03 June 2011

ஜெயமோகனின் அறம்

<முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனிதவிரோதக்கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப்பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற்சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால் தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.>

இந்தப் பத்தியின் இறுதிப் பகுதியைப் படித்து 

<தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.>

இணையத்தில் பலரும் கொதித்துபோய் இருக்கின்றனர். 


அய்யனார் இதை BUZZஆக்கிக் கண்டணத்தைத் தெரிவித்ததும். 12 பேர் தம் ஆர்வலர்களோடுப் பகிர்ந்துகொள்ள 28பேர் அய்யனாரின் கண்டணத்தை விரும்பி ஆதரித்து உள்ளனர்.

இந்த எதிர்ப்பையும் ஜெயமோகன் வெகு சுலபமாக தாண்டி விடுவார். இவர்கள் விரும்பும்படியாக ’அரசியல் சரி’யுடன் முற்போக்காக எழுதிவிடுவது தனக்கு எளிது எனவும் ஆனால் எவ்வளவு எதிர்ப்பு வரினும் கிஞ்சித்தும் கவலைப்படாமல், முதல் குவாவில் இருந்தே, மனதின் ’அற’க்குரலில் மட்டுமே தொண்டை கமறக் கூவிக்கொண்டு இருப்பதாகக் கூறி லாவகமாக திரித்துவிட்டு அடுத்த புத்தக / சினிமா வசனம் எழுதப் போய்விடுவார்.

இரண்டொருவர் ஜெயமோகன் சார்பாக வக்காலத்து வாங்கி, அதாவது 

<கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால்> 

என்கிற தொடருடன் தொடர்பு படுத்திப் படித்தால் இப்படித் தோன்றாது, ஜெயமோகன் என்ன சொல்ல வருகிறார் என்று அப்போதுதான் புரியும் என்று வியாக்கியானமும் செய்து இருக்கின்றனர்.

முழுமையாகப் படித்தால் மட்டும் என்ன புத்தரா புன்னகை செய்கிறார்.

இந்திய நகரங்களின் சேரிகளில் வாழ்பவர்கள் யார்? எல்லோரும் தலித்துகளா?ஒருவர் தலித் என்பது அவரது ஜாதியாலா அல்லது அவரது வாழ் நிலையாலா? 

பகலில் ரஷ்யன் கான்ஸ்லேட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து, 87-93களில் ட்ரைவ்-இன் உட்லண்ட்சில் மாலை நேரத்தில் எங்களின் மேஜைகளில் வந்து இணைந்து கொண்ட நாகராஜன் என்கிற பிராமண இளைஞன் வாழ்ந்தது குடிசையில். குடிசை இருந்த இடம் மயிலையின் கூவக்கரை. கருப்பா இருக்கறவன் எல்லாம் தலித் என்பது போல நகரத்துச் சேரிகள் தலித்துகளால் ஆனது என்பது கண்மூடித்தனம். ஏழ்மையால் ஆனது என்பதே எளிய உண்மை. ஆனால் தெருவோர குடிசைகளை வாகனங்களில் கடக்கும் மத்தியதர வர்க்கத்துக் கண்கள், அங்கேயும் டிவி ஆண்டணா தெரிகிறது பார்த்தாயா என வக்கிரப் புன்னகையுடன் சிமிட்டிக் கொள்ளும். இந்த தரத்திலான அரைப் பார்வையிலானதே ஜெயமோகன் அரமாய் அறுத்துக் கொட்டும் அறம்.

இந்த பத்து பாக, பல்விளக்காத தேசப் பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியை,அவரது பார்வையில் பட்டதைப் படமாகப் பிடித்து வெளியிட்டிருப்பதுடன் ஒப்பிட்டாலே,அவரது நம்பகத்தன்மை சந்தி சிரித்துவிடுகிறதே!

<இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம், மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால். இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம்.>

இந்த வரியைப் படித்ததும் தத்து பித்து என விசிலடிச்சான் குஞ்சுகள் செய்யும் ஆரவாரத்தில் காதைக் காபந்து செய்துகொள்வது கஷ்டம். 

முந்தைய பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஜெயமோகன் எழுதுவதைப் போலவே அவரது சீடகோடிகளும் வரித் துண்டங்களை வாசித்து செரிக்காமல் வாந்தி எடுப்பவர்கள்.

பத்தாம் பகுதியின் தொடக்கத்திற்கும், ஒன்பதின் முடிவிற்கும் தொடர்ச்சி உள்ளதா எனப்பார்ப்போம். வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில் முடிகையில்,

<கால்கள் தளர்ந்திருந்தமையால் தசைகள் ‘பிரேக்’ பிடிக்க முடியாமல் வலித்தன.>

பதினாறு வருடத் துயிலைத் தொடராமல் விழித்ததன் பாவம் சும்மா விடுமா? இதெல்லாம் படிக்கவேண்டியது தலை எழுத்து. உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்து, நீங்கள் படிகளில் இறங்கிய அனுபவத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நூறு நூற்றைம்பது பஸ்கி போட்டவனின் தசைநார்கள் முறுக்கேறிக் கொள்ளுமா? தளர்ந்திருக்குமா? பஸ்கி போட்டபின் லிஃப்ட்டில் ஏறிப் போய் படிகளில் இறங்கிப் பாருங்கள். ஒவ்வொரு அடி கீழே படும்போதும் சுள் சுள்ளென காலுக்கு உள்ளே குத்தும். சாதாரணமாய் இருக்கும் போதுதான் தசை நார்கள் தளர்ந்திருக்கும். எழுத்தாளனுக்கு இதெல்லாம் தெரிய வேண்டியது அவசியமா? அதிலும் ஜெயமோகன், தீவிர ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர். 

<வரும் வழியிலேயே நன்றாக இருட்டி விட்டது. நாங்கள் எட்டுப்பேர்தான். இருட்டுக்குள் செல்பேசியை விளக்காக்கித் தட்டுத்தடுமாறி நடந்தோம். இருபக்கமும் பெரிய பள்ளங்கள் அச்சுறுத்தின. வேர்கள் தடுக்கின . ஒரு மறக்கமுடியாத திகில் பயணம்>

இது இருளில் மலை இறக்கம் பற்றிய விவரணை. இருள் இங்கு எப்படி எழுதப்படுகிறது? அதன் அதீதத்தைக் காட்ட வழக்கம் போல உச்ச பட்சமாய், இருட்ட்ட்ட்ட்ட்டாக.

ட்ராமா பத்தாது அங்காடித்தெருவைத் தாண்டு என்கிறது எழுத்தாளனின் கூரைகிழிக்கும் ஆன்மக் குரல்.

<கீழே வந்ததும் எங்கள் ஓட்டுநர்கள் தேடிவந்தார்கள். அவர்கள் விளக்கு காட்டியிருக்காவிட்டால் கார்கள் நின்ற இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் தடுமாறியிருப்போம். ஒருவழியாக வந்து சேர்ந்ததும் மூச்சு வாங்க நின்றுகொண்டோம். மேலே பார்த்தபோது ரிம்போச்சேயின் குகைமடாலயம் வானில் மெல்லிய விளக்கொளியுடன் ஒரு பறக்கும் தட்டுப் போல நின்றது>

மேலே ஒளி அடடே கீழே ஃப்யூஸே பிடுங்கப்பட்ட இருட்டு.

இருட்டை ஃபுல் மீல்ஸோடு திருப்தியாய் எழுதி ஆயிற்றா. அப்பாடி என்று அயர முடியுமோ? எழுத்தாளன் என்றானபின் இதைப் பற்றித் தத்துவம் சொல்ல வேண்டாமா? முக்கும் போதும் தத்துவமாக முக்கினால்தானே ஆளுமையாக இருக்க முடியும்! 

<‘வீரம் என்கிறோம். தன்னுடைய அனைத்தையும் உதறி இப்படி ஒரு மலையில் ஏறி எதையோ தேடி எதையோ நம்பி இத்தனை வருடங்கள் ஒரு மனிதர் வாழ்ந்தால் அதற்கிணையான வீரம் வேறு உண்டா? நாம் அகிம்சையே உருவான வர்த்தமானரை மகாவீரர் என்பது சாதாரண விஷயம் அல்ல’ என்றேன்.>

வக்காளி மலையப் பாத்தாலும் தத்துவம் மொலையப் பாத்தாலும் தத்துவம். 

<என்றேன்.> இது முக்கியம் எட்டு பேரில் யுவன் வேறு இருக்கிறான். அவன் சொன்னதாய் எவனேனும் எடுத்துக் கொண்டுவிட்டால் தன் கதி என்னாவது?

அப்பால,

[மேலும்]

அதுக்கும் அப்பால் பகுதி நெம்பர் பத்து. எங்கே விட்டோம் இருட்ட்ட்ட்ட்ட்ட்டில். பத்து எங்கு ஆரம்பிக்கிறது? 

<இனி நேராக ஊர் திரும்புதல்தான் என்ற எண்ணம், மனதை நிறைவும் கனமும் கொள்ளச்செய்தது. ஆனால் ஊர் மிகத்தொலைவில் இருந்தது. பல மாநிலங்களுக்கு அப்பால்.>

என்னையா இது? பத்தாம் கிளாஸ் பையன்கூட பெட்டரா எழுதுவானே! வந்தது விமானத்த்தில் போகப்போறதும் அதுலதான்னு கூட வாசகனுக்குத் தெரியாதா? ஏதோ அன்னா ஹசாரேவோட நடைப் பயணம் போன ரேஞ்சுல எழுதுகிறாரே! 

செலவுக் கணக்கு காட்ட, க்ஷேத்ராடனம் அழைத்துப் போக, வாசகர்களை தரிசனத்திற்கு அழைத்துவர என்று ஏதேனும் இலக்கிய கம்பெனி புரவலனாகக் கிடைத்தால் அறத்தோடு படுத்து எழுந்து குஜாலாகக் குடும்பமே நடத்தும் அளவிற்கு செட்டிலாகிவிடலாம்.

<இருளில் சுழன்று மறைந்த மலைகளைப்பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம்.>

மலையடிவாரத்தில் காரே கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு இருட்டாம். ஆனால் பயணம் செய்கையில் மலைகள் தெரியுமாம். அதுவும் ஏதோத் தெருவோர மரங்கள் போல சுழன்று மறையுமாம். வண்டிக்கு அருகில் இருப்பதுதானே சுழன்று மறையும்? தொலைதூரத்தில் இருக்கும் மலைகள் சுழன்று மறையும் அளவிற்கு ஜெட் வேகத்தில் நெடுஞ்சாலைக் கும்மிருட்டில் வண்டிகளில் போக இயலுமா? இது தெரிய ஈ ஈஸிக்வெல்டு எம்சி ஸ்கொயர் எல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை. பீச் டு தாம்பரம் ட்ரெய்னில் போயிருந்தாலே போதும். புறநகர் ரயில் வண்டியின் வேகத்திலேயே பல்லாவரம் மலையைக் கடக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது? என்றைக்காவது மலை சுழன்று மறைவதைப் பார்த்திருக்கிறீர்களா? பல்லவன் வைகையில் கூட வயற் சதுரங்களே பம்பரமாகும். மலைகள் ஆகுமா?

முலைகளை மலைகள் என இளம் வயதின் கன்னிமை கழியா கரங்கள் கற்பனை செய்திருக்கக்கூடும். மலைகளை முலைகள் அளவிற்கு சிறியதாக்கி தெருவோரத்தில் பத்தைம்பதடிக்கு ஒருமுறை வந்து சுழன்று மறையும் அளவிற்குக் கற்பனை செய்வதென்பது எமகாதக எழுத்தாளுமைக்கே சாத்தியம்.

ஜெமோவின் இந்த அட்டகாசம் எஸ்.ராவின் ஆடுகளின் நடனத்திற்கு சரியான சவால்.

<மேற்குவங்கம் வந்தோம். ஜெய்கோன்நகரில் அதே ராஜஸ்தானி ஓட்டலில் மதியம் சாப்பிட்டோம். அழுக்கு,குப்பை,தூசி,நெரிசல் எனக் கைவிடப்பட்ட நகர் வழியாக நடந்த போது பூட்டான் ஒரு கனவுபோல நினைவில் புதைந்துசென்றது.>

<கனவுபோல நினைவில் புதைந்துசென்றது.> விதைந்து அதைந்து புகைந்து என்றும் பாடம்.

விஜய டி.ஆர் அவர்களே புயல் வெள்ள அபாயம்! தெரிகிறதா? மேடான பகுதியை நோக்கி ஓடுங்கள். கெட்டியாக யாரையேனும் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஓ! கல்கத்தா மட்டுமில்லை ஒட்டுமொத்த மேற்கு வங்கமும் எல்லா ஊர்களும் கைவிடப்பட்ட குப்பை மேடுதானோ! சரி சரி.

<அங்கே இருந்து ஒன்பது மணிக்கு எங்களுக்குக் கல்கத்தாவுக்கு ரயில். செல்லும் வழியில் மேற்குவங்கத்தைப் பார்த்துக்கொண்டே சென்றோம். வளம் மிக்க ஊர். கேரளம்போலவே பிரமை எழுந்தது. ‘சித்திரங்கோடு குலசேகரம் ரோடு மாதிரி இருக்கிறது’ என்றார் வினோத்>

அங்கு மட்டும் 34 வருடங்களாய் எதிர்க்கட்சி கம்யூனிஸ்டு எதிரிகள் ஆள்கிறார்கள் போலும். வளமாக இருக்கிறதாமே!

பண்டாரப் பயணத்தில் பாதையெல்லாம் காவியாய் இருந்தால்தானே பார்வைக்குக் குளிர்ச்சி! பாரம்பரியமான பண்டாரமா? அடையாளப் படுத்திக் கொள்ள போட்டுக் கொண்ட பட்டையா?

<செல்லும் வழியில் பல சிற்றாறுகள். ஓர் இடத்தில் குளிக்க இறங்கினோம். பெரியநதி தீஸ்தா வருகிறது என்றார் ஓட்டுநர். தீஸ்தா விரிந்து கிடந்தது. வெண்மணல் வெளியில் வழியும் நீலநீர் சரடு.>

<தீஸ்தா விரிந்து கிடந்தது>
<வெண்மணல் வெளியில் வழியும் நீலநீர் சரடு>

அட்றட்றா விசிலட்றா! அண்ணன் என்னமா எளுதறாரு! காப்பிய எழுத்தாளர் கற்பனையெல்லாம் செய்யாம நேர்ல பாத்ததுலையே இப்புடி கோல் உட்றதுதான் கப்பிய சோகமோ? 

ப்ரீஃப்ஃப்ஃப்ஃப்ஃபா எழுதிட்டேன் என்று அலுவலகத்தில் சிலர் ப்ரீஃப் என்றால் நீளம் எனத் தவறாக வாங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ப்ரீஃப்கேஸ் சின்னது சூட்கேஸ் பெருசு. கேஸ்கட்டு மடிச்சி குறுகலா இருக்கறதாலதான் அது ப்ரீஃப் எனப் படுகிறது. ஹிண்டுல ப்ரீஃப்லினு சிறு செய்திகளுக்கான தலைப்பைப் பார் என்று எடுத்துச் சொல்லி விளக்கணும். சதாசர்வகாலமும் சரடு விடுவதையேத் தொழிலாய்க் கொண்டிருப்பவருக்கு சரடு என்றால் என்னவென்று விளங்கவில்லையா? இந்தத் தமிழுக்கு, ஆத்தா மூன்றெழுத்து கோத்தா மூன்றெழுத்து கொம்மா மூன்றெழுத்துன்னு வாய்ப்பாட்டுத் தமிழே அம்ஸமா இருக்கும் போல இருக்கே! பத்திக்குப் பத்திதான் பப்பரப்பே என்று நினைத்தால், இப்போது அடுத்தடுத்த வரிகளுக்கே வந்துவிட்டதே!
தீஸ்தாவில்
இந்த போட்டோவையும் போட்டுட்டு <மாலை சிவந்தடங்கும் நேரம்> னு எழுதினா கப்ஸாவா இல்லியா?

< எங்குமே இரண்டடிக்கு மேல் நீர் ஓடவில்லை.> அப்போ இவங்கள்ளாம் ஜட்டிக்குள்ள மண்ணு போவ, தரைல கொட்டையிடிக்கக் குந்திகினு தபஸ் பண்றாய்ங்களா? எய்த்தாலர்னா இன்னா வோனா எய்தலாம் அட்லீஷ்டு படமாச்சும் போடாம இர்ந்துருக்கலாமில்லியா? இன்னா நா ஸொல்றது.

அட்த்தது இன்னும் ஸூப்பர்

<கொடிமரம்முன் விழுந்து கும்பிடுவதுபோல கும்பிட்டுத்தான் தீஸ்தாவில் குளிக்கவேண்டும்> இன்னா மாமே குகுகுனு ரைமிங்கா இன்னோரு ’கு’வும் போட்ருந்தா எம்மா நெல்லா இருந்திருக்கும்? இப்பிடி ஏமாத்திட்டியே! ஸொம்மா ஸொல்லக் கூடாது, பின் நவீந்த்துவத்துலையும் ஸொல்லாமெ ஸொல்லிப் பூந்து வெள்ளாட்ற மாமே!
கல்கத்தா  ஆபாச மஞ்சள் நிற டாக்சி
மச்சி உன்க்கு கர்நாநிதி புடிக்காதுங்கறத்துக்காவ மஞ்சாக் கலர் டாக்சியும் புடிக்காதா? 

அப்போ அமெரிக்காவுல ஓட்ற டாக்சில்லாம் என்னாக் கல்ரு? அமெரிக்கா போனப்போ நான்மர்ப்பா நான்மர்ப்பானு சப்ளாக் கட்டையும் கையுமாவே இருக்கேண்ட்டு லாஸ் வேகாஸ்லாம் இட்டுக்கிணு போவ்லியா? இது இஞ்சி மர்ப்பா அது அமெரிக்க மர்ப்பா அவ்லதான்.
நியூயார்க்

அப்பால நம்ப புல்லுவெளி தேசத்துல ஓட்ற மஞ்சா வண்டில்லாம் என்ன கல்ரு?
மெல்போர்ன் - ஆஸ்திரேலியா

எப்பிடி மாமே நீ பத்திரிகைலாம் நட்திக்குறேன்றே, ஆனா இப்பிடி எய்தின மேட்ருக்கு சேம்சைடு கோல் போட்றாப்புல படம் வெக்கிறே! இன்னா சர்னலிஸம் இது?
<காலையில் கல்கத்தாவின் பிரம்மாண்டமான சேரிகள் நடுவே குப்பை போன்ற வீடுகள்,குப்பை போன்ற மனிதர்கள், குப்பை போன்ற வண்டிகளைக் காட்டியபடி ரயில் வந்து நின்றது.>

பாஸ் கட்டணக் கழிப்பிட போர்டுக்குது. அது கலீஜா இல்லாம புச்சா வேறக்குது. ரோடு நெல்லாவேக்குது. நீ எய்திக்கிறதப் பாத்தா கல்கத்தா ஜனொ மொத்தமு ஏயாம் ஒலகொம் கேரெக்டருங்க மேரியே கல்கத்தா தெருவெல்லாம் திரியறாப்புலத் தோணிச்சி. கட்சில போட்ருக்குற பட்தப் பாத்தா கைரிச்சா தவிர ஆல் கிளீன். அதுகூட நம்பி இர்க்குற லச்சக் கணக்கான குடும்பங்களுக்காகன்னு காரத் ஸொல்றாரு பாஸ்.

கசகச கொசகொசங்கற ரோடாட்டம் தெர்லியே பாஸ். அல்லாரும் தொளதொளன்னு பிரீயாதான <மாலை சிவந்தடங்கும் நேரம்>த்துல நடக்குறாப்புல மண்ட பொளக்குற வெயில்ல நடக்குறானுங்க? கண்ணுக்குக் குளிச்சியா, லாங்குல ரெண்டு லோக்கல் ஃபிகருங்க கூட வர்து பாரு. 

<எங்களுக்கு மாலை நான்கு மணிக்கு விமானம். அதுவரை தங்க இடம் வேண்டும். ஒரு விடுதியறைக்காக அலைந்தோம். கடைசியில் அறைகிடைத்தது, ஆயிரம் ரூபாய். விசித்திரமான ஒரு சந்துக்குள் காற்றோ வெளிச்சமோ புகாத அறை. ஆனால் ஒன்பதுபேர் குளித்து உடைமாற்ற அது போதும்>

<ஆயிரம் ரூபாய்> எவனோத்தான குடுக்கப் போறான் நீ ஏன் ஆங்கறே!

ஒம்போது பேரை ஒண்ணா பாத்தா சுபாஸ் சந்திர போஸ்கூடத் தலைக்கு நூற் ரூவா போட்டு மீதிய டிப்ஸுக்கு அட்ஜஷ்ட் பண்ண மாட்டாரா இதுல்லாம் ஒரு கொறையா மாமே!

ஒம்போது மலையேறிப் பண்டாரங்க குளிச்சா எம்மாந் தண்ணி செலவாவும்? எல்லாரும் ஹிந்து நான்மரப்பாஸ் வேற, மல்டி நேஸ்னல் தயாரிக்குற டாலர் அளவுக்கு அவன் சோப்புல்லாம் புடிக்காதே!ஆளாளுக்கும் எதையெதையெல்லாம் போட்டுத் தேச்சிக் குள்ச்சிங்களோ! அடுத்தட்த்து அத்தினி பேரு குள்ச்சா, அப்பால அந்த பாத்ரூம்பு சேரிய விட நாறி இருக்குமே! அதெல்லாம் கணக்குப் பண்ணினா ஆயிரம் ரூவா ரீஜெனபிள்தான்.

<வேறெந்த இந்தியநகரத்திலும் இந்தக் கொடும் வறுமையைக் காணமுடியாது. கை ரிக்‌ஷாக்கள்,தெருச்சிறுவர்கள். தெருவிலேயே வாழும் பெரும் சமூகம் இங்கே உள்ளது. காலை ஒன்பது மணிக்கு நம் அண்ணாசாலை போன்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் மீன்கறி சமைத்தார்கள். சாப்பிட்டார்கள். தூங்கினார்கள். குளித்தார்கள். மேம்பாலங்களுக்கு அடியில் நம்பவே முடியாத அளவுக்கு அழுக்கும் குப்பையும் நிறைந்த கடைகள் செறிந்திருந்தன. ஒரு நிலத்தடிப்பாதையில் இறங்கினேன். நான்கடவுள் படத்தின் பாதாளம் போல ஒரு இடம். குப்பைகள்,சிறுநீர்,மலம் நடுவே பிச்சைக்காரர்கள். குழந்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருந்தன.>

அந்தப் படம்லாம் போடுங்க பாஸ். வரலாற்றைத் தாண்டி நிற்கப்போகிற எழுத்தால இனிமே இந்த நாட்ல கம்யூனிஸம்னு ஒரு நாயும் பேசவிடாம பண்ணிடலாம். அது சரி காவிக்கலர் கங்கையோட கொங்கை பளிங்கு மேரி பளப்பளன்னு இருக்குதா பாஸ். நான் பாத்ததில்லே கொஞ்சம் படம் காட்டுங்க பாஸ்.
பாட்னாவில் கங்கை 03.06.11 ஹிண்டு

ஓட்டலுக்கு ஆட்டுச்சடலம்
திர்பரப்புல எப்புடிங்கண்ணா, ஆடுமாடு கோழி எல்லாமே லைவாதான் பரிமாறுவாங்களா? 
கொலை!
பூட்டான்ல உரிச்சி கொண்டு போனா கொலைங்கறே! ஓ மாடு கோமாதா லச்சுமிங்கறதலையா?

கல்கத்தால உரிக்காமக் கொண்டு போனா டெட்பாடிங்கறே! கம்னீஸ்ட்டுக் கல்கத்தாங்கறதாலையா?

<கல்கத்தாவின் தெருக்கள் வழியாகச் சுற்றிவந்து வசந்தகுமார் அதன் விரிந்த சித்திரத்தைக் காட்டினார். அறுபதுகளில் சென்னையில் காதுக்குறும்பி எடுக்கவும் காலில் முள் எடுக்கவும் ஆட்கள் இருந்தார்கள், அவர்கள் இல்லாமலாகி முப்பதாண்டுகளாகிவிட்டன, கல்கத்தாவில் இன்றும் அவர்கள் இருக்கிறார்கள் என்றார். சாலைகளில் கைவண்டி இழுப்பவர்கள், சாலையிலேயே வாழ்பவர்கள் என ஏராளமான புகைப்படங்களை எடுத்திருந்தார்.>

தோடா மோனோ டோன்ல நாம்ப மத்திரமே பேசினா ஒருத்தனும் நம்பமாட்டான்னு ரிலீஃபுக்காக வசந்தகுமாரா? அவனுக்கு 80ல மெட்ராஸ்லத் தெரிஞ்ச ஒரே எடம் ராஜா அண்ணாமலைபுரத்துல ஆஸ்பெஸ்டாஸ் கூரை(?) போட்ட கொஞ்சம் மரங்களுக்கு நடுவுல இருந்த வண்ணநிலவனோட வீடு. உட்டா அசைடுக்கு மின்னேடி லே அவுட் ஆர்ட்டிஸ்டா வேலைபாத்த ஏதோ ஒரு பத்திரிகை. 57ல பொறந்த அவனுக்கு அறுபதுகளின் சென்னை தெரியுதாமா? எங்க எங்கிட்ட சொல்ல சொல்லு பாப்போம். 

<காதுக்குறும்பி எடுக்கவும்> இப்ப வரியா சத்ரபதி சிவாஜி டெர்மினஸுக்கு எதுர்த்தாப்புல இருக்கற ரொட்டுல எட்டுப் பத்துப் பேரு கொட்டை தெரியக் குந்திகிணு எதுர பேண்ட் சர்ட்டோட ரீஜெண்டா குந்திகினு இருக்கறவனுக்கு காது கொடஞ்சிணு இருப்பான். பால் தாக்ரேவின் பாம்பேன்னா பரவாயில்ல? அதுவே கல்கத்தாவுல செஞ்சா கசுமாலம்.

நிஜத்திலேயே இத்துனை நெருஞ்சி முள்! இவரது புனைவுப் புண்ணாக்குகளுக்குள் இருக்கும் எலிப்புளுக்கைகளை எண்ணி முடியுமா?

தமிழ் நாட்டில், அப்பன் பெயர், எல்லோருக்கும் இனிஷியலாய் சுருங்கியே இருக்கும். ஆனால் பெரும்பாலான துணைவிமார் இணைவிமாருக்குப் பிறந்த பிள்ளைகள் தங்கள் பெயரோடு அப்பன் பெயரை முழுமையாக இணைத்தே எப்போதும் சொல்லிக்கொள்வார்கள். அதிகாரபூர்வமாய் தங்களிடம் இல்லாததை அடிக்கடி சொல்லி உறுதிபடுத்திக் கொள்வதுதானே அவர்களின் ஒரே கதி. அது போலத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் பக்கம் பக்கமாய் அறம் அறம் என்று எழுதித் தள்ளிக் கொண்டு இருப்பதும்.