18 February 2023

உலகச் சிறுகதைகள் 4 ஜார்ஜ் லூயி போர்ஹே

முதல் முறையாகப் படித்தபோது ஒன்றுமே புரியவில்லை என்றாலும் என்னய்யா இது இத்துனூண்டு கதைல என்னென்னத்தையோ சொல்லி வைத்திருக்கிறான் என்று மிரட்டிவிட்டது. மறுமுறை படித்தபோது கொஞ்சம் புரிந்ததுபோல இருந்தது. இதை இப்போது திரும்பப் படித்து முடிக்கையில், இதற்கு 10 வருடங்கள் கழித்து, 1943ல் எழுதப்பட்ட காஞ்சனையும் அதைப் பற்றி, அத் தொகுப்பின் முன்னுரையில், 'வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களை பயங்காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்' என்று புதுமைப்பித்தன் சொல்லியிருப்பதும் நினைவுக்கு வந்தன. 

ஆனால், மாந்திரீகத்தை வைத்துக்கொண்டு போர்ஹே ஒன்றும் சும்மா வித்தையோ விளையாட்டோ காட்டவில்லை என்பது கொஞ்சம் கவனமாகப் படித்தால் தெரியவரும்.