16 June 2016

ஸீரோவும் ஸப்-ஸீரோவும்


ஜூன் 6ஆம் தேதியன்று, புத்தகக் கண்காட்சியின் நேரம் முடிந்து, கடைகள் ஏறக்கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது மேற்படி ட்விட்டைப் போட்டேன். 

வழக்கம்போல யாருமே கண்டுகொள்ளாததுபோல் விட்டுவிட்டனர். எவன் படிக்கிறான் இல்லை என்பதல்ல இது என் இடம் எனக்குச் சரியென்றும் தவறென்றும் பட்டதை நான் சொல்லிக்கொண்டே இருப்பேன் எவன் கேட்கிறான் கேட்கவில்லை என்பதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை என்கிற என் இயல்பில் கடமையே கண்ணாயினார் என அடுத்த ட்விட்டைப் போடப் போய்விட்டேன். 

கிட்டத்தட்ட பத்து நாள் கழித்து இன்று இன்பாக்ஸில், 2013ல் ஹாப்பி பர்த்த்டே சொன்னதற்கு அப்புறம் இன்று வந்து மேற்படி ட்விட்டுக்குக் கண்டணம் வருத்தம் எல்லாம் தெரிவித்து நான் விஷம் பாய்ச்சி விட்டதாய்த் தான் சுசீலாம்மாவின் பதிவில் பின்னூட்டம் இட்டிருப்பதாய், எங்கே நான் கடித்துக் குதறிவிடுவேனோ என்று புத்திசாலித்தனமாய் முன்  ஜாமீனும் வாங்கிக் கொண்டார் 9 மணியளவில் ஓரம்மை. அலுவலகத்திலோ ஜாமீனுக்கு ஆள்வர தாமதமாகிக்கொண்டே போனதில், கைதியும் நானும் அநாதைகள்போல அம்போவெனக் கிடந்தோம். 

இன்று அந்தக் கட்டுரையை முடிக்க வேண்டும் அல்லது இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கதையை எப்படியும் இன்று முடித்துவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்திருந்தால், அப்போது பார்த்து இது போன்று, அலுவலகச் சூழ்நிலை தன்னால் பழுத்து வெடித்துவிடும். தூக்கம் அறியாத நான் காவலாளி உத்தியோகம் பார்க்க நேர்ந்துவிடும். இது போன்ற சமயங்களில் நான் கைதி போலவும் என் அன்றைய வாழ்வைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் அப்போதைய சக-வாசியான கைதி அதிகாரிபோலவும் எனக்கே தோற்றப் பிழை தட்டிவிடும். தூக்கம் முழிப்பது அவருக்கு ஒரு விஷயமா அவர் பாட்டுக்கும் ட்விட்டு போட்டுக்கொண்டிருப்பார் என்று பாதி விஷமமும் பாதி அசட்டையுமாக எடுத்துக் கொள்வார்கள் தோழர்கள்.  இன்று கைது வேறு. கேட்கவே வேண்டியதில்லை. பிணையும் பிணைப்பணமும் வந்து சேரும்வரை அவனது பத்திரம் என் அடிமடி அணல். அதீத முன்ஜாக்கிரதையில் அலுவலகக் கட்டிடத்தின் பிரதான வாயிலையே வெளிப்புறம் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு நானும் ஒரு கைதியாய் உள்ளிருக்க நேரிட்டது. காத்திருப்பதைத் தவிர செய்ய வேறொன்றுமில்லாத காரணத்தால் அம்மை கொடுத்த சுட்டியில் போய்ப்பார்த்தேன். மேற்படி ட்விட்டைப் போட்டு, நான் புத்தகத்தை படிக்காமலேயே இவர்களது மொழிபெயர்ப்பை விமர்சனம் செய்துவிட்டேன் என்றொரு பஞ்சாயத்து கூட்டியிருந்தார்கள். வேலையற்ற வெட்டிகளும் மூளையற்ற முண்டங்களும் கண்டனம் தெரிவித்து ஆளாளுக்கு ஆலோலம் பாடி வைத்திருந்தன. 

அது எப்பிடி இவ்ளோ இடியட்டுங்க ரவுண்டுகட்டி அடிவாங்கறதுக்குனே அசடன்கள ஒண்ணா சேத்துகிட்டு வாராய்ங்க #இன்னைக்கு இருக்கு கச்சேரி😂😂😂
https://www.facebook.com/susila.ma.1/posts/1002871513100119 

என்றொரு ட்விட்டு போட்டு வைத்தேன். 

ஒரு வழியாக அலுவலகப் பஞ்சாயத்தை முடித்துவிட்டு பத்து மணிக்குக் கிளம்பி வீட்டையடைந்து நாலு இட்டலியைப் பிட்டுப் போட்டுக்கொண்டு கச்சேரியைத் தொடங்க லேப்டாப்பை ஆர்மோனியப் பெட்டியாய்த் திறந்தால் என்றைக்குமில்லா திருநாளாய் இன்பாக்ஸில் முன்னம்மைக்கும் முந்தின அம்மையாய் மதியம் ஒரு மணிக்கே இப்படியொரு முத்துதிர்த்துவிட்டுப் போயிருந்தார் சுசீலாம் மா. 

இந்தம்மாதான் பாவம் இப்படி என்றால் கூட கும்மியடித்து வைத்திருக்கும் கூட்டம் விலா எலும்பு நோக சிரிக்கும்படி கமெண்ட்டெழுதி வைத்திருந்தது. இதெல்லம் போதாதென்று இளம் கிழவர் இந்துத்வ ஜடாயு வேறு இடையில் கிச்சுகிச்சு மூட்டி வைத்திருந்தார். 

இவர்களெல்லாம் உப்புப் போட்டுத் தான் தின்கிறார்களா இல்லை எல்லோருக்குமே பிபி பிரச்சனையா. அதன் காரணமாக உப்பின் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்களா. சோறுதான் தின்கிறார்களா அல்லது விரும்பித் தின்பது வேறு ஏதாவதா. மானம் ரோஷம் சூடு சுரணை என்பவற்றில் ஏதாவதொன்று அற்ப சொற்ப அளவுக்கேனும் இருந்தால், அந்தப் புத்தகத்தின் அட்டையையும் உள்ளேயும் பார்த்ததும் முதலில் கொதித்திருக்க வேண்டியவர்கள் இவர்களல்லவா என்று கோபம் முட்டிற்று. மூடர் சூழ் உலகில் எங்கே போய் முட்டிக் கொள்வது.

அடேய் அசமந்தங்களே நீங்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டியது, மற்ற ஐந்து மொழிபெயர்ப்பாளர்களின்  பெயர்களைப் பின்னொதுக்கி, ஜெயமோகனின் பெயரை மட்டும் அட்டையில் பிரதானப் படுத்தி வியாபார மோசடி செய்திருக்கும் வம்சி பதிப்பகத்துக்கு அல்லவா. அதைவிடுத்து வம்சியின் அற்ப வியாபார தந்திரத்தை நக்கலடித்து அம்பலப் படுத்திய எனக்குப் போய் கண்டனம் தெரிவிக்க அம்மையார் அழைப்பு விடுப்பது அசட்டுத்தனத்தின் உச்சமில்லையா.

இந்த எழவு கூடத் தெரியாமல் இந்த மயிராண்டிகள் என்ன இலக்கியத்தைப் புரிந்துகொண்டு மாணவர்களுக்கு என்னத்தை போதித்துக் கிழித்துக் கொண்டு இருக்கிறான்கள்.

இடியட்டை அசடனாக்கிய சுசீலாம் மா அவர்களே நீங்கள் எகிற வேண்டியது உங்களை இழிவு படுத்திய வம்சி பதிப்பகத்தை என்பதுகூடத் தெரியாத அளவுக்கு அசடா நீங்கள். அல்லது அதை விடுத்து என்னைக் காய்வது, தாஸ்தாவெஸ்கிக்கு சுட்டுப்போட்டாலும் பிடிபடாத, லோகாதய புத்திசாலித்தனமா. 

6ஆம் தேதி நான் போட்டபோது சீந்தக்கூட சீந்தாத நீங்கள் எல்லோரையும் கண்டனக் கடலில் நீந்தும்படிக் கூவி அழைப்பதற்கு நிஜமான காரணம் அது இந்துவில் வந்து பரவலாகப் போய்விட்டதே என்கிற பதட்டம்தானே. இந்துவில் அது வந்திருப்பதே, இன்பாக்ஸ் அம்மையின் வழியாக பெரியம்மையான உங்கள் வலைப்பூவுக்கு வந்து பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும்.

விதி யாரை விட்டது. 
ஸீரோ என்றதற்காக ரொம்பத்தான் கோபித்துக் கொள்ளும் சுசீலாம் மா அவர்களே குரு வணக்கம், குருவே என்று சின்னப் பெரியவாள் போல ஜெயமோகனை அழைத்துக் கொண்டிருந்தவர்தானே நீங்கள். நான் கிண்டலடித்துக் கிண்டலடித்துதானே இனிய ஜெயம் இனிய ஜெ  எம் என்று உங்கள் கை மாற்றிக்கொண்டது. 
இப்படித் தன்மானமின்றி விழுந்து விழுந்து சேவித்தபடியே இந்த இழவெடுத்த புறநானூறையும் முகப்பில் போட்டுக்கொள்வது போலித்தனமில்லையா. 

ஜெயமோகனை மட்டுமே அட்டையில் போட்ட வம்சியின் காரியம், ஹீரோ மோஸ்தரன்றி வேறென்ன. ஜெயமோகன் வழிபாட்டுச் சபையின் இணைய காரியதரிசிக்கு இதைவிடவும் விளக்கிக் கூற வேண்டுமா.

அட்டையில் உங்கள் பெயர்களையெல்லாம் இருட்டடிப்பு செய்து உங்களை இல்லாமல் ஆக்கிய வம்சியின் செயல் உங்களையெல்லாம் ஸீரோ என்று சொல்லாமல் சொல்வதன்றி வேறென்ன. 

உங்களைப் போன்ற வயசாளிகளே கோயிந்தா கோயிந்தா என்று அங்கப் பிரதட்சணம் போடுவதைப் பார்த்து நிஜமாகவே ஜெயமோகன், இலக்கியத்தின் ஏழுமலையான்தானோ என்று மிரண்டு நிற்கும் அசட்டு இளைஞனிடம் அட்டையில் அவர் பெயர் காட்டி பதிப்பகம் ஜேப்படி செய்வதை இலக்கிய பிலிம் காட்டல் என்று கூவாது வேறெப்படிக் கூறுவது. .

ஒப்புக் கொள்கிறேன். மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் போன்ற ஸப்-ஸீரோக்களையெல்லாம் போய் ஸீரோ என்று ஒஸ்தியாய்ச் சொன்னது தவறுதான்.