16 February 2023

உலகச் சிறுகதைகள் 2 பீட்டர் ஹாக்ஸ்

பொதுவாகவே உருவகக் கதை என்பது, குட்டிக்கதை போல அளவில் சிறிதாகவும் மூடிய வாய்க்குள் நாக்கைத் துழாவிக்கொண்டு எழுதப்பட்டதைப் போன்று மெல்லிய நகைச்வையுடனும் உள்ளே இருக்கிற விஷயம் படிப்பவனின் முதிர்ச்சிக்கு ஏற்ப வேறு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு இடம் கொடுக்கிறவகையிலும் இருக்கும். இதற்கு ஈசாப் பரமஹம்சர் முல்லா நஸ்ருதீன் என்று நிறைய உதாரணங்களைக் கூறலாம். 

உலகச் சிறுகதைகள் 1 ரேமண்ட் கார்வர்

கருத்தைச் சொல்வதல்ல கதை. கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களோடு, தன்னைப் பொருத்திப் பார்த்து, வாசகனே கருத்தை உருவாக்கிக்கொள்ள வைப்பதுதான் கதை.

இராசேந்திரசோழனின் சாவி

எந்த அரசியலைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சி எங்கேயாவது கண் சிமிட்டிவிடும்.

வண்ணநிலவனின் சாரதா

துயரங்களை அடுக்குவதே தப்பில்லை. அதன் காரணமாகவே அது  வணிக எழுத்தாகவும் ஆகிவிடாது.

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

15 February 2023

ஆபீஸ் - அத்தியாயம் 5 முதல் மாற்றல்

கல்கியில் வந்தது போகஅவனுடைய சிறுகதைகள்கணையாழிகவனம் பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகிஇலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது. 

ஆபீஸ் - அத்தியாயம் 4 முதல் சம்பளம்

நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்குவெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு

ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்

சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது

ஆபீஸ் - அத்தியாயம் 2 ஆரம்பம்

பாண்டிச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிற பெண்கள்,

ஆபீஸ் - அத்தியாயம் 1 முடிவு

பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.

10 February 2023

மொக்கைகளே விழித்தெழுங்கள்

'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான்.  பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'

- சாரு நிவேதிதா பெயர்  

08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

மூன்று சூப்பர் ஸ்டார்கள்

45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம்  என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா. 

02 February 2023

இழைதலும் இளித்தலும்

பிரபலம் என்பதற்காக மட்டுமே எனக்கு எந்தக் காலத்திலும் எவரையும் பிடித்ததில்லை. அப்படியே ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்திருந்தாலும் சிவாஜி கண்ணதாசனில் இருந்து ஜெயகாந்தன் பிரமிள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி வரை கமல் ரஜினி உட்பட பிடித்தும் பிடிக்காமலும் போயிருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன. 

01 February 2023

இன்றைய மெட்ராஸ் பேப்பரில்...

PUCL பி வி பக்தவச்சலம் ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னதாக நுங்கம்பாக்கம் நூலகத்திற்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர்களில் ஒருவரான மனஓசை தேவராஜன் பொது அக்கறை குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது.