24 August 2013

வீரமணி ராகு கால விவகாரம் - பதிலெழுதிக்கொண்டிருக்கையிலேயே வந்த கடிதம்

***
2:24 PM (7 hours ago)
to me
அன்புள்ள விமா,

வணக்கம். சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பின், உங்களுக்கு மறுபடியும் எழுதுகிறேன். நலம் தானே? :-)

இரு விஷயங்கள்.

1. எனக்கு இந்த எக்ஸுபரி புத்தகத்தின் பிடிஃப் கோப்பு கிடைக்கவில்லை. ஆனால், அழகாக, சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு ஈபப் கோப்பு உள்ளது. அதை நான் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நீங்கள் மொஸில்லா ஃபையர்ஃபாக்ஸ் இணையவுலவி உபயோகிப்பவராக இருந்தால், இந்த ஈபப் வகைக் கோப்புகளைப் படிக்க ஏதுவான ரீடரைத் தரவிரக்கம் செய்து படிக்கலாம். (https://addons.mozilla.org/en-US/firefox/addon/epubreader/) இந்தக் கோப்பை, பிடிஃப் கோப்பாகவும் மாற்ற இணையத்தில் மென்பொருட்கள் இருக்குமென நினைக்கிறேன்.

2. வீரமணி விவகாரம்: என் கருத்துக்களும் உங்களைப் பற்றி நான் அறிந்துள்ள, கட்டுரைக்குத் தேவையான தகவல்களும். (கிண்டல் தொனியில் எழுதப் பட்டதுதான்)

இந்தப் பதிவில், உங்களைப் பற்றிய தகவல் பிழை ஏதாவது இருந்தால் சொல்லவும் - உடனே திருத்தித் கொள்கிறேன். (கருத்துப் பிழைகளும் இருக்கலாம், ஆனால் அவை இப்போது முக்கியமல்ல - மேலும் அவை, என்னுடைய கருத்துக்கள்)

நீங்கள் கலால் துறையில் தானே (இன்னமும்) இருக்கிறீர்கள்? அல்லது வீரமணி கோடி காட்டுவது போல் அமெரிக்கா (அல்லது டெல்லி) சென்று விட்டீர்களா??

தொடர்ந்து எழுதுங்கள். எனக்கு உடன்பாடு உள்ளதோ இல்லையோ, கருத்திசைவு இருக்கிறதோ இல்லையோ, உங்கள் எழுத்துக்களை நான் (உங்களுடைய ’அறியாத முகங்கள்’ புத்தகத் தொகுப்பிலிருந்து - சத்ரபதி வெளியீடு?? 1984?) முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து படித்துவருகிறேன். 

அன்புடன்:

__ரா.
பி.கு: ஈபப் ஆவணத்தை திறக்க முடியவில்லையானால் சொல்லவும்.

Vimaladhitha Maamallan <madrasdada@gmail.com>
9:54 PM (9 minutes ago)

to Ramjee 
நன்றி. நானே வீரமணி அவர்களுக்கு பதில் எழுதிக்கொண்டு இருப்பதால் உங்கள் கருத்துகளால் சாதகமாகவோ பாதகமாகவோ நான் பாதிப்படைந்துவிடுவேனோ என்கிற பயத்தினால் இப்போது இதைப் படிப்பதைத் தவிர்க்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பிகு: பிற பின்

Sent from my iPhone