09 June 2011

ஆயோன் பாயிரம் - காவி

வாய்க்கு வந்ததை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தால் உளறல். கைக்கு வந்ததை யோசிக்காமல் எழுதிக்கொண்டிருந்தால் இலக்கியம் மட்டுமல்ல ஆல்ஸோ ஆன்மீக அரச்சீற்றம்.

தாடியும் பீடியும் ஜோடியாக இருந்தது போய் சமகாலத்தில் கோடியும் சேர்ந்து கொண்டது. 

காஷாயம் சகல சமூக நோய்களுக்கும் கஷாயம் என்று கண்மூடிப் பின்தொடர்வது தீவிரமான காமெடி.

கோடி கோவணம் கட்ட உபயோகப்பட்டது ஒருகாலம். கோவணம் கோடிகளைக் கட்ட உபயோகப்படுவது சமகாலம்.

அடுத்தமுறை ராம லீலைக்கு ஆயிரம் இளைஞர்கள் ஆயுதத்துடன் போவார்கள். சாமியார் சார் ஆயுதத்துடன் விளையாடுவது கிருஷ்ணனின் லீலை அல்லவா?

சகல சமரசங்களையும் செய்துகொண்டு ஆயுள் முழுக்க ஆயுதத்தோடு போராடிக் கொடிருந்தால் சம்சாரி. வென்றுவிட்டதாய்ப் போஸ் கொடுத்தால் சாமியார்.

தாடி வெளியில் தெரிந்தால் காவிக்கு கம்பீரம். மறைந்திருந்தால் சல்வாருக்கு அழகு. 

காவிக்காய் வளர்த்த தாடியை சல்வாரால் மறைக்க முடியுமா? # வேறு வழியில்லை போடு புர்க்கா!