்து, சிலர் அதற்கு முன்பாக இருந்தும்கூட என்னை நேரடியாக அறிந்த, பழகிய பல கலை இலக்கியவாதிகள் ஃபேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.

சுமார் இருபதுக்கும் மேற்பட்ட, அலுவலக சக ஊழியர்களும் உயர் அதிகாரிகளும் இங்கே இருக்கிறார்கள். இவர்களில் ஓரிருவருக்கு 81ல் காலமான என் தந்தையைக்கூட தெரிந்திருக்க வாய்ப்புண்டு. 82ல் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பவர்களும் சிலர் உண்டு. பெரும்பான்மையோர் 90லிருந்து என்னை அறிவர். 

இது போக ஒருசில ட்ரைவ்-இன் வட்டாரத்து பழக்கங்களும் இங்கே நீடிக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் எனக்கும் இடையில் எல்லா காலங்களிலும் பரஸ்பர நட்பு இருந்துகொண்டிருந்தது என்றும் சொல்லிவிட முடியாது.

குறிப்பாக இலக்கிய நண்பர்களுடன், இடையில் பல்லாண்டுகள் தொடர்பே கிடையாது. இலக்கியத்துடனேயே 16 வருட இடைவெளி. பேசித் திரிந்ததைத் தவிர எழுதிக் கிழித்தது பெரிதாக ஏதுமில்லை.

இருப்பினும் இத்துனைபேர் சுற்றி இருக்கிறார்கள் என்பது வியப்பாகவும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எச்சரிக்கையாகவும் கவிழாமல் மிதந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

கூச்சத்தைக் கொஞ்சம்போல கூட வைத்துக்கொண்டிருந்தால் பொய்யின் சுமையை மட்டிமின்றி உண்மையின் உப்புசத்தைக்கூட கணிசமாகக் குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.