22 March 2016

மகாமுத்ராவில் செல்ஃபி எடுத்துக்கொள்ள நேர்ந்த கதை

நேற்று விடியற்காலை ஆள் தூக்கும் வேலை. வேலை முடித்துத் திரும்பும்போது 7 மணி. QMC சிக்னலில் நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குச் சென்றால் என்ன என்கிற யோசனை வந்தது. நேரே செல்ல பச்சை விழவே, சரி வேண்டாம் போ என வண்டியை பெஸண்ட்நகர் நோக்கி முடுக்கினேன். 

10 January 2016

சுயமரியாதை

விமர்சனம் வேறு. அவதூறு செய்வதென்பது வேறு. நக்கலாக இருப்பதன் காரணமாய் விமர்சனம் ஒருபோதும் அவதூறு ஆகிவிடாது. அடிப்படையோ எவ்வித ஆதாரமோ இன்றி செய்யப்படுவது கட்டாயம் அவதூறு மட்டுமே.

27 November 2015

சிந்தித்தார் சந்தித்தார் சந்திசிரித்தார்

கலைஞர்: உங்க கட்சில நீங்க ரெண்டே பேர்தானா கவுன்சிலர் கூட குடுக்க முடியாதேப்பா உங்குளுக்கு

27 September 2015

சிறுகதையா இந்த வாழ்க்கை


முச்சந்தியொன்றில் நெடு நேரமாய் நின்றிருந்தேன். இரவு ஏறிக்கொண்டே இருந்தது. எதிர்ப்புறமிருந்து நண்பர்கள் வரவேண்டும். வந்துகொண்டு இருக்கிறோம் என்று கைபேசியில் சொல்லிக்கொண்டு இருந்தார்களே தவிர வந்தபாடில்லை. பக்கவாட்டில் திடீரென ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். திக்கென்றது. எப்போது எங்கிருந்து அங்கு வந்து நின்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நின்றிருந்தது வசீகரித்தது. அவர் காலருகில் டிரம் போன்ற ஒரு தோல் கருவி இருந்தது. 

26 September 2015

வாங்க வாங்க

IFB வாஷிங் மெஷின், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் இடுகல்லாகி நெடுநாளாகிவிட்டிருந்தது. வேறு வாங்க வேண்டும் என்று சொல்லத் தொடங்கியே மாதங்களாகிவிட்டிருந்தன. வேலை காரணமாய் நேரம் கிடைக்காமல் நான் முதலில் பார்த்துவிட்டு உன்னை அழைத்துச் செல்கிறேன் என்கிற வாக்குறுதி எனக்கே புளித்துப் போகும் அளவுக்கு தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 

20 September 2015

சம்திங் சம்திங்

சார் பிசியா இருக்கீங்களா ரெண்டு நிமிசம் பேசலாமா 

சொல்லுங்க வீட்லதான் இருக்கேன் 

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா

நான் சொன்னேன்ல அது மாதிரியே லெட்டரை வாங்கிக்க மாட்டேன்னுட்டான் EB ஆபீஸ்ல 

16 September 2015

முறுக்கலும் முயங்கலும்

1989ல் M80. 1997ல் சேத்தக். 2003ல் TVS விக்டர். 2008ல் TVS Flame. 2012ல் Honda ட்விஸ்டர். இத்தனை வண்டிகள் மாறினாலும் மாறாத காரியம் வருடம் தவறாமல் நியூலான் போட்டு விடுவது. 

10 September 2015

தும்பிக்கையான் தாள்பணிந்து நம்பிக்கையோடிரு

க்ரியால ஷோபா சக்தியோட புக்கு போட ராமகிருஷ்ணன் ஆசைப்படறார் போல இருக்கே 

05 September 2015

பரிசு

கோட்டைக்கும் எக்மூருக்கும் தி நகருக்குமாகவென்று மாறி மாறி அலச்சலிலேயே கழிந்தது இன்றைய தினம். அலுவலக விழாவுக்காக நிறைய தோழர்கள் கோவைக்குச் சென்றுவிட்டதால் அநேகமாய் யாருமில்லை. அலைந்ததன் சோர்வு அதன் காரணமாய்க் கூட அதிகமாய்த் தெரிந்திருக்கலாம். வீட்டிற்குச் சீக்கிரமே கிளம்பிவிட்டேன் ஆறரை மணியளவில். கூடவே இருந்தது, செடி கதையின் முதல் வரைவை இழைத்திழைத்து இன்று முழுமையாக்கிவிடலாம் என்கிற எண்ணம்.

22 August 2015

ஒரு நாள்

நேற்றிரவு 2 மணியளவில் தூக்கம் போய்விட்டது. காலை 6.20க்குதான் தூங்கப்போனேன். 9.04க்கு நன்றாக இருக்கிறது என்று அலுவலகத் தோழரிடமிருந்து வந்த வாழ்த்து SMSல் விழிப்பு வந்தது. கண்ணாடி அணிந்து கைபேசியைப் பார்த்தால் காலை 7.39க்கே முதல் வாழ்த்தை அனுப்பியிருந்தார். 

20 August 2015

எடிட்டர் சுஜாதா என் கதையை எடிட் பண்ண முயற்சித்த கதை

1989ல் நிழல் கதையை எழுதி நீளமாகப் போய்விட்ட அதைப் பிரசுரிக்கச் சிறு பத்திரிகை எதுவுமின்றிச் சும்மா கிடந்தது. 90-91ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு சிறப்பிதழ் கொண்டுவருவதாகக் கூறிக் கதை கேட்டார். அதை அனுப்பி வைத்தேன்.

11 August 2015

படம்

அலுவல் ரீதியாக, முக்கியமான அந்த அரசு அலுவலகத்துக்குச் செல்லவேண்டி இருந்தது. அடையாள அட்டையைக் காட்டினாலும் அவ்வளவு சுலபத்தில் அனுமதி கிடைக்காத அலுவலகம். சந்திக்கவிருக்கும் அதிகாரியிடம் அடையாள அட்டை கொண்டுசெல்லப்பட்டு, அவர் ஒப்பிய பின்னரே அனுமதிக்கப்படும் அளவுக்குக் கெடுபிடி நிறைந்த அலுவலகம். கெடுபிடிகளுக்குக் காரணம், பிரமுகர்களின் சிபாரிசுத் தொல்லையாகவும் இருக்கலாம் அல்லது சில்லுண்டிகளால் உருவாகும் ஏஜென்சி பயமாகவும் இருக்கலாம்.