19 June 2016

நெறியும் சொரியும்

//'இலக்கியச் சிறார்' என்பதெல்லாம்,தன்னைத் தவிர பிறர் எவரையும் ஏற்காத காழ்ப்போடு் கூடிய நச்சுச்சொற்கள்.// 


தகுதியானவர்களை ஏற்பதும் தகுதியற்ற ஜெயமோகன் போன்ற போலிகளைத் தாக்கித் தகர்ப்பதும் க.நா.சு வழிவந்த என் முழுநேர கலை இலக்கியப் பணி. சுண்டெலிகள் இதில் மூக்கை நுழைக்காமல் சும்மா ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது உத்தமம்.

//இலக்கிய உலகில் அவரவர் பாணி,அவரவர் இடம் அவரவருக்கு. நான் சிறாரா இல்லையா என்பதை உங்களிடம் நிறுவும் அவசியம் எனக்கில்லை. இலக்கிய உலகம் என்னை அங்கீகரித்த வரை போதும்.// 

தங்கள் பாணி என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு தாங்கள் இதுவரை சாதித்தது இதுதானா. 
தாங்கள் இலக்கியச் சிறுவராய் இருப்பதிலொன்றும் தவறில்லை. பெரியவர்களிடம் பேச வந்து கோக்குமாக்காகப் பேசி அவர்களது பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடாது. 

//அது போல என் சுதந்திரம,என் குருவைத் தேர்வதும்// 

தங்களது குருவானவர் எப்படி அசலான பரமார்த்த  குரு என்று பல முறை நான் நிறுவியிருப்பதை அவரது பிரதம சீடரான தாங்கள் அறியாதது என் பிழையன்று. என் தளத்தை வாசித்துப் பார்த்துத் தெளிய முயலவும்.

//பதிப்பகத்துக்கு அந்த உரிமையை அளிப்பதும்.// 

எந்த உரிமையை ஜெயமோகனை ஹீரோவாக்கி உங்களையும் சேர்த்து மற்ற ஐவரையும் ஸீரோவாக்கும் உரிமையைத் தானே. இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே. எங்கள் முழிபெயர்ப்பை விமர்சிக்காமல் எங்களை எப்படி ஸீரொவாக்கலாம் என்று ஏன் இரண்டு நாளாய் அன்ன ஆகாரமின்றி தொண்டை வரள கத்திக் கொண்டிருந்தீர்கள். அம்புட்டுக்கிடார்டா தம்புட்டுக்கா பட்டர் என்றதும் இவ்வளவு சின்னப் பிள்ளைத் தனமாய் பின் வாங்கும் உங்களைச் சிறார் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல. போய் புகார் கொடுங்கள் போலீஸ்கார்கள் சிரித்து ரொம்ப நாள் ஆகிறதாம்.

//தகப்பன் சாமி கலாசாரம் நம்முடையது. அதற்குத் துதி பாடல்.அடி வருடல் என சாயம் ஏற்றி நஞ்சு கக்காதிர்கள். அதனால் உங்களுக்கு என்ன ஆயிற்று.. நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டீர்கள். // 

ஜெயமோகன் ஏன் அருந்ததி ராயை குருவி மண்டை என்கிறார். அருந்ததி ராயின் கட்டுரைகளால் அவருக்கு என்ன ஆயிற்று. அவர் எப்படி பாதிக்கப்பட்டார். அப்புறம் ஏன் விமர்சிக்கிறார். இலக்கிய சிந்தனைக் களங்களில் சிறுவர்கள் விளையாட வருவதில் இதுதான் பிரச்சனை என்பது இப்போதாவது உங்கள் மண்டையில் உறைக்கிறதா. யாரும் யாரையும் விமர்சிக்கலாம். விமர்சிக்கக் குறைந்த பட்சத் தகுதி வேண்டும் என்பதைத் தவிர எந்த கண்டிஷனும் இல்லை. உங்கள் தகப்பன்  சாமியையே விமர்சித்து நக்கலடிக்கும் கலாச்சாரம் என்னுடையது. இதில் நீங்கள் என்ன பெரிய கொக்கா இல்லை உங்கள் ஜெயமோகன்தான் பெரிய டொக்கா.

//ஏதோ இலக்கிய உலகே இதனால் நசித்துப்போவது போலக்கூச்சலிடுவதற்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி இடுங்கள். கடந்த சில ஆக்கபூர்வமான அணுகுமுறைகளால் மட்டுமே வளர்ந்திருப்பது ஜெயமோகனின் வாசக வட்டம். அது பொறுக்காத வன்மமே உங்கள் பேச்சில் வெளிப்படு்கிறது . // 

ஜெயமோகனின் டக்கு எனக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மூடிக்கொண்டு இருப்பதிலேயே சந்தி சிரிப்பது உங்களைப் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கெல்லாம் புரியாது.  சுழற்றிச் சுழற்றி அடிக்கிறேன் என்பதால் என் பெயரையே தவிர்த்து தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றி கட்டுரை எழுதும் ஜெயமொகனுக்கு இல்லாத வன்மமா எனக்கு. இலக்கியமும் தெரியாது இலக்கிய உலகில் என்ன நடக்கிறதென்றும் தெரியாது. ஆனால் சரிக்கு சரியாய் வாய் பேச மட்டும் தெரியும் இல்லையா உங்களுக்கு. எத்தனை வேப்பிலை அடித்தாலும் தெளியாத மடையர்கள் ஜெயமோக அடிமைகள். இதற்குப் பெயர் வாசக வட்டமா. ஜெயமோகன் படைப்புத் தெறமை பற்றி இதுவரை நான் எழுதித் தள்ளியிருப்பவற்றில் எதைப் படித்திருக்கிறீர்கள். அய்யையோ அவரா அந்த ஆளிடமெல்லாம் ஏன் சேருகிறாய் என்று குறுஞ்செய்தியும் மெய்லும் கொடுத்து போனில் பேசி காபராப் படுத்தும் கபோதிகளுக்குப் பெயர் வாசக வட்டமா. இதற்கு சினிமாக்காரன் பின்னால் நிற்கும் கூட்டம் தேவலை. குறைந்த பட்சம் வெளிப்படையாகவேனும் இருக்கிறார்கள்.

//இதோடு இந்த விவாதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.// 

விவாதத்தை என்னை முடித்துகொள்ளும்படிச் சொல்ல நீங்கள் யார். அதுவும் பெரிய ஆகிருதி போல் நீட்டி நீட்டி மடத்தனமாய்ப் முழநீளத்துக்குப் பேசிவிட்டு. உங்களது ஒவ்வொரு உளறலையும் அம்பலப் படுத்தாமல் நான் விடமாட்டேன். இந்த மிரட்டுகிற வாத்தியார்த்தனமெல்லாம் இலக்கியத்தில் வேலைக்காகாது. போலீஸ் கீலீஸ் என்கிற பூச்சாண்டி எல்லாம் என் தர்க்கரீதியான பதிலில் பொடிப்பொடியாய் தகர்க்கப்பட்டதும் இதோடு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ளச்சொல்லி ஆணையிடுகிறீர்களா. வேண்டுமானால் இதோடு விட்டுவிடு தெரியாமல் அந்த ட்விட் என்னைச் சொல்வதாய் என் அறியாமையில் தவறாக எண்ணிவிட்டேன் என்று கெஞ்சினால் பரிசீலிக்கிறேன். பெண்ணென்றோ பிரமுகரென்றோ விஞ்சினால் விடமாட்டேன். ஏனெனில் சத்தியம் என் பக்கம்.

//எனக்கும் இனி சொல்ல எதுவும் இல்லை.// 

அப்பப் போய்ச் சேருங்கள். இன்னும் எதற்கு இங்கே மறியல்.

//நான் குந்தி அல்ல, .நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத நெறியுடன் உங்களைத் துணிவோடு எதிர்கொள்ளும் பாரதியின் பெண்.// 

என்னை எதிர்கொள்ள துணிவு போதாது அறிவு வேண்டும்.