30 September 2012

பல உடான்ஸு கட்டுரைகள் - நமீபியாவிலிருந்து


<மணல் தீபோல எரியும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நீங்கள் மேலே செல்லலாம் என்று சொன்னபோது நான் தயங்கியபடி இறங்கினேன். ஆனால் மணல் ஜில்லென்றிருந்தது>

மணல்ல பாரு ஓய். எவ்ளோ ஷூ தடம். தொலவுல, இடுப்புல கைகளை வெச்சிகிட்டு நிக்கிற ஆளு கெண்டைக்கால்-சாக்ஸு போட்டு ஷூ போட்டுருக்காரு. மணல்ல மருந்துக்காச்சும் அம்மணக்கால் தடம் தெரியுதா ஓய்?  

சூ போட்டுக்கிணு நடந்தா பாதத்துல வெப்பம் தெரியுமா? போதும் போதாதகுறைக்கு மணல் ஜில்லுணு வேற இருந்துதா?

இதுலையே இவ்ளோ உளரல் இருந்தா, விஷ்ணுபுரம் சைசுக்கு எவ்ளோ ஒளரல் இருக்கும்.

இது என்ன ஓய் சபரிமலைப் பயணமா, கால்ல செருப்பில்லாம நடக்க? நமீதா மலைப் பயணமே கெடைக்கிதுன்னு வெச்சிக்குவோம் ஒரு சேஃப்டிக்கு சாக்ஸ்கூடவா போட மாட்டே? 

யோவ் கட்டுரைலையாவுது உண்மையை எழுது. இல்லியா உடான்ஸு கட்டுரைதான் உன்னால எழுதமுடியும்னா புத்திசாலித்தனமாப் போட்டாவாவுது போடாம இரு. 

உன் பிரச்சனை பிரியுது. போட்டோவப் போடாட்டா எஸ்.ரா மேரி ஊட்டு மூலைலை ஒண்டி குந்திக்குனே ஒலகம் சுத்தறாமேரி ஆயிடுமோங்கற அவஸ்தை.

ஒண்ணா எழுதினதுக்கு ஏத்தாமேரி போட்டோவப் புடிச்சிப்போடு. இல்லியா போட்டோவுக்கு இடிக்காதமேரி எழுதிப்போடு.

திஸ் போஷ்ட் - டெடிகேட்டட் டு ஜெமோகன்.இன்னை மெயிண்டெய்ன் பண்ணும் சிறில் அலெக்ஸ் அண்ணாவுக்கு - ஃபேஸ்புக்கில் வந்து என்னை சொறிந்து உட்டதற்கு நன்றி நவிலும் விதமாக.