07 June 2023

உலகச் சிறுகதைகள் 17 மரியா லூயிஸா பொம்பால்

எனக்கு மட்டும் தோழிகள் இருந்திருந்தால்,’’  அவள் பெருமூச்செறிந்தாள். எல்லாருமே அவள்மீது சலிப்படைந்தார்கள். தன்னுடைய முட்டாள்தனத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள அவள் முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், பெரிய இழப்பை எப்படி ஒரே மூச்சில் ஈடுகட்ட முடியும்? புத்திசாலித்தனம் குழந்தைப்பருவத்திலிருந்தே தொடங்கவேண்டும், இல்லையா

அவளுடைய சகோதரிகளை அவர்களுடைய கணவர்கள் எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போனார்கள். ஆனால்அவள் குறித்தும் அவளுடைய அறியாமை குறித்தும் பயந்து ஒதுங்கும் அவளுடைய சுபாவம் குறித்தும் அவளுடைய பதினெட்டு வயதைக் குறித்தும்கூட லூயிஸ் வெட்கப்பட்டான். இதைத் தனக்குதானே ஒத்துக்கொள்வதில் அவளுக்கு என்ன தடங்கல்இளமை ஒரு ரகசியக் குறைபாடு என்பதைப்போலஅவளுக்குக் குறைந்தபட்சம் இருபத்தோரு வயது என்றாவது அவளை வெளியில் சொல்லச்சொல்லிக் கேட்கவில்லையா அவன்?

இரவில் படுக்கைக்குப் போனபோதெல்லாம் அவன் எவ்வளவு சோர்ந்துபோயிருந்தான்! அவள் சொன்ன எல்லாவற்றையும் அவன் எப்போதுமே  கவனித்துக் கேட்டதில்லை. அவளைப் பார்த்து அவன் சிரிக்கச் செய்தான்ஆனால்அந்தச் சிரிப்பு எந்திரத்தனமானது என்று அவளுக்குத் தெரியும். ஈடுபாடு இல்லாமலேயே அவளைத் தழுவிக் கொஞ்சுவான். ஏன் அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான் என்று நினைக்கிறீர்கள்வழக்கமாக நிகழும் ஒரு பழக்கத்தைப் பின்பற்ற அல்லது ஒருவேளை அவளுடைய அப்பாவுடனான நட்புறவைப் பலப்படுத்த என்ற காரணம் இருந்திருக்கலாம்.  ஆண்களுக்கு வாழ்க்கை என்பது வேரோடிப்போன பழக்கங்களின் ஒரு தொடரோதொடரில் ஒரு பழக்கம் அறுந்தால் குழப்பமும் தோல்வியும் மட்டுமே விளையும். 

புனைவு என்னும் புதிர் உலகச் சிறுகதைகள் 17 மரம்