21 June 2011

வாசகன் நீதிபதியாகட்டும் வக்கீல்கள் அல்ல

சாரு நிவேதிதாவுக்கும் - 21 வயது சிறுமிக்கும் இடையில், முதல் நாளில் இருந்து நடந்த சாட் உரையாடலை எடிட் செய்யாமல் சிறுமியின் பெயரை மட்டும் நீக்கி அப்படியே வெளியிடுவதில் என்ன பிரச்சனை?
20 June 2011

ஈரமற்ற இரும்பு

நீளமான முகம் 
முகம் முழுக்கக் கண்கள் 
கண்முழுக்கத் தூக்கம். 

19 June 2011

கிக்கிரிபிக்கிரி இலக்கியம்

<நீங்க பஸ்ஸு விட்டாலும் கருத்து சொல்லவும் பயமா இருக்கு...முன் ஏரும் இல்லாம பின்னேரும் இல்லாம ஒத்தையா உழுவ முடியாதுங்களே....அதான்> 


எனக்குத் தெரிந்த அளவுக்கு நான் பஸ்ஸு விட்டால் உங்களால முடிந்தவரை நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள். ஏறலாமா கூடாதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? 

கடவுள் நமக்கு நண்பன்

பொதுவாக பிறந்த நாள், பண்டிகைகள் தன்னார்வத்துடன் கொண்டடுவதில்லை. ஃபேஸ்புக்கில் தவறான தினத்தில் வாழ்த்தியவரை திருத்தப் போய் மாட்டிக் கொண்டேன். பிறந்த தினம் அம்மாவின் நினைவிலும் அதன்பிறகு மனைவியின் நினைவிலும் மட்டுமே இருந்துகொண்டு இருக்கிறது. புதிது போடாமலும் வித்தியாசமாக ஏதும் செய்யாமலும் இருப்பதால் அலுவலகத்திலும் நன்பர்கள் மத்தியிலும் தேதி தெரிந்தாலும் அவர்கள் நினைவில் மேலெழும்பாது கடந்துவிடும்.

18 June 2011

உளறுவதெல்லாம் உயர்வுளறல்

”தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் தனியாளுமைக்கும் எழுத்தில் உள்ள ஆளுமைக்கும் தொடர்பிருப்பதில்லை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். அவருடை பேச்சில் நகைச்சுவையே இருக்காது.”

June 16th, 2011

அடப்பாவி!

11 June 2011

ம் என்று ஒரு முறை சொன்னால் போதும்!

அத்துனைப் புத்தகங்களும் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்க, ஒரே எளிய வழி ஸ்கேன் செய்து PDFஆக்குவதே! சம்மதமாய் ம் என்று ஒருமுறை சொன்னால் போதும்! # Notes from the underground…

வரைந்தது பாய் என்பதால் கலையல்ல பாச்சி!

09 June 2011

ஆயோன் பாயிரம் - காவி

வாய்க்கு வந்ததை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தால் உளறல். கைக்கு வந்ததை யோசிக்காமல் எழுதிக்கொண்டிருந்தால் இலக்கியம் மட்டுமல்ல ஆல்ஸோ ஆன்மீக அரச்சீற்றம்.

08 June 2011

ஜெயமோகனின் எழுத்தை ஆராதிப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

தலித்துகளின் உற்ற நண்பர் என்று ஜெயமோகன் அவர்களால் பாராட்டப்படும் ஜெயமோகன் அவர்களின் ‘பல்லக்கு’ கதையை யாரேனும் தட்டச்சு செய்துதர இயலுமா?


<அதிலும் இந்த மாதிரி மாற்றுக் கருத்தைப் பீராய்ந்து அதில் தலித் விரோதத்தைக் ’கண்டுபிடித்து’ தர்மத்தின் தலைமகனாகக் கொந்தளிப்பது தமிழக நடுநிலைச் சாதிகளைச் சேர்ந்த சாதி வெறியர்கள் பல காலமாகச் செய்து வரும் ஒரு கேவலமான உத்தியே அன்றி வேறல்ல. அந்த பருப்பு,சென்ற சில வருடங்களாக வேகாமலாகி விட்டிருக்கிறது. இந்த மனிதாபிமானக் கொந்தளிப்புகளுக்குப் பின்னால் உள்ளது வெறுப்புக்குரிய சாதி வெறியும், அதிகார நோக்கும் மட்டுமே என அவர்களுக்கு இன்று தெரியும்.

05 June 2011

காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பற்றி பிரமிள்

காந்தி திரட்டிய ஜன சக்தியின் அம்சங்கள் எதுவும் இந்த இயக்கத்தில் இருக்கவில்லை. அஹிம்சா யுத்தத்தின் தீவிர நிலைக்கு இவர்கள் தயார் செய்யப் படாதவர்களுமாவர். பெருமளவிற்கு அரசகருமங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பூர்ஷுவா அணி இது. திடீரென எழுந்து நின்ற அப்போதைய பிரச்சனையை அன்றைய சரித்திர கட்டத்தில் கெளரவிக்கப்பட்ட அஹிம்சைக் கருவி மூலம் சந்தித்த திடீர் எதிர்வினை மட்டுமே இந்த இயக்கத்தில் தெரிந்தது. எனவே சிங்கள இனவாதக் கருவியாகத் திரண்டு வந்த காலிப்பட்டாளத்தின் தாக்குதலை இந்த ’அஹிம்சைப் போராளிகள்’ தாங்கி ஸ்தலத்திலேயே காயங்களுடனோ பிணங்களாகவோ வீழ்ந்து கிடக்க முடியாத பலஹீனர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். சிதறி ஓடினார்கள். இது ஒரு பகுதியினரால் அஹிம்சா ஆயுதத்தின் தோல்வியாகக் குறிப்பிடப்ப்டுவதை ஒட்டி இங்கே விபரம் பெறுகிறது. உண்மையில் இது உட்கார்ந்து தெரிவிக்கும் (Sit-in) முறை மட்டுமே ஆகும்.

04 June 2011

இப்படி ஒருவர் இருந்தார் - எல்லாமாக

(கடிதத்தின்) நகல்

அன்பான ராமசாமி,
13.06.86

தங்களுக்குக் க்டிதம் எழுதி அநேகமாக ஒரு மாதம் ஆகிறது என நினைக்கிறேன். இந்த ஒரு மாதத்தில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள் எனக்குள்.

03 June 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்!

CONTACT

Sri Ramacharan Charitable Trust ®
115, P.S.Sivaswamy Salai, Mylapore, Chennai 600004
Phone: 044-24992450
Email: sriramacharan@yahoo.com
Website home url: www.sriramacharan.com 
Video : www.youtube.com/user/sriramacharan
Photos:picasaweb.google.com/sriramacharantrust

ஜெயமோகனின் அறம்

<முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனிதவிரோதக்கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப்பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற்சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால் தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.>

02 June 2011

சுரா 80

jyovram ஜ்யோவ்ராம் சுந்தர் 
சுரா 80 விழா நிகழ்ச்சிக்கு நம் @maamallan சாரைக் கூப்பிடவில்லையா? எகொஇ!

maamallan விமலாதித்த மாமல்லன் 

@jyovram அமைப்புசாரா சுரா வழிபாட்டு அமைப்பு. எங்களுக்குக் கிளைகள் வேறு எங்கும் இல்லை - மனதைத்தவிர.

01 June 2011

பத்மினி கோபாலன்

பெரும்பாலும் மாமிகள். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டிய மாமிகள். அலங்கார பூஷிதைகளாக தலைமுதல் கால்வரை நகை நட்டுகளுடனும் உயர்ந்த உடைகளுடனும் இருந்த மாமிகள். அநேகமாக எல்லோருக்குமே சுகஜீவனம். வாரம் ஒருமுறை கூடி அளவளாவுவதற்காக ஒரு அமைப்பு. இவர்களுக்கு நடுவில் நரைத்த தலையுடன் ஒருவர். கழுத்தில் ஒற்றை மஞ்சள் கயிறு. ஆரம்ப காலங்களின் தயக்க இறுக்கம் தளர்ந்தபின் காதும் மூக்கும் மூளியாய் இருந்தவரைப் பார்த்து ஒரு பெண்மணி கேட்டார்.

கேக்கறனேன்னு தப்பா நெனச்சுக்காதேள்! நீங்க ஏன் நகையே போட்டுக்கறதில்லே?