27 November 2015

சிந்தித்தார் சந்தித்தார் சந்திசிரித்தார்

கலைஞர்: உங்க கட்சில நீங்க ரெண்டே பேர்தானா கவுன்சிலர் கூட குடுக்க முடியாதேப்பா உங்குளுக்கு


கோவன்: இல்லீங் வீராச்சாமி மருதையன் முகுந்தன் ஏழர டாக்டர் பேஷண்ட்டுனு இன்னும் ஏழெட்டு பேர் இருக்காங்க. இதுபோக அசுரன் கசடன் முசுடன்னு 700 800 பேர் புனைபெயர்ல இருக்காங்க. இந்த உடன் பிறவா பிறப்புகள் ஒவ்வொன்னுக்கும் இணையத்துல இருக்குற ஃபேக் ஐடியைக் கணக்குப் போட்டா கிட்டி முட்டி உடன்பிறப்புகளோட எண்ணிக்கைகிட்ட வந்துருமுங்க. 

கலைஞர்: ஓ அப்படியென்றால் இதயம் இனித்தது கண்கள் பனித்தன. எதையும் தாங்கும் இந்த இதயம் உங்களைத் தாங்காது போய்விடுமா. ஹனீபா மாதிரியே உங்களுக்கும் நல்ல குரல் வளம் இருக்கிறது. நல்லா பாடறீங்க. கழக கூட்டங்களில் தேர்தல்வரை, இனி தங்களையே புக் பண்ணவேண்டும் எனது செயற்குழு முடிவு செய்துவிட்டது என ஸ்டாலின் ஆணை பிறப்பித்து விடுவார். காங்கிரசுடன் கூட்டணி அநேகமாய் உறுதியாகிவிட்டது. ராகுல் பற்றிய பாடல்களையும் பாடி பயிற்சி செய்து கொள்ளுங்கள். வேண்டுமென்றால் அவரது தாத்தா பாட்டியிலிருந்து தொடங்கி நானே கூட, நேரு இரண்டெழுத்து இந்திரா நான்கெழுத்து என்று 68-69லிருந்து ஆகிவந்த நாட்டுப்புற வசனப் பாடல்களை இயற்றித் தருகிறேன் 

(என்னப் பெத்த அப்பா - இப்பக்கூட
ராகூலுக்கே லாலி பப்பா 
- என்கிற பேத்தாஸை சன்னமாய் முணுமுணுக்கிறார் ஸ்டாலின்) 

கோவன் பாடல் பயிற்சி: 

ஆ ம்க்ரும் ம் ஆ...
கதகேளு கதகேளு 
நிதி சொல்லும் கதகேளு 

மிடாஸ் நிதி உடான்ஸ் நிதினுப் பாடினேன் - அதைப் 
பாடினதால் ஜெயிலுக்குள்ள வாடினேன்

கருணாநிதி கலாநிதி தயாநிதி 
உதயநிதி இன்பநிதி மகாநதி 

மைண்ட் வாய்ஸ்: 

இதையெல்லாம்
பாடவேண்டி வந்தது என் விதி - இது
வீராச்சாமி மருதையன் செஞ்ச சதி