Showing posts with label போர்ஹே. Show all posts
Showing posts with label போர்ஹே. Show all posts

18 February 2023

உலகச் சிறுகதைகள் 4 ஜார்ஜ் லூயி போர்ஹே

முதல் முறையாகப் படித்தபோது ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்னய்யா இது இத்துனூண்டு கதைல என்னென்னத்தையோ சொல்லி வைத்திருக்கிறான் என்று மிரட்டிவிட்டது.

21 August 2011

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

05 April 2011

தகவல் களேபரங்களும் தற்காலத் தமிழ் ஆளுமைகளும்

jorge luis borges
On Mon, Apr 4, 2011 at 2:49 PM, ............wrote:
Dear Sir,
From the link provided in your blog i read Charu's post where he mentions Borges' story ' Approach to Al Mutasim' . In Borges story the only mention of Trichinopolis occurs when the protagonist tells about the disappearance of the two cigarettes made in Trichinopolis along with a few silver coins because of the thief. However Charu writes that Borges has talked about the Muslim abundance in Trichi and a muslim searching for stone after urination.
May  be he has forgotten the story which  he might have read long back.
yours,
.............

தங்கள் மின்னஞ்சலையும் தங்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்தமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது அந்த எழுத்தாளரின் தற்கொலைப்படையினரிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டியே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை. மற்றபடிக்குத் தாங்கள் சம்மதித்தால் இரண்டையும் திறந்து விடுவ்தில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.